இது குறித்து SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாளருமாகிய A . அபூபக்கர் சித்திக் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பேட்டியளித்த அவர், இந்த தேர்தலின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும், எந்த மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், அதாவது இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை பெற்று தறுவதற்கு முயற்சிகள் செய்வோம் என்றும், மேலும் அவற்றை முழுமையாக பெற்றுத்தர போராட தயாராகுவோம். அதே போல எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவுக்கு பாரபட்சம் பார்க்காமல் எங்களுடைய கட்சி செயல்படும்.
நமது ஊரில் பாசிசம் தலை எடுக்காத அளவுக்கு என்னென்ன வழிகள் இருகின்றதோ அவற்றை தடுக்க முயற்சிகள் எடுப்போம் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள பொதுவான பிரட்சனைகளான குளங்கள், சாலைபராமரிப்புகள், சுகாதார சீர்கேடுகள் குறித்தும் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெருவித்தார்.
மேலும் SDPI கட்சியானது பணத்திற்கோ அல்லது பதவி, பட்டத்திற்கோ துனைபோகாது என்பதை உறுதிபட நான் இங்கே கூறுகிறேன்.
இந்த அரசியல் களத்திற்கு SDPI இறங்கியதற்கு முக்கிய காரணமே பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! நமது சமுகத்திற்கு எதாவது இந்த அரசியல் மூலம் செய்யலாம் என்ற ஓர் ஏக்கத்தில்தான் இந்த அரசியலில் இறங்கி உள்ளோம் . அதற்காக முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை மனமார ஏற்று என்னை வெற்றிபெற செய்யும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
நன்றி : http://muthupettaiexpress.blogspot.com
No comments:
Post a Comment