Saturday, 20 August 2011
காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : 6 பேர் பலி
Friday, 19 August 2011
Thursday, 18 August 2011
பயங்கரவாதிகள் அணிவகுப்பு நடத்த தடை இல்லை!
கோழிக்கோடு: சுதந்திர தினத்தன்று
கேரளாவில் சுதந்திரத்திற்கு அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத கூட்டமான
ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தியுள்ளது. அதற்கு கேரள
காவல்துறையும் அனுமதி அளித்ததோடுமட்டுமல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்
கொடுத்துள்ளது.
கேரளாவில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட்
திருவனந்தபுரம்: ஆயிரக்கணக்கான
பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் வீதியில் இறங்கி கேரள அரசுக்கெதிரா
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு காரணமும் இன்றி சுதந்திர
தினஅணிவகுப்பிற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
Monday, 15 August 2011
முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை...
சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லையின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முந்தைய ஆட்சியின் போதும் கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள் அரங்கு மைதானங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆளும் அரசுகளின் இத்தகைய அராஜக போக்கு இந்திய அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் குடிமக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு... தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும் ,சிறுபான்மை விரோத போக்கை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி நெல்லைமேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானிதுள்ளோம் .சுதந்திரம் நமது பிறப்புரிமை ;
அதை எவர் தடுத்தாலும் விட மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறை சாற்ற ,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை பறை சாற்ற,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலை கடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
Saturday, 13 August 2011
சுதந்திர தின அணிவகுப்பு : உற்சாகத்தில் மேலப்பாளையம் !
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த மூன்று வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை மேலப்பாளையத்தில் வைத்து நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதனை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A .ஹைதர் அலி அவர்கள் நமது நிருபர்களிடம் கூறியதாவது ” சுதந்திரம் என்பது நமது உரிமை அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நாம் இப்பொழுது 65 -வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம். கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3- ஆண்டுகளாக சுதந்திரதின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடமும் ஆகஸ்டு 15 ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம்.விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் பக்கிரிகள்..
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது.
இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
Subscribe to:
Posts (Atom)



