Thursday, 28 July 2011

லோக்பால் மசோதா: பிரதமருக்கு விலக்கு-ஊழல் செய்து 7 ஆண்டுகளாகி விட்டால் விசாரணை கிடையாது மக்களை ஏமாற்றும் மசோதா!

டெல்லி : அன்னா ஹஸாரே உள்ளிட்டோரின் பரிந்துரைகளை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு லோக்பால் மசோதாவை மாற்றியமைத்து விட்டது. பிரதமர், நீதித்துறைக்கு மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான்!

நிலப்பறிப்பு : மாநிலத்தில் இம்மோசடி குறித்து, குவிந்துவரும் புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் காவல்துறையில் தனிப்பிரிவை, அரசு ஏற்படுத்தும் அளவுக்கு சூடுபிடித்துள்ள விவகாரம். 

இதுவரை, 2,400 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 196 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசியல்வாதிகள் தொடங்கி, அதிகாரிகள், கிரிமினல்கள் வரை நீளும் புகார்கள் காவல்துறையினரையே மிரளவைத்துள்ளன. 

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

ஆளுக்கொரு நீதி அதுதான் இன்றைய உலக நியதி !!

பலஸ்தீன் என்ற சுதந்திர நாடு உருவாவதற்கு அமெரிக்கா ஐ.நா. பொதுச் சபையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதேவேளை  மேற்குலகின் ஆயுதமான கிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒரு சனிக்கிழமை அன்று சூடானில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட  தெற்கு சூடான் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் “வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்” என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் வழிமொழிய வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி வெற்றிபெற “நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம்,” என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் வாழ்த்துரைக்க ஐநாவின் 193வது உறுப்பு நாடாக அங்கீகாரம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக!

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

நார்வேயில் கைது செய்யப்பட்ட ஆண்டேர்ஸ் மூலம் உலக பயங்கரவாத தொடர்புடைய ஹிந்துத்துவா!

புதுடெல்லி :  நார்வேயில்  இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

வரம்பு மீறல்கள்! அ.இ.அ தி.மு.க அரசு என்ன செய்யப்போகிறது பொறுத்திருந்து பார்போம்

வரம்புமீறிய, அனுமதியில்லாத கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அவசரச் சட்டம் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. 
 
முந்தைய திமுக ஆட்சியில், தொடர்ந்து நான்காவது முறையாக, ஜூலை 27, 2010-ல் அமல்படுத்தப்பட்ட இந்த அவசரச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டதால், அனைவர் மனதிலும் எழும் அடுத்த கேள்வி, "சட்டவிதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் எழுப்பப்பட்ட இந்த வரம்பு மீறிய கட்டடங்கள் இனிமேலாவது இடிக்கப்படுமா' என்பதுதான்.
 

சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு- நாளை புதிய முதல்வர் தேர்வு

பெங்களூர் : கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு கூடுதல் டிஜிபி ஜாபரின் வீட்டில் கிடைத்த சிடி-க்கள் : வெளிச்சத்திற்கு வருமா சில உண்மைகள்

சென்னை : முன்னாள் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் வீட்டில் நடத்திய ரெய்டில் பல ஆடியோ சிடிக்கள் சிக்கியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனவாம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்த சேட், அவரது பேச்சையே ஒட்டுக் கேட்டு டேப் செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கந்தஹாரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் நகர மேயர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இன்று  நடைபெற்ற  தற்கொலைத் தாக்குதலில், அந் நகர மேயர்  பிதா குலாம் ஹயிதர் ஹமீத்  கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மக்கள் குறைகேட்கும் நிகழ்வொன்றில் இவர் கலந்து கொண்டிருந்த போதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும்,

பிரிட்டன் : கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தமைக்கு லிபியா கண்டனம்

லிபிய போராட்டக்காரர்கள் ஒரே அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் என பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு லிபியா கடாபி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடாபியின் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல். பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன்" என்றார்.

