குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு
அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு
பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு
பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள்
சம்பாதித்துள்ளனர்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.
டீஸ்டா இந்த புகார் மனுவுடன் மோடி மற்றும்
அவரது சகாக்களின் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆவணங்களையும்
சமர்ப்பித்துள்ளார். பெரும் தொழில் அதிபர்களுக்கு அரசு நிலத்தை பங்கீடு
செய்து அளித்தது பொதுநலனை கருதி அல்ல. மாறாக முதல்வரும், அமைச்சர்களும்
தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி
இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
முதல்வரே நேரடியாக இந்த ஊழல்களில்
ஈடுபட்டுள்ளதால் மாநில ஏஜன்சிகளின் விசாரணை சரியாக அமையாது. மாநிலத்தின்
உயர் அதிகாரிகளும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் தனிப்பட்ட
பணியாளர்களைப் போல பணியாற்றுகின்றனர்.
குஜராத்தில் சட்டம் முழுமையாக தோல்வியை
தழுவிவிட்டது. ஊழலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்யக் கூட
போலீசாரால் இயலவில்லை என டீஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment