Tuesday, 5 July 2011

கே.எ‌ன்.நேரு ‌மீது நில‌ம் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு புகா‌ர்

நில‌‌த்தை ஆ‌க்‌கிர‌‌மி‌ப்பு செ‌ய்து‌வி‌ட்டு த‌ன்னை ‌மிர‌ட்டுவதாக முன்னாள் ‌தி.மு.க. அமைச்ச‌ர் கே.என்.நேரு, அவரது சகோதர‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ‌மீது காவ‌ல்துறை‌யி‌ல் புகா‌ர் ‌அ‌ளி‌க்க‌ப்ப‌ட்‌டு‌ள்ளது.
திருச்சி மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் மாசானமுத்துவிடம் திருச்சி சிந்தாமணி வி.என். நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் எ‌ன்பவ‌ர் புகா‌ர் மனு ஒ‌ன்றை கொடு‌‌த்து‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல், திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு செல்லும் பாதை எங்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் ஆகியோரிடம் கேட்ட போது இடத்தை பற்றி பேசினால் கஞ்சா வழக்கு போடுவோம் என மிரட்டினர். அதே போன்று பேரு‌ந்து உரிமையாளர் ராஜகோபால், செல்வேந்திரன் ஆகியோரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
இந்த புகார் குறித்து ‌விசா‌ரி‌க்க கோட்டை காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் பரவாசுதேவனு‌க்கு காவ‌ல்துறை ஆணைய‌ர் மாசானமு‌த்து உத்தரவிட்டு‌ள்ளா‌ர். இதைத் தொடர்ந்து காவ‌ல்துறை‌யின‌ர் தீவிர விசாரணை மே‌ற்கொ‌ண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment