Tuesday, 19 July 2011

சொத்து அபகரிப்பு: கே.என். நேரு உள்பட 11 பேர் மீது போலீஸில் புகார்

திருச்சி, ஜூலை 18: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றை மிரட்டி அபகரித்ததாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துணை மேயர் மு. அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல், திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் திங்கள்கிழமை அளித்த புகார் மனு: