Showing posts with label பெண்கள் பகுதி. Show all posts
Showing posts with label பெண்கள் பகுதி. Show all posts

Thursday, 9 June 2011

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்....


பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம்.  அல்குர் ஆ‎ன்:4-4
    பிற மதங்களில் இ‏றைவைன [‏இறைவனி‎ன் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை எ‎ன்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பி‎ன்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

Thursday, 2 June 2011

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி...


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.

நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.

"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும்

Saturday, 28 May 2011

பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...

  • உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
  •  உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால்நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
  • அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
  • உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.

Friday, 27 May 2011

மூடி மறைப்பேன் என்னை !



குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

நன்றி: யாசர் அரஃபாத்
நன்றி: harbour-popularfront.blogspot.com

Wednesday, 25 May 2011

கணவனுக்குக் கட்டுப்படுதல்...


ஒரு பெண் எப்போதிருந்து கணவனுக்கு கட்டுப்படவேண்டும்?
ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்;மனைவியரான அவர்கள்மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகளும் காணப்படு கின்றன. ஆண்களுக்கு அவர்கள்மீது ஓர் படித்தரம் உள்ளது. (பகறா: 228)
ஆண்கள் பெண்களைவிட வும் சக்திபடைத்தவர்களாவர். அல்லாஹுத்தஆலா அவர்களில் சிலரைவிடவும் மேன்மையாக்கி சிலரை வைத்திருக்கிறான். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்காக செலவளிக்கின்றார் கள். (நிஸா: 34)
எனவேஒரு பெண் நன்மையான விடயங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டியது அவளது கடமையாகும். பாவங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் கட்டுப்படக்கூடாது. நபி (ஸல்) அவர்களிடம் பெண் களில் சிறந்தவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்அவளைப் பார்த்தால் கணவன் சந்தோசப் படக்கூடிய அவன் ஏவினால் கட்டுப்படக்கூடிய பெண்ணா வாள் என்றார்கள். (நஸாயி)
ஒரு பெண் கணவனின் வீட்டில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு கட்டுப்பட தொடங்க வேண்டும். அந்த வீட்டை வசதியுள்ளதாக ஆக்க வேண்டும். அல் லாஹ் மிக அறிந்தவன்.