Friday, 22 July 2011
அரசு பஸ்களில் டிக்கெட் வழங்க நவீன மின்னணு கருவிக்கு ரூ.10 கோடி அனுமதி: ஜெயலலிதா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்
நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான
முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக,
நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு
வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே
போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
தமிழ்
நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான
முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக,
நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு
வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே
போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.மூன்றாண்டு பி.எல்.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில்
நடத்தப்படும் மூன்று ஆண்டு சட்டப் (பி.எல்.) படிப்புக்கான கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாண்டு பி.எல். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லோக் ஆயுக்தவும் லோக்பாலும்!
குழாயடிச் சண்டை என்று ஒன்றுண்டு. ஒரு குடம் தண்ணீரை யார் பிடிப்பது என்கிற சண்டையில் இரு வீட்டு ரகசிய விவகாரங்கள் நாற்சந்திக்கு வரும். அந்த மாதிரியான குழாயடிச் சண்டையைத்தான் இப்போது மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே சூடாகக் கிளப்பியுள்ளன பாஜகவும் காங்கிரசும்.
பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!
உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
புளியங்குடியில் பள்ளிக்கு தீ வைப்பு 2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
Thursday, 21 July 2011
பேஸ்புக்கை கூகிள் பிளஸ் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

கூகிள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் ஸ்டேட்டஸையும் அப்டேட்
செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுக்களின் திடீர் கண்ணிவெடித் தாக்குதல் - 8 காங்கிரஸார் பலி
சட்டீஸ்கரில் மாவோஜிஸ்டுக்களின் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வி: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு
சமச்சீர் கல்வி தொடர்பாக
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க
மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு
மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில்,
அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக்
கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும்
வரும் 22ம் தேதிக்குள் மாணவர் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப்
புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்
இந்தியாவின் மக்கள் தொகை நெரிசல் மிகுந்த நகரப்பட்டியலில் சென்னை மாநகர் 2வது இடத்தில் உள்ளது.
புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.
புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.
காரக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் கடந்த ஒரு வருட பணிகள்
அன்பார்ந்த வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக சேவைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்கள் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு வருடம் நமது பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். சமூகத்தின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் அனைத்து இந்திய மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக சேவைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்கள் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு வருடம் நமது பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். சமூகத்தின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் அனைத்து இந்திய மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது.
இஷ்ரத் ஜஹான்:எஸ்.ஐ.டிக்கு நான்காவது தலைவராக ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமனம்
அஹ்மதாபாத்:இஷ்ரத்
ஜஹான் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை
விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு(எஸ்.ஐ.டி)
நான்காவது தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வர்மா
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் ஒரே வருடத்தில் நான்கு தலைவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 20 July 2011
தமிழக ஜனத்தொகை 7 கோடியே 21 இலட்சம்
தமிழகத்தில் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை வளர்ச்சி 27.16 சதவீதமாக
அதிகரித்துள்ளது என்று தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்
எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது
நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் கமிஷனர் ஜே,கே. திரிபாதி தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திரா துமலபள்ளியில் இருப்பதாக தகவல்:
ஆந்திர மாநிலம் துமலபள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் சுரங்கம் உலகம் மிகப்பெறும் யுரேனியம் சுரங்கமாக மாறும் வாய்ப்பிருப்பதாக, அணு சக்தி தூறை செயலர் சிறீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செயற்கோள்
உதவியுடன் இயங்கும் நவீன ஜிபிஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி
பணிக்கு செல்லாமல் போலீசார் டிமிக்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டு போட எம்பிக்களுக்கு லஞ்சம்..அமர் சிங்கை விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாடாளுமன்றத்தில் நடந்த
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க் கட்சி
எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக ராஜ்யசபா
எம்பியும், முன்னாள் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர் சிங்கிடம்
விசாரணை நடத்த ராஜ்யசபா சபாநாயகரான துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி
அனுமதி அளித்துள்ளார்.
முல்லா ஓமர் கொல்லப்படவில்லை - தாலிபான்கள் மறுப்பு
கடந்த மே மாதம் தாலிபான்
இயக்க தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால்
தற்போது, அந்த செய்தி தவறானது என்று தாலிபான் இயக்கத்தினர் மறுக்கின்றனர்.
காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது
காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன்
காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க
நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம்
சிறைப்பிடித்துள்ளது.
முர்டாக் மீது திடீர் தாக்குதல்
தொலைபேசி
ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றக் குழுவின் முன்பு
ஆஜராகியிருந்த நியூஸ் ஆப்திவோல்டு செய்தி நிறுவன உரிமையாளர் முர்டோக்(79)
மீது ஆசாமி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறக்கூடாது: இந்தியா
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு ஹால்டிக்கெட் அனுப்பப்படுகிறது
ஒருங்கிணைந்த
சார்நிலை பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வருகிற 30 ந் தேதி
நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து
விண்ணப்பதாரர்களுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது.
ஃபயாஸ் உஸ்மானியின் மரணத்தைக் குறித்து விசாரணை நடத்த எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு வழக்கு
தொடர்பான விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின்
மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என சோசியல்
டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
Tuesday, 19 July 2011
தமிழகத்தின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்: ஆய்வுத் தகவல்
தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்
வசிப்பவர்கள்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Posts (Atom)

