குங்ஃபு வாலிபால் பார்த்திருக்கிறீர்களா? – வீடியோ

சிறிய பந்து, வெறும் கால்கள், மார்பு மற்றும் தலையை மாத்திரம் உபயோகிக்க முடியும் கைகளால் விளையாட முடியாது.
இதுதான் Sepak Takraw என்ற விளையாட்டின் சட்டம். எப்படி விளையாடுவது?
உலகின் மிக கடினமான விளையாட்டாக இது  இருக்குமோ என வர்ணிக்கிறது
thepostgame.com

Tuesday, 26 July 2011

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன் - v


பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

1929  ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை  என்ற கோசத்தை
வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,P.426.)

தாடி வைத்திருந்ததால் பொறியியல் கல்லூரியில் இடம் கொடுக்க மறுப்பு.

பாட்னா: கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாடு பார்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்கள் என்றாலே எல்லா மாண மாணவிகளையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும், அவர்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதற்காகவே சீறுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏவுகணைகள் உருவாக்கும் பாகிஸ்தான் - ஜெட் விமானங்கள் தயாரிக்கும் இந்தியா

24 புதிய ஏவுகணைகளை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்கவுள்ளது இந்த ஆண்டாகத்தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகா: லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக சிவராஜ் வி.பாட்டீல் நியமனம்

பெங்களூர்: கர்நாடக லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீலை நியமிக்க ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போதைய நீதிபதியான சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்குப் பின்னர் புதிய நீதிபதியாக பாட்டீல் பதவியேற்பார்.

சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கு: சிபிஐ வழக்கறிஞர் விலக உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சியை அதிலிருந்து விலகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விலகிக் கொண்டார்.

பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முஸ்லிம் அமைப்புகளை மட்டும் குறிவைக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் உள்பட அனைத்து சாத்தியக் கூறுகளை குறித்தும் விசாரணை நடத்தவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்துத்துவாவை தப்பவைக்க நினைக்கும் புலனாய்வு துறைகள்!

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

ஜியோலாங் நீர் மூழ்கி கப்பலை கடலுக்கடியில் இயக்கி சீனா சாதனை

கடலுக்கடியில் 3 மனிதர்களுடன் சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

ஜியோலாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதில் நீர்மூழ்கியை சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

Monday, 25 July 2011

உ.பி : சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி: முலாயம் முடிவு

உ.பி.சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முலாயம் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகிற 2012 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகா : பா.ஜ.க.அரசின் அராஜக போக்கை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் கண்டன ஆர்ப்பாட்டம்


மங்களூர் : மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரித்தும் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்து நகரில் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது.
 

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் 6 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக டெல்லி போசாரிடம் கைது

டெல்லி: டெல்லியில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கிரேட்டர் கைலாஷ்-2 பகுதியில் ஒரு பிளாட்டில் தங்கியிருந்து இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தலைபோகிற விஷயம்...!


முதலில் இதைப் படியுங்கள்

- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

கர்நாடகா: எதியூரப்பாவுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவுமா குழப்பத்தில் முதல்வர்

பெங்களூர் : தான் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் தனது மகன் ராகவேந்திரா அல்லது தனக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபா கரந்லஜேவைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கீசியர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்


சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.

தி.மு.க. தலைவராக கருணாநிதியே நீடிப்பார்: பொதுக்குழுவில் முடிவு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூரில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று கூடியது.

இதில், கருணாநிதி தலைமை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக, தலைமைப் பதவி குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்பட்ட நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

மரணித்து போய்விட்ட சீன மனிதம் : சிறுவன் வதைக்கப் படும் கொடூரக் காட்சி

பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கு  அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும் உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளனர்.

புற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி

புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன்

மூத்த வழக்கறிஞரான ரோஹின்டன் நாரிமன் அடுத்த புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட உள்ளார்.
இதுவரை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்பிரமணியம், வழக்கு ஒன்றில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது தம்மை அவமதித்த செயலாகும் என்று கூறி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அப்பதவிக்கு ரோஹின்டன் நாரிமனை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை : மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினுக்குப் பதில், புதிய கமிஷனராக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் பி.ஏவான எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தன் படையை வாபஸ் பெற்ற பின் ஆசிய நாட்டிற்குள் அமெரிக்காவின் போலீஸ்: பாகிஸ்தான் நாளிதழ்

இஸ்லாமாபாத் : அமெரிக்க செயலர் ஹில்லாரி கிளிங்டன் இந்தியாவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா-பசிபிக்கிற்கு காவலாளியாக நியமித்துள்ளது என்று கூறியுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளா : நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு

கோழிக்கோடு:சுதந்திர தினத்தையொட்டி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரள மாநிலத்தில் 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச்செயலகம் தீர்மானித்துள்ளது.

