Thursday, 28 July 2011

நில மோசடிப் புகார்‌ : விரை‌வி‌ல் கைதா‌கிறா‌ர் கே.எ‌ன்.நேரு


தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில மோசடிப் புகார் இன்று பதிவு செய்யப்பட்டதை‌த் தொட‌‌ர்‌ந்து ‌விரை‌வி‌ல் கைதாவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

‌
திருச்சி காவ‌ல்துறை‌யின‌ர் ஆணைய‌ர் அலுவலகத்துக்கு வந்த திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஒய்.சாலமன் தேவராஜ் என்பவர், கே.என்.நேரு, திரு‌ச்‌சி மாநகராட‌்‌சி துணை மேயர், தி.மு.க நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது‌ம் காவ‌ல்துறை‌யி‌ல் இ‌ன்று புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர்.

இ‌ந்த புகா‌‌ரி‌ன் பேரில் அவர்கள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்தன‌ர்.கே.எ‌ன்.நேரு உள்பட 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்ய கூடாது எ‌ன்று மதுரை உய‌‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற ‌‌கிளை தடை நே‌ற்றுட‌ன் முடிவடை‌ந்ததா‌‌ல் அவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

No comments:

Post a Comment