Monday, 27 June 2011

மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



இண்டர்போல் தேடும் இலங்கை நபர் விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இண்டர்போல் தேடும் இலங்கை நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.


அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளதையொட்டி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இங்கிருந்து தேர்ச்சி பெறும், மாணவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய நிலைமையே இருந்தது.

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க சட்டம்

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தனி நபர் உரிமை பாதுகாப்பு மசோதா` என்ற புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. இந்த மசோதா, அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.




டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 ரிசல்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார்.


ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வை நடத்தியது.

திருச்சி, தஞ்சையில் நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம்

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்கும் வகையில் தற்போது மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மைய ங்கள் துவங்கப்பட உள்ளன.


இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த 1980க்குப் பின் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



பிரிட்டன் - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இரு நாட்டு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

சீனா மற்றும் பிரிட்டன் இடையே 100 கோடி வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படுகிறது.

பிரிட்டனுக்கு வருகை தந்த சீன பிரதமர் வென்ஜியா பவ் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இடையே திங்கட்கிழமை சந்திப்பின் போது இந்த வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படுகிறது.

முத்துப்பேட்டை அருகே பயங்கரம் : விவசாயி படுகொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள இடும்பாவனம் ஊராட்சி மேலவாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (47). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவம்(24). சிவசுப்ரமணியன்& பரமசிவத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றும் நாளையும் "ஹால் டிக்கெட்' விநியோஹம்!

சென்னை : மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம்

சென்னை : சித்த மருத்துவம்-ஆயுர்வேதம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

சிங்கூரில் விவசாயிகளுக்கு மாற்று இடம்: அரசு நடவடிக்கை

சிங்கூர் : மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் நிறுவனத்துக்காக கட்டாயப்படுத்தி நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க மம்தா பானர்ஜி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


மாற்று இடம் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சிங்கூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் விநியோகிக்கப்படுவதாக ஹூக்ளி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபிரியா ரங்கராஜன் தெரிவித்தார்.

டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணென்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் – SDPI ன் மாநிலத்தலைவர் வலியுறுத்தல்

SDPI-ன் மாநிலத்தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மத்திய அரசு சமையல் எரிவாயு, டீசல், மண்ணென்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அத்தியாவசிய பொருள்களின்விலையை பன்மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும்.

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.


ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்

பாரிஸ்:காஸ்ஸாவுக்கு நிவாரணப்பொருட்களுடன் புறப்படவிருக்கும் குழுவில் பிரான்சு நாட்டு கப்பலும் இணைகிறது.ஆறுபேரைக்கொண்ட சிறிய கப்பல் காஸ்ஸா உதவுக்குழுவுடன் இணைவதற்காக கோர்ஸிகா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூட ஜேர்மனி முடிவு

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பரவியதை தொடர்ந்து ஜேர்மனியில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் 2022ம் ஆண்டில் மூடி விட ஏங்கலா மார்கெலின் ஜேர்மனி அரசு முடிவு செய்தது.

அணு உலைகளை முன்னதாக மூட வேண்டும் என கிறீன் கட்சி முதலில் வலியுறுத்தியது. தற்போது அரசின் முடிவை ஏற்பதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்தது.

சிரியாவில் கடும் போராட்டம்: லெபனானுக்கு ஓடும் மக்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Sunday, 26 June 2011

பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு

இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.


இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு

முந்தைய ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து புகலிடம் தேடி வேறு இடம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.


இடம் பெயர்ந்த மக்களுக்கு வழிகாட்டும் அமைப்பான சர்வதேச அகதிகள் அமைப்பு இதனை தெரிவித்து உள்ளது. 2011ஆம் ஆண்டில் முதல் 5 மாதங்களில் 91 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

இஸ்லாத்தைக் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டீசல்,சமையல் எரிவாயு,மண்ணெண்ணெய் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்-எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கோரிக்கை விடுத்துள்ளது.



வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசே ஏற்க குரேஷி எதிர்ப்பு

லண்டன் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுவதை நடைமுறைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.


லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் குரேஷி இதைத் தெரிவித்தார்.

பாரம்பரிய தலத்தை பாதிக்கும் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் நிறுத்த வேண்டும்: ஐ.நா உத்தரவு

உலக பாரம்பரிய தலத்திற்கான பட்டியலில் உள்ள மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் நார்மாண்டி கடல் பகுதியின் பாறை தீவில் அமைந்துள்ளது.


ஐ.நா.வின் யுனஸ்கோ கலாச்சார   அமைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தின் தர நிலையை பாதிக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளக்கூடாது என ஐ.நா அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

வெளியூர்களில் மின்வெட்டு நேரம் 3 மணியிலிருந்து 1.30 மணி நேரமாகக் குறைப்பு

சென்னை: சென்னை தவிர வெளியூர்களில் மின்வெட்டு நேரத்தை 1.30 மணி நேரமாகக் குறைத்துள்ளது தமிழக அரசு.


கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் தொழில்கள், விவசாய பணிகள் கடும் பாதிப்பு அடைந்தது.

அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகி விட்டார். அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தின்போது ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!

இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது

உலகின் முதன் முறையாக 7 வயது சிறுமிக்கு மூன்று செயற்கை இதயங்கள்

Muthupet PFI -- JUNE 26
உலக நாடுகளில் பெரும் மருத்துவ சாதனையை எட்டிய நோயாளியாக 7 வயது சிறுமி ஹன்னா அட்னன் உள்ளாள்.


இவரது உயிரை காப்பாற்றுவதற்கு மூன்று முறை செயற்கை இதயங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஹன்னா எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்.

Saturday, 25 June 2011

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகும் ஹீனா ரப்பானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய வெளியறவு துறை அமைச்சராக ஹீனா ரப்பானி கர் (34) நியமிக்கப்படவுள்ளார்.


பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி நீக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

மீனவர்களின் வழிகாட்டியாகும் ஜி.பி.எஸ். கருவி

ஜூன் 24: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு துணையாக ஜிபிஎஸ் (Global Positioning System) எனப்படும் உலக இடநிர்ணயிப்புக் கருவி விளங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிக்க வேண்டும் : சபாநாயகருக்கு ஆ. ராசா கடிதம்

பாராளுமன்ற எம்.பி.க்களில் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, மதுகோடா, கனிமொழி ஆகிய 4 பேர் டெல்லி திகார் ஜெயிலில் உள்ளனர். ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகவும், சுரேஷ் கல்மாடி காமல் வெல்த் போட்டி ஊழல் தொடர்பாகவும் மதுகோடா முறைகேடான சொத்து குவிப்பு காரணமாகவும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு

மும்பை : 2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.


இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

50 பைசா நாணயங்கள் செல்லாது

இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது.


இது குறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நேரத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை

Muthupet PFI -- JUNE 25,
டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் துனிஷியா இணைந்தது

இந்த ஆண்டு துவக்கத்தில் அரபு போராட்டங்கள் ஏற்பட்ட பகுதியாக துனிஷியா இருந்தது. இந்த நாடு சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இணைந்தது.


இந்த அமைப்பில் இணைந்த முதல் வட ஆப்பிரிக்க தேசம் துனிஷியா ஆகும். சர்வதேச கிரிமினல் கோர்ட் விதிமுறைகளை ஏற்கும் என துனிஷியா வெள்ளிக்கிழமை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிமினல் கோர்ட் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளரிடம் உரிய விவரங்களை சமர்ப்பித்தது.

SDPI ன் மரக்கன்று நடுவிழா

Muthupet PFI -- June 25,
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 3-ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லைக்கேனி தொகுதியின் சார்பாக மக்கள் நலம் நாடு மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா...


கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஈராக்கில் அதிவேக ரயில்: பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் அமைக்கிறது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து பஸ்ரா வரை அதிவேக ரயில் இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் மேற்கொள்கிறது.


இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக அல்ஸ்டோம் மற்றும் ஈராக் ரயில்வே இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாரிஸ் சர்வதேச விமான கண்காட்சியில் போக்குவரத்து துறை இளநிலை அமைச்சர் தெரிவித்தார்.

சிரியாவில் அதிபருக்கு எதிராக கடும் போராட்டம்: 15 பேர் சுட்டுக் கொலை

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கினர்.


இது குறித்து சிரியா அரசு தொலைக்காட்சி கூறுகையில்,"அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.


திண்டுக்கல் மாவட்டம் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விருது

சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு

Muthupet PFI -- JUNE 25,
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சிறப்புவாய்ந்த மனநல நிபுணர் பணிகள்-25-06-2011

மனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளாலோ ஒரு மனிதருக்கு ஏற்படும் குறைபாடாகும். இதன்மூலம் மூளையின் சிந்தனை மற்றும் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மிகுந்த சிரமத்துடனேயே எதையும் கற்றுக்கொள்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளைவிட தாமதமாகவே அமரவோ, தவழவோஇ நடக்கவோ மற்றும் பேசவோ செய்கிறார்கள்.


4,800 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம் தயார்!

பாரீஸ் : அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.


ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு:பதவி விலக அனுமதிக்கவேண்டும்-எஸ்.ஐ.டி தலைவர்

அஹ்மதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தலைவர் சத்யபால் சிங் பதவி விலக அனுமதியளிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.டியின் இதர உறுப்பினர்களான மோகன் ஜா, சதீஷ் வர்மா ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தன்னை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என சத்யபால் சிங் நீதிபதிகளான ஜெயந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கும் பெஞ்சின் முன்பாக சமர்ப்பித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான்:நிலநடுக்க சேதம் ரூ.10 லட்சம் கோடி

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகக் கடுமையான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

பொது மருந்துகளால் முதியவர்களுக்கு உயிரிழப்பு அபாயம்: ஆய்வுத் தகவல்

ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்களுக்கு பழக்கமான பொது மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.


அலர்ஜி, வலி நிவாரணி மற்றும் ரத்த ஓட்டத்தை இழக்கச் செய்தல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

சென்னையில் ஒரு சதுர கி.மீ.க்கு 26,903 பேர் வசிக்கும் அவலம்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 121 கோடி மக்கள் தொகை இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 389 பேர் உள்ளனர். 10 ஆண்டுகளில் 97 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதம். தமிழகத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 555 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

 ஜூன் 24:  நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உள்துறை அமைச்சக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :