Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday, 19 October 2011

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?


எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக  இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர்.  அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால்  அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.
இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய  மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் ...

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் 
இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி... போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

Wednesday, 28 September 2011

தீவிரவாதம் முஸ்லிம்கள் தனி உடைமையா? டாக்டர் ஜாகிர் நாயக் யின் வீடியோ தொகுப்பு

மஸ்ஜிதுல் அக்சாவின் வரலாறு!


உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சாவாகும்.
புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பல மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.