Thursday, 7 July 2011

துருக்கியில் 4 துணைப்பிரதமர்கள் பதவியேற்பு

அங்காரா: துருக்கி நாட்டில் நான்கு துணைப்பிரதமர்கள் உள்பட புதிய கேபினட் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். துருக்கி நாட்டின் 61-வது பொதுத்தேர்தல் கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது.



முலாயம் சிங் யாதவ் மற்றும் அசாருதீன் எம் பி கைது

சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், காங்கிரஸ் எம்பி முகமது அசாருதீனும் உத்தரப் பிரதேச போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
மொராதாபாதில் தடை உத்தரவு நடைமுறையில் உள்ள வன்முறை பாதித்த கிராமத்துக்கு செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முக‌ப்பரு, கரு‌ம்பு‌ள்‌‌ளி‌க‌ள் மறைய...

கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய...

ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முக‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் ‌நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

மகளிர் தொடர்பில் ஐ நா அறிக்கை


மகளிர் குறித்த ஐ நா அறிக்கை வெளியாகியுள்ளது
மகளிர் குறித்த ஐ நா அறிக்கை வெளியாகியுள்ளது
உலகெங்கும் உள்ள பெண்கள் முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, அதே நேரம் அவர்கள் வேலையிடங்களில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும், வீட்டில் தொடர்ந்து வன்முறைகளுக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளது. 
 

நெருக்கடியில் தயாநிதி மாறன்!

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.


பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி? - படங்கள்



ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!!

மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர். 
 
2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிறிஸ்தவ சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்தியன் ரயில்வே! புதிய இ- டிக்கெட் சேவை ஆரம்பம்!

இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மாணவியை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய ஆசிரியை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா (6) . இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்) கடும் ஆத்திரம் அடைந்தார்.



சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.

ஸ்ட்ராபெரியும் அதன் மருத்துவக்குணமும்!!

வாஷிங்டன்:  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.

அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ராகுல் காந்தியை பார்த்து பயப்படும் பாஜக!

ராம்பூர், உ.பி: அடுத்த ஆண்டு உ.பி மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாயாவதி தலைமையிலான அரசுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆக்கம் ஊட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரையை துவக்கியுள்ளார்.

விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் மாயாவதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதை பெரும்பாலும் அரசியல் ஆதாயமாக மாற்றும் முயற்சியில்தான் ராகுல் அலிகருக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் நிலம் அபகரிப்புக்கு உள்ளானதா ?இதோ..புகார் செய்ய தொலைபேசி எண்கள்

உதகை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நில அபகரிப்பு மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அப்பாவி பொதுமக்களிடமிருந்து நிலங்களை அபகரித்த நிலக்கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி பொலிசார் தனி காவல் படை அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று வருகின்றனர்.

அன்னை தெரசாவின் உருவம் பொறித்த புதிய 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி

அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 5 ரூபாய் நாணயம் ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

5 ஆண்டு பி.எல். படிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது கவுன்சிலிங்

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பி.எல். படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று (ஜுலை 6) பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்குகிறது.

9ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு: 599 இடங்கள் காலியாக உள்ளன

சென்னை : மருத்துவ கல்லூரிகளில் 599 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங்கில் 1724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.



சூடானிலிருந்து சவுதிக்கு சென்ற அகதிகள் கப்பல் மூழ்கி 197 பேர் பலி.

அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.



தமிழகத் திட்டங்களுக்கு ரூ. 23,535 கோடி ஒதுக்கீடு: மத்திய திட்டக் கமிஷன் அறிவிப்பு

டெல்லி: தமிழகத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடாக ரூ. 23,535 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவும் நடத்திய பேச்சுவார்த்தையில் இது இறுதி செய்யப்பட்டுள்ளது.



கேரள மாணவி பலாத்கார வழக்கு: நாளை அடையாள அணிவகுப்பு- போலீஸ்

நாகர்கோவில்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கேரள மாணவி பலாத்கார வழக்கில் குமரி கான்டிராக்டர் மணிகண்டன், கேரள மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ், கோவை மின் வாரிய ஊழியர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் உள்பட சுமார் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 65 பேர் கொண்ட பட்டியலை தனிப்படை போலீசார் தயாரித்துள்ளனர்.

சீனாவில் ஃபேஸ்புக்கிற்கு தடை! விலைக்கு வாங்க சீனா திட்டம்! மக்கள் எதிர்ப்பு

பேஸ்புக் இணையத்தளத்துக்கு தடை விதித்துள்ள சீன அரசு அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட் பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.

சிரியாவில் மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச குற்றவியல் கோர்ட்டு முன் விசாரணை நடத்தவேண்டும்: பொது மன்னிப்பு அமைப்பு வேண்டுகோள்

சிரியாவில் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச குற்றவியல் கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கான சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.



Wednesday, 6 July 2011

சர்வதேச நிதியத்தின் தலைவராக லாகர்ட் பதவியேற்பு

வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் நேற்று பதவியேற்றார்.

சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்தார்.

Tuesday, 5 July 2011

நியமன உறுப்பினர் சிந்தியா பிரான்சிஸ்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை, ஜூலை 4: தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக ஆங்கிலோ-இந்தியரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (56) நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.  மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மயக்கவியல் துறை நிபுணராக சிந்தியா உள்ளார். 

