Monday, 5 September 2011

ஊருக்கெல்லாம் ஒரு நீதி தனக்கு ஒரு நீதியா: அவசரத்திலும் அவசரம்!

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென் மீதான கண்டனத் தீர்மானம் அடுத்த வாரம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கிறார்.

தான் நிரபராதி என்றும், வழக்குரைஞர் தொழில் மூலம் மிக அதிகமான வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த தனக்கு இத்தகைய முறைகேட்டில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தவறுதல் மனிதனுக்கு சகஜம்தான் என்றும், அரசு நிர்வாகத்தின் ஊழல் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று உலகுக்குக் காட்டிக் கொள்வதற்காக என்னை பலிகடா ஆக்குகிறார்கள் என்றும் தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெய்டியில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட உருகுவே இராணுவம்?! :



ஹெய்டியில் ஐ.நாவின் அமைதிப்படையினர்  பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதிமூன்று வயது சிறுவன் ஒருவனை, ஐ.நா அமைதி படையில் உள்ள உருகுவே நாட்டை சேர்ந்த ஐந்து இராணுவ வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக எழுந்த  இக்குற்றச்சாட்டை அடுத்து உடனடியாக அவர்களை நாட்டுக்கு மீள் அழைத்துள்ளது உருகுவே.

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. அவர் மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.