ஒவ்வொரு மாதமும் ஈரானில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணை இந்தியா பெறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணை தேவையில் 12 சதவீதத்தை ஈரான் பூர்த்தி செய்கிறது.
இந்த கச்சா எண்ணைக்காக ஈரானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இந்தியா கொடுக்காமல் உள்ளது. 5 பில்லியன் டொலர் அளவுக்கு இந்தியா கடன் வைத்துள்ளது.
இந்த கடன் தொகையை உடனே தர வேண்டும் என்று ஈரான் பல முறை கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தியா சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ஓகஸ்டு மாதம் முதல் கச்சா எண்ணை தர மாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாட்டின் எண்ணை அமைச்சகம் இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் இந்த அறிவிப்பு நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment