
கடந்த வியாழக்கிழமை மூஸா லேன் லியாரி பகுதியில் உள்ள Qasr-e-Ruqaiya எனும் கட்டிடம் திடீரென இடிந்து வீழ்ந்தது. கட்டிட உரிமையாளர்கள் மூன்று பேர் இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.300,000 நிவாரண உதவி வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த கட்டிடத்தில் வசித்து வந்த ஏனைய பொதுமக்களுக்கு அருகில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், இன்னமும் தமக்கான உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment