
பதிமூன்று வயது சிறுவன் ஒருவனை, ஐ.நா அமைதி படையில் உள்ள உருகுவே நாட்டை
சேர்ந்த ஐந்து இராணுவ வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக
எழுந்த இக்குற்றச்சாட்டை அடுத்து உடனடியாக அவர்களை நாட்டுக்கு மீள்
அழைத்துள்ளது உருகுவே.
இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று, ஐ..நா அமைதிப்படையின் உருகுவே நாட்டு கடற்படை தளபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் அடிப்படையில் உருகுவே இந்நடவடிக்கைய எடுத்துள்ளது.
குறித்த வீரர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என உருகுவே பாதுகாப்பு செயலர் தெரிவித்துள்ளார். ஹெய்டியின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக அங்கு நிலை கொண்டிருக்கும் ஐ.நா அமைதிப்படையில் சுமார் 1,200 உருகுவே படை வீரர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
பாலியல் துஷ்பிரயோகம், அல்லது தவறான நடத்தை தொடர்பில் ஐ.நா அமைதிப்படை Zero Tolerance Policy ஐ கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment