Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, 27 October 2011

1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை: பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்!


உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக, பிரிட்டன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 1,900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என, அறிவித்துள்ளது.

IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!

இந்திய தொழில்நுட்ப கழகம், ( IIT ) கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடைபெறம் நுழைவுத் தேர்வான ஐஐடி-ஜேஇஇ 2012ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது.

ஐஐடியில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். ஐஐடிக்கள் மட்டுமல்லாமல் வேறு பல கல்வி நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு முடிவினை தங்களது மாணவ சேர்க்கைக்கு எடுத்துக் கொள்வதால், மாணவர்களிடையே இந்த தேர்வுக்கு அதிக மதிப்பு உள்ளது.

Saturday, 6 August 2011

பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 12‌ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம்


பிளஸ்2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். 
பிளஸ் 2 சிறப்பு தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத `எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.