நில மோசடி: எடியூரப்பாவிற்கு மீண்டும் சிக்கல்

பெங்களுரூ: சிக்மகளூர் மற்றும் மைசூர் மாவட்டங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது புகார் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள் அ‌ங்‌கீகார‌ம் ர‌‌த்து- த‌மிழக அரசு‌க்கு உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

1974ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு ஆர‌ம்‌பி‌க்க‌ப்ப‌ட்ட மெ‌ட்‌ரி‌க்குலேச‌ன் ப‌‌‌ள்‌ளிக‌ளி‌ன் ‌‌அ‌ங்‌கீகார‌த்தை ர‌த்து செ‌ய்ய‌க்கோ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் 4 வார‌த்‌தி‌ல் ப‌தி‌ல் அ‌ளி‌க்குமாறு த‌‌மிழக அரசு‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கே.எ‌ன்.நேரு ‌மீது நில‌ம் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு புகா‌ர்

நில‌‌த்தை ஆ‌க்‌கிர‌‌மி‌ப்பு செ‌ய்து‌வி‌ட்டு த‌ன்னை ‌மிர‌ட்டுவதாக முன்னாள் ‌தி.மு.க. அமைச்ச‌ர் கே.என்.நேரு, அவரது சகோதர‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ‌மீது காவ‌ல்துறை‌யி‌ல் புகா‌ர் ‌அ‌ளி‌க்க‌ப்ப‌ட்‌டு‌ள்ளது.
திருச்சி மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் மாசானமுத்துவிடம் திருச்சி சிந்தாமணி வி.என். நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் எ‌ன்பவ‌ர் புகா‌ர் மனு ஒ‌ன்றை கொடு‌‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் இந்திய உளவுப் பிரிவுகள் விசாரணை

தமிழக மீனவர்களை பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்திய உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி மத்திய அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டனர். திங்கட்கிழமை 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர். தமிழக மீனவர்களை பிடிக்க வரும் இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் இருந்து கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளி்ட்டவற்றை வைத்து என்ன செய்வது என்று யோசனைகள் வர ஆரம்பித்துவிட்டன.

துனிஷிய மாஜி அதிபருக்கு மேலும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போதை மருந்து, ஆயுதம் கடத்தல் வழக்கில் துனிஷிய மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துனிஷியா நாட்டின் அதிபராக கடந்த 23 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஜினே பெல் அபிதின் பென் அலி. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?

காஞ்சிபுரம் - திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.



சுவனத்தின் தறிவுகோல் தொழுகை அல்லவா!

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.

செல்போன் உண்டாகும் பாதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும்!

சென்னை: செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.


அமைதி பேச்சு வார்த்தையை தடுக்கும் நேட்டோ படைகள்: லிபிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு

லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் நேட்டோ படைகளும் புகுந்து உள்ளன.
இந்த படைகள் லிபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக லிபியா அரசு குற்றம் சாட்டி உள்ளது.

தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் மூன்றம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குதல், மேலும் மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே மில்லத் கல்வி விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. 

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான வழிகாட்டுதல் முகாம்

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறத் தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில் பெருந்திரலான மாணவ, மனைவியர்  கலந்து பயனடைந்தனர்.

தெலுங்கானா விவகாரம் சூடு பிடிக்கின்றது

தெலுங்கானா பிரதேசத்தை ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்கள்.


பராக் ஒபாமா கொல்லப்பட்டதாக வெளியான செய்தியால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம்

இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.



நெஞ்சாங்கூட்டில்…

கண்கள் இரண்டு. ஆனால், பார்வை ஒன்று.
செவிகள் இரண்டு. ஆனால், கேட்டல் ஒன்று.
நாசியில்கூட துளைகள் இரண்டு. ஆனால், சுவாசம் ஒன்று.

மனிதனுக்கு இதயம் ஒன்று. இரண்டு இதயங்கள் இல்லை. ஆனால், அந்த ஒற்றை இதயத்தில் பல்லாயிரம் சிந்தனைகள்.

போலி என்கவுண்டர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:டெல்லி கன்னாட்ப்ளேஸில் போலி என்கவுண்டரில் கொலைச்செய்யப்பட்ட இரண்டு தொழிலதிபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொலைச்செய்யப்பட்டவர்களின் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் சமமாக நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க நீதிபதி எஸ்.முரளீதரன் உத்தரவிட்டார்.

எகிப்தில் கொடூரம்: கியாஸ் பைப் லைன் தகர்ப்பு

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ராணுவத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு கூறியுள்ளது.

நாட்டின் நிர்வாக பணிகளை சீர்திருத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பதில் ராணுவ அரசு தீவிரம் காட்டவில்லை என எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் இன்னும் போராட்டம் நீடிக்கிறது.

இந்நிலையில் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் பைப் லைனை போராட்டக்காரர்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர்.

சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள பிர் அல் அப்த் என்ற இடத்தில் கார் குண்டு மூலம் இந்த அசம்பாவிதம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைப் லைன் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளுக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம்! இன்று விடிவு ஏற்படுமா?

JULY 05, சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



லஞ்சம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் பிரசவம்!

JULY 05, லக்னோ: லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.