கடந்த ஒரு சதாப்த காலமாக அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் மத்தியதரைக் கடலில் மேற்கொள்ளும் “Reliant Mermaid” என்ற பயிற்சிகளில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் துருக்கி இஸ்ரேலுடன் பங்குகொள்ள மறுத்தது வருகின்றது .
கடந்த ஆண்டில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை
காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது
தாக்குதல் நடத்தி 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்களை படுகொலை செய்தது.
இதை தொடர்ந்து துருக்கி , இஸ்ரேல் உறவு
முறுகல் நிலையை அடைந்தது. இஸ்ரேல் துருக்கியிடம் மன்னிப்பு கோரவேண்டும்,
காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். இவைகள் இடம்பெற்றால் இஸ்ரேலுடன்
சுமூக உறவு மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று துருக்கி பிரதமர் அர்துகான்
தெரிவித்து வருகின்றார். இஸ்ரேல் பிடிவாதமாக தான் செய்வதுதான் சரி என்று
தெரிவித்து வருகின்றது.
No comments:
Post a Comment