புனலூர்,சாவக்காடு, மஞ்சேரி, தாமரச்சேரி ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

நார்வே:கூட்டுப்படுகொலை நடப்பதற்கு முன்பே திட்டத்தை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது

ஓஸ்லோ : நார்வேயில் நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பே கிறிஸ்தவ வலதுசாரி பயங்கரவாதி ஆண்டேர்ஸ் ப்ரவிக் போலியான பெயரில் தனது திட்டத்தை விவரிக்கும் குறிப்புகளை விரிவாக விளக்கும் 1500 பக்கங்களை கொண்ட ஆன்லைன் புத்தகத்தை வெளியிட்டதாக நார்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் முதல் புல்லட் ரயில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் நின்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் மீது, மற்றோரு புல்லட் ரயில் மோதியதில் 35 பேர் பலியாகினர். மேலும் 191 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் ஹாங்ஹூ நகரில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள பியூஷுவுக்கு நகருக்கு D3115 என்ற புல்லட் ரயில் நேற்று புறப்பட்டது. வென்ஷியு நகர் அருகே வந்த போது மின்னல் தாக்கியதால் மேற்கொண்டு இயங்க மின்சாரம் இல்லாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.

தியோபந்த்: மோடியின் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கிய துணைவேந்தர் பதவி நீக்கம்

தியோபந்த் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டியதால் பிரச்சனையில் சிக்கிய தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முகம்மத் வஸ்தான்வி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

சவுதி அரோபியாவில் சிக்கி தவிக்கும் 25 தமிழர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ராஜீவ்காந்தி, வீரப்பன், சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கணேஷ் ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். 

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!

அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். இவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒரிஸ்ஸாவில் தலித் எம்.எல்.ஏ, மீது தீண்டாமை கொடுமை!

புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரப்பூர்வமான கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்டலில் சிக்கினார் கேட் மிடில்டன்

யூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் விவகாரத்தில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவியார் கேட் மிடில்டன் மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, 23 July 2011

நடுவானத்தில் மோதவிருந்த விமானங்கள் நூலிழையில் தப்பின!

பாட்னா: டெல்லியிலிருந்து கவுஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் எதிரே வந்துக்கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.

ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு சர்வதேச விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவை நேருக்கு நேர் வந்து மோத இருந்த வேளையில் இரு விமானிகளும் திறமையாக செயல் பட்டதால் அந்த விபத்திலிருந்து இரு விமானங்களும் தப்பின.

போலி கல்விச் சான்றிதழ்: பிரச்சனையில் ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா

வாரனாசி: யோகா குரு பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் அன்னா ஹஸாரே போன்று ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். பின்னர் தனது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஒரு புறம் பாபா ராம்தேவ் உலக அளவில் உண்ணாவிரதத்தால் பிரபலமாக மறு புறம் சிபிஐ அவரது கோடிக்கணக்கான சொத்து விவரங்களைத் தோண்ட ஆரம்பித்தது.

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்

கடந்த 2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள் உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தியாவின் இரு (வேறுபட்ட) இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்

பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று, இந்தியாவில் இஸ்லாமியக் கருத்துக்கள் குழப்பத்தில் உள்ளன.  குழப்பத்துக்குக் காரணம், இன்றைய சூழ்நிலையை இஸ்லாமை எப்படிப் பின்பற்றுவது என்பதாகவே இருக்கின்றது.

இந்திய ராணுவத்தின் வெறித்தனம்​: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு ​- கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஸ்ரீநகர் : ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி (தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ

ஜெய்ப்பூர் : ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.