
ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படைகள் போரிட்டு வருகின்றன. இந்நிலையில், "ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்க படை வீரர்கள் சிறிது, சிறிதாக வாபஸ் பெறப்படுவர்.
2014ம் ஆண்டில் ஆட்சி அதிகாரம், ஆப்கன் அரசிடம் முழுவதும் ஒப்படைக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, அமெரிக்க புலனாய்வுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டேவிட் பீட்டரஸ், நேட்டோ படை கமாண்டர் பொறுப்பை லெப்டினன்ட் ஜெனரல் ஜான் ஆலெனிடம் ஒப்படைத்தார்.
இரு நாட்களுக்கு முன், ஆப்கன் தேசிய ராணுவத்திடம், பாமியன் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை நேட்டோ படைகள் ஒப்படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment