![]()
புது தில்லி, ஜூன் 24: மத்திய உள்துறைச் செயலராக ராஜ்குமார் சிங் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவில் செயலராக இருக்கும் ராஜ்குமார் சிங், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 1975 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
இப்போதைய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதுவரை உள்துறையின் சிறப்பு அதிகாரியாக ராஜ்குமார் சிங் செயல்படுவார் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய உள்துறையில் இணைச் செயலாளராக 5 ஆண்டுகள் அவர் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment