Monday, 24 October 2011

முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI வேட்பாளர் பேட்டி !

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார். 

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். 

அன்னா ஹசாரேயுடன் கைகோர்த்த கிரண் பேடியின் மோசடிகள்



DSC04708சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். கிறித்துவுக்கு முந்தைய 63ம் ஆண்டில், ஜுலியஸ் சீஸர் ரோம் சாம்ராஜ்யத்தின் தலைமை போதகராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  இதற்காக அவருக்கு அரசாங்கத்தால் ஒரு வீடு ஒதுக்கப் படுகிறது.   அந்த வீட்டில் சீஸரின் மனைவி போம்பியா அந்த வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார்.  அந்த விருந்தில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.  ஆனால் பெண் வேடமிட்டு பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சர் என்ற இளைஞன் சீசரின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான்.  அவன் பிடிக்கப் பட்டு விசாரணைக்கு நிறுத்தப் படுகிறான்.   போதுமான சாட்சிகள் இல்லாததால் அவன் விடுதலை செய்யப்படுகிறான்.  ஆனாலும் சீசர் தன் மனைவி போம்ப்பியாவை விவாகரத்து செய்கிறார்.  அதற்கு சீஸர் சொன்ன காரணம், என் மனைவி சந்தேகத்தின் நிழலில் கூட இருக்கக் கூடாது.   இந்தக் கதையிலிருந்துதான் சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற வாக்கியத் தொடர் வந்தது.

துருக்கியை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்- 1000 பேர் பலி

People try to save others trapped under debris அங்காரா: துருக்கியின் கிழக்குப் பகுதியில், 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

துனீஸிய தேர்தல் களத்தில் தனது எழுச்சியை நிரூபிக்கும் கட்சிகள்

துனீஸியாவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு 9 மாதங்களில் பின்னர் இன்று பொதுத் தேர்தல் இடம்பெற்றுள்ளது. துனீஸியாவில் சட்ட சபைக்கான 217 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.