Monday, 25 July 2011
தலைபோகிற விஷயம்...!
முதலில் இதைப் படியுங்கள்
- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.
போர்த்துக்கீசியர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்
சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின்
ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம்
அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது.
அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின்
ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.
தி.மு.க. தலைவராக கருணாநிதியே நீடிப்பார்: பொதுக்குழுவில் முடிவு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூரில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று கூடியது.
இதில், கருணாநிதி தலைமை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக, தலைமைப் பதவி குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்பட்ட நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

மரணித்து போய்விட்ட சீன மனிதம் : சிறுவன் வதைக்கப் படும் கொடூரக் காட்சி
பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒரு கிராமத்தில்
ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில்
இருப்பவர்களுக்கு அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும்
உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம்
உள்ளனர்.
புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன்
மூத்த வழக்கறிஞரான ரோஹின்டன் நாரிமன் அடுத்த புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட உள்ளார்.
இதுவரை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்பிரமணியம், வழக்கு ஒன்றில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது தம்மை அவமதித்த செயலாகும் என்று கூறி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அப்பதவிக்கு ரோஹின்டன் நாரிமனை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் முதல் புல்லட் ரயில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
பெய்ஜிங்: சீனாவில் நின்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் மீது, மற்றோரு
புல்லட் ரயில் மோதியதில் 35 பேர் பலியாகினர். மேலும் 191 பேர்
காயமடைந்தனர்.
சீனாவின் ஹாங்ஹூ நகரில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள பியூஷுவுக்கு நகருக்கு D3115 என்ற புல்லட் ரயில் நேற்று புறப்பட்டது. வென்ஷியு நகர் அருகே வந்த போது மின்னல் தாக்கியதால் மேற்கொண்டு இயங்க மின்சாரம் இல்லாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.

சவுதி அரோபியாவில் சிக்கி தவிக்கும் 25 தமிழர்கள்
கடலூர்
மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ராஜீவ்காந்தி,
வீரப்பன், சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கணேஷ் ஆகியோர்
நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனை சந்தித்து ஒரு புகார் மனு
கொடுத்தனர்.
மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!
அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக,
மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி
பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். இவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒரிஸ்ஸாவில் தலித் எம்.எல்.ஏ, மீது தீண்டாமை கொடுமை!
புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள்
பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரப்பூர்வமான
கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும்,
தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில
சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்டலில் சிக்கினார் கேட் மிடில்டன்
யூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல்
விவகாரத்தில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவியார் கேட் மிடில்டன்
மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள்
வெளியாகியுள்ளன.
Saturday, 23 July 2011
நடுவானத்தில் மோதவிருந்த விமானங்கள் நூலிழையில் தப்பின!
ஜெட்
ஏர்வேஸ் விமானமும் மற்றொரு சர்வதேச விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து
கொண்டிருந்தபோது திடீரென அவை நேருக்கு நேர் வந்து மோத இருந்த வேளையில் இரு
விமானிகளும் திறமையாக செயல் பட்டதால் அந்த விபத்திலிருந்து இரு
விமானங்களும் தப்பின.
போலி கல்விச் சான்றிதழ்: பிரச்சனையில் ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா
வாரனாசி: யோகா குரு பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் அன்னா ஹஸாரே போன்று ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். பின்னர் தனது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஒரு புறம் பாபா ராம்தேவ் உலக அளவில் உண்ணாவிரதத்தால் பிரபலமாக மறு புறம் சிபிஐ அவரது கோடிக்கணக்கான சொத்து விவரங்களைத் தோண்ட ஆரம்பித்தது.

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்
கடந்த
2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி
முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள்
உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக
குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் இரு (வேறுபட்ட) இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்
பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று,
இந்தியாவில் இஸ்லாமியக் கருத்துக்கள் குழப்பத்தில் உள்ளன.
குழப்பத்துக்குக் காரணம், இன்றைய சூழ்நிலையை இஸ்லாமை எப்படிப் பின்பற்றுவது
என்பதாகவே இருக்கின்றது.
இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
ஸ்ரீநகர் : ஜம்மு
கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி (தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து
வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு
செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான
நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்
உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக
இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ
ஜெய்ப்பூர் : ஆர்.எஸ்.எஸ்
பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த
தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங்
தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய
புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
லோக் ஆயுக்த அறிக்கை மீது நடவடிக்கை: கர்நாடக ஆளுநர் உறுதி
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒய்எம்சிஏ
பயிற்சிப்பள்ளியின் 100-வது ஆண்டு விழாவை குத்துவிளக்கேற்றித் தொடக்கி
வைக்கிறார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.
நார்வேயில் பாரிய குண்டுவெடிப்பு : பிரதமர் அலுவலகம், உட்பட அரசு அலுவலகங்கள் கடும் சேதம் இதுவரைக்கும் 87 பேர் பலி பலர் படுகாயம்
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பாரிய
குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டோரின்
எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று வந்த தகவல் படி இதுவரைக்கும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?
புதுடெல்லி:அமெரிக்க
கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத
ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என
அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி
நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.
Friday, 22 July 2011
அரசு பஸ்களில் டிக்கெட் வழங்க நவீன மின்னணு கருவிக்கு ரூ.10 கோடி அனுமதி: ஜெயலலிதா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்
நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான
முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக,
நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு
வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே
போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
தமிழ்
நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான
முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக,
நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு
வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே
போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.மூன்றாண்டு பி.எல்.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில்
நடத்தப்படும் மூன்று ஆண்டு சட்டப் (பி.எல்.) படிப்புக்கான கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாண்டு பி.எல். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லோக் ஆயுக்தவும் லோக்பாலும்!
குழாயடிச் சண்டை என்று ஒன்றுண்டு. ஒரு குடம் தண்ணீரை யார் பிடிப்பது என்கிற சண்டையில் இரு வீட்டு ரகசிய விவகாரங்கள் நாற்சந்திக்கு வரும். அந்த மாதிரியான குழாயடிச் சண்டையைத்தான் இப்போது மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே சூடாகக் கிளப்பியுள்ளன பாஜகவும் காங்கிரசும்.
பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!
உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
புளியங்குடியில் பள்ளிக்கு தீ வைப்பு 2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)