Wednesday, 25 May 2011

வெற்றி பெறுவதற்கு...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.  வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

இரும்பு மனிதர்கள்!


‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர்.
ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.

சிறைச்சாலை இல்லை!! சிங்கராச்சாலை!!

May 25, திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள்.

பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.

அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயில், விமானம் முதல் சிறைவரை இவர்களுக்கு முதல் இடம்தான்.

சிறை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்க்கான இடமாக இருக்கவேண்டுமே அல்லாமல் மீண்டும் குற்றம் செய்ய தூண்டுவதாக அமைந்துவிட கூடாது. அதிலும் ஏழை பணக்காரன் பாகுபாடோடு இருக்குமே ஆனால் அதைவிட கேடு இந்த நாட்டிற்கு வேறு ஒன்றும் இல்லை.

கருணையுள்ளம் கொண்டோரே… வாரி வழங்கிடுவீர்…


திருநெல்வேலி மாவட்டம் மேலபாளயத்தை சார்ந்த சகோதரர்.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆறு வயது மகன் ஜெ.இஜாஸ் அஹமது பிறவியிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காத குறையுள்ளவன்.
ijas
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சகோ.ஜாகிர் ஹுசைன் தனது மகனை எப்படியும் குணபடுத்திட தொடர்ந்து தனது சக்திக்கும்மீறி முயற்சித்து வருகிறார்இறுதியாக சென்னை KKR மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலமாக இன்ஷாஅல்லாஹ் சிறுவன் இஜாஸ் அகமதுவின் குறையை நீக்கிவிடலாம் என உறுதியளித்துள்ளனர்.சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 7.5 லட்சம் வரை தேவைபடுகிறது.

ஏழ்மையின் இயல்புநிலையில் இருக்கும் சகோ.ஜாகிர் ஹுசைன் கருணையுள்ளம் கொண்ட சமூக சகோதரர்களின் உதவியை நாடுகிறார். கடந்த மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய சிகிச்சை பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை. எனவே சில வாரம் தவணை கேட்டிருக்கிறார் மருத்துவர்களிடம்.
ஆகையால் அந்த ஏழை சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட அல்லாஹுவின் அன்பிற்காக சிறுவன் ஜெ.இஜாஸ் அஹமதுவின் சிகிச்சைக்கு தங்களாலான பொருளாதார உதவியை விரைந்து வழங்கிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்… இன்ஷாஅல்லாஹ் ஏக இறையவன் சிறுவன் இஜாஸ் அஹம்துவிற்க்கு சிகிசையின்மூலமாக ஊனத்தை நீக்கிவைப்பனாக… பூரண ஆரோக்கியத்தை அளிதிடுவானாக… அவனது சிகிச்சைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிடும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் சிறப்பை தருவானாக…
மேல் விபரங்கள் மற்றும் பொருளாதார உதவி அளித்திட சிறுவன் ஜெ.இஜாஸ் அகமதுவின் தகப்பனார் சகோ.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களை +919095573103 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளவும்… வஸ்ஸலாம்

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா




இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக (ironclad) வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tuesday, 24 May 2011


பலஸ்தீன் ஆக்கிரமிப்பு ‘நக்பா’ நினைவு தினத்தில்

பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ ‘நக்பா’ தினம்  ஆண்டுதோறும்  பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின்   இந்த வருடம்  63 ஆவது ஆண்டு நிகழ்வு, ‘ஆக்கிரமிப்பு தினம்’ இன்று ஞாயிற்று கிழமை பலஸ்தீனில் நடைபெருகின்றது ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகள் பலஸ்தீனம் முழுவதும் அனுஷ்டிக்கபடுகின்றது அவை பேரணியாக , ஆர்பாட்டங்களாக , கண்ட கூட்டங்களாக , பலஸ்தீனை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்ரேலிய படை மீதான கல் வீச்சாக என பல பரிமானங்களில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள், ரமல்லாஹ் , காஸா, மேற்கு கரை பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறவேண்டும் என்பதை உறுதிசெய்து வருகின்றனர் இந்த ஆர்பாட்டங்கள் , பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை சுட்டு வருகின்றது.

இதில் 46 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் காஸாவின் வட பகுதி நோக்கி ஆட்டிலறி குண்டுகள் , இராணுவ டாங்கிகள் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .

காஸாவில் உமரி மஸ்ஜிதில் ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியா இந்த மஸ்ஜிதில்தான் ஜிஹாத் ஆரம்பிக்கப்பட்டது என்றும் எமது மக்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்திய ‘போராளி மாதிரி’ (model of fighters) ஒன்றை -உலகிற்கு – வழங்கினார்கள் இன்று வாலிபர்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்தி வியக்கதக்க சாதனைசெய்து எதிரி தோல்வியை ஏற்றுகொள்ள நிர்பந்தித்துள்ளனர்  தியாகம் இரத்தம் இன்றி ஜிஹாத் என்பது இல்லை தியாகங்கள் இன்றி சுதந்திரம் என்பது இல்லை எமது மக்கள் தியாகங்களின் கட்டணத்தை (bill) செலுத்த தயங்கி நிற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இங்கு கருத்துரைக்கையில் பலஸ்தீன் மூன்று காரணங்களினால் வெற்றியை அண்மித்து விட்டது ஒன்று ஹமாஸ், பாதா ,மற்றும் ஏனைய பலஸ்தீன அமைப்புகள் தமக்குள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளமை ,இரண்டாவது அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றம் இது பலஸ்தீன விடையத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இஸ்ரேல் பல மட்டங்களில் தோற்று வருகின்றமை என்றும் தெரிவித்துள்ளார்.


ஜீன் 1 முதல் ஜீன் 7 வரை ஆபாச எதிர்ப்பு பிரசாரம் - பாப்புலர் ஃப்ரண்ட்

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே. ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்புகள் உடைத்தெரியப்பட்டு வருகிறது. அறைகுறை உடைகளும், ஒழுக்க கட்டுபாடின்மைகளும், இதனை அங்கிகரிக்கும் சமூகம் மற்றும் அரசு, என்று சமூகம் சீரழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.
ஆபாசத்தை முன்நிறுத்தி சர்வசாதரணமாக இன்று பல ஆடைகள் தயாரிப்புகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் எனப் பலர் தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றார்கள். அரசோ இத்தகைய ஆபாசத்திற்கு எதிராக மக்களை உருவாக்குவதை விட்டு விட்டு ஆபாசத்தினால் எழும் தீமைகளை எவ்வாறு தடுப்பது என்பதிலே கவனம் செலுத்துகிறது. மக்களும், ஒரு மனிதனை ஒழுக்கத்தை கொண்டு மதிப்பிடாமல் வெறுமனே பணத்தை கொண்டு மதிப்பீடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகளின் விளைவால் மென்மேலும் இத்தகைய ஆபாசங்கள் வளர்ந்து பல தீமைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஈவ் டிசிங், சிறுமிகள் உட்பட பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், விபச்சாரம், கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு மற்றும் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள், இதனால் கணவன் அல்லது மனைவி கொலை செய்யப்படுதல், விரக்தி மற்றும் தற்கொலை, விவாகரத்து போன்ற பலவேறு சