Saturday, 16 July 2011

ஒலிம்பிக்கும் சில மர்ம விடயங்களும்.


லண்டன் மாநகரம் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தற்போது மும்முரமகாக ஆயத்தமாகி வருகிறது. இதில் மிக முக்கியமான அம்சமான ஒலிம்பிக் தீப்பந்தமும் அதைச் சுமந்த ஓட்டமும் 2012 மே 18 இல் இடம்பெற இருக்கிறது. இது ஒரு ஒலிம்பிக் சம்பிரதாயமாக பின்பற்றபடுகிறது.

டெல்லி போலீஸ் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி


புது தில்லி : நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய வோட்டுக்குப் பணம் அளித்த விவகாரத்தை விசாரிப்பதில் தில்லி போலீஸ் காட்டும் மெத்தனப் போக்கை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 3 பாஜக எம்.பிக்கள் தங்களுக்கு லஞ்சப் பணம் அளிக்கப்பட்டதாக ரூ. 1 கோடியை மக்களவைத் தலைவர் முன்பாகக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

கறுப்புப் பண சிறப்பு விசாரணை குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

புது தில்லி : கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

சென்னை : நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-12 செயற்கைக்கோளுடன் சென்றுள்ளது. 

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.

பேச்சின் ஒழுங்குகள்

நற்குணம்


 ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

அரபு நாடுகளின் கிளர்ச்சிகண்டு நடுங்கி கிடக்கிறார்கள் ஒபாமாவும் புஷ்ஷும் நோம் சோம்ஸ்கி கருத்து


நோம் சோம்ஸ்கி நாம் வாழும் காலத்தில் உலகில் வாழும் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர். 82 வயது அமெரிக்கரான இவர் ஆங்கில மொழியியல் அறிஞர், தத்துவ போதகர், உரிமைப் போராளி என பன்முகத் தன்மை கொண்டவர்.

ஆப்கானிஸ்தான் பெண் விமானிகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி

ஆப்கானிஸ்தான் நாட்டில் விமான படையில் பெண்கள் சேர தொடங்கியுள்ளனர். அவர்களில் சோர்யாசலே உள்பட 3 பெண்கள் விமானி ஆக பணிபுரியும் தகுதி பெற்றுள்ளனர்.

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில்-சென்ஸஸ் அறிக்கை

புதுடெல்லி:இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில் என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை வளர்ச்சியில் போதுமான குறைவு ஏற்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் : எஸ்.ஐ.டி யின் புதிய தலைவராக ஜெ.வி.ராமுடு நியமனம்

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு புதிய தலைவராக ஜெ.வி.ராமுடு நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி:மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என அவ்வமைப்பின் பொது செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி உதவித்தொகை பெருவதற்கான வழிகாட்டி முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பாரங்கள் வினியோகம் மற்றும் பூர்த்தி செய்யும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 

மோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு!

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

 அப்புகார் மனுவில்,  ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணையதள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

அழகிரியின் வலது கை ரவுடி அட்டாக் பாண்டி கைது!

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரில் ஈஸ்வரர் லால் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அத்துமீறி கைப்பற்றினார் அட்டாக் பாண்டியனின் கூட்டாளி திருச்செல்வம்.  கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் ஈஸ்வரர் லால் இத்தனை நாளும் புகார் கொடுககாமல் இருந்தார். 

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது.

1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பே புகை கிளம்பியது.  எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் கடந்த மாதம் (ஜூன்) 9-ந் தேதியில் இருந்தே அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

மும்பை குண்டு வெடிப்பு SDPI கடும் கண்டனம்!


புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Thursday, 14 July 2011

பிரதீப்குமார் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

புதுதில்லி : முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப்குமார் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று (ஜுலை 14)  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு Connect with

சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஆந்திராவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நலத்திட்ட உதவிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஏழை எளிய மக்களுக்கும், காய்கறி மற்றும் பழம் வியாபாரிகளுக்கும் நான்கு சக்கர தள்ளு வண்டியை இலவசமாக விநியோகம் செய்துள்ளது. சுய தொழில் தொடங்குவதற்கு உதவியாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டது. நெல்லூர், கர்னூல், யெமிஞ்சூர், அதோனி மற்றும் நன்டியால் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.

எகிப்து கலவரம் : 700 போலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்

எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி

பெங்களூர் : ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

புதிய மாநில அலுவலகம் திறப்பு விழா

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் சென்னை மண்ணடியில் 12-07-2011 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

மாநிலத்தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Wednesday, 13 July 2011

பேஸ்புக்கில் App ஐ பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்கும் முறை

பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேஷன்கள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றில் சில உங்களின் உண்மையான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.

அவற்றை தவிர்ப்பதற்கு கீழ்வரும் முறையை பயன்படுத்தலாம்.

சவுதி அரேபியா : இந்திய தூதருக்கு அந்நாட்டு மன்னர் விருது

ரியாத் : சவூதி அரேபிய நாட்டிற்க்கான இந்திய தூதருக்கு அந்நாட்டின் உயரிய கவுர விருது நேற்று (ஜுலை 12) வழங்கப்பட்டுள்ளது.

இந்திய-சவூதி அரேபிய நாடுகளிடையே நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த அந்நாட்டிற்கான இந்திய தூதர் தல்மிஸ் அகமதுவுக்கு , சவூதி மன்னரின் உயரிய விருதும், சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டன.

ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு பதிவு ரத்து

காஸ் இணைப்பு உள்ளவர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஸ் இணைப்பு உள்ளவர்கள் மண்ணெண்ணெய் முறைகேடாக பெறுவதை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

"யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்கு எந்த மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்'

மும்பை, ஜூலை 12: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பதில் அளிக்கலாம். இதை மும்பை நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உறுதி செய்துள்ளது. 

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை : தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலருக்கு பதவி உயர்வும், இடமாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: (முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ஹைதராபாத்:  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா:பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின இடத்தை கைப்பற்றும் பார்ப்பன கும்பல்

டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களை பாதியளவுக்குக்கூட நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு போகும் ‘பார்ப்பன கொள்ளை’ நடைபெற்று வருகிறது.

செல்போன் : காதலில் சீரழியும் இளைஞர்கள்


பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். 

மஹாராஷ்ட்ரா:ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்த நவீன பிச்சைக்காரர்கள் 43 பேர் கைது

அவுரங்காபாத்:உலகம் நவீனமயமாகும்போது நாங்கள் என்ன மோசமானவர்களா? என கேள்வி எழுப்பும் விதமாக ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பிச்சை எடுத்த 43 இளம்பெண்கள் மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் நகரில் கைதுச்செய்யப்பட்டனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு:ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை : தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் : தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, சமச்சீர் கல்வி திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுத்த முயற்சிக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

லிபிய அதிபர் கடாபி பதவி விலகுகிறார்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்

லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. அங்கு பெங்காசியை மையாக கொண்ட போராட்டக்காரர்களின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.

வந்தே மாதரமும் ஹிந்துத்துவா ஒரு பார்வை!

மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முஸ்லிம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில்  பார்ப்பன மேல் சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். 

கென்யாவில் வறட்சி அகதிகள் முகாமில் தவிக்கும் மக்கள்

கென்யாவில் உள்ள தாதாப்பில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ள முகாமுக்கு நேற்று தண்ணீர் லாறி வந்தது. இந்த தண்ணீர் லாறியை பார்த்ததும் முகாமில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு புன்னகை எட்டிபார்த்தது.

Tuesday, 12 July 2011

ஆப்கான் அதிபரின் சகோதரர், மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை

ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் இளைய சகோதரர் அஹமது வாலி கர்சாய் அவரது மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் குஜராத் கட்சிகள்

ஆமதாபாத் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டன.

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பஸ் மறியல்

முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக வழக்கமாக திறந்து விடும் தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசாத் நகர் நிஜாம் தீன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். 

உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?

உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.  7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80% வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான்.  ஆனால் 0.2% வீதமான மக்கள் 3500 மொழிகள் பேசுகிறார்கள்.  இவற்றை இறந்து வரும் மொழிகள் என கூறுகிறார்கள்.

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,

ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி?

AddThis Social Bookmark Button
வேகம் குறைந்த கணினி மற்றும் இணைய இணைப்பை கொண்டவர்களும் வேகமாக ஜிமெயிலை
திறப்பதற்கு ஏற்ற வகையில் கூகிள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்கென ஒரு ஜிமெயில் தீமை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

ரஷ்யாவை அண்மித்த தடாஸ்டான் நாட்டின் வொல்கா ஆற்றில் சுற்றுலா படகொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கியதில், அதில்  பயணம் செய்தோரில் 129 பேர் நீரில் முழ்கி பலியாகினர்.

செல்போன் , டிவிடி, சிடி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 14.5 வீதம் உயர்வு

கடந்த கால ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக அரசுக்கு கடன் உள்ளதால் அரசுக்கு வருமானம் வரும் வகையில்

டிவிடிக்கள், சிடி, செல்போன் உ‌ள்‌‌ளி‌ட்ட பொரு‌ட்களு‌க்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய மத்திய அமைச்சரவை விபரங்கள்!

மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை மாற்றி அமைக்கப்படுவதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மாலை ஐந்து மணியளவில் பதவியேற்கவுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள விபரங்கள் :

சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: உச்சநீதிமன்றம்


புதுதில்லி : அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று சத்துணவு வளர்ச்சி கழகம் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பேன்!

புனே: எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான எனது தாக்குதல் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் தனக்கு எதிரான நிந்தனைகளுக்கு பதிலளிக்கையில் பதிலளித்தார் அவர்.

மாட்டை வைத்து கட்சி நடத்தும் பாரதிய ஜனதா!

பாரதிய ஜனதா கட்சி நடிகை ஹேமமாலினியை கண்டித்து தஞ்சையில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் தமிழர் வீர விளையாட்டு பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சூடான்: எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரம் எங்களுடையதே ஒமர் அல் பஷீர்

சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரத்தின் மீது அத்துமீறி தெற்கு சூடான் அதிகாரம் காட்டக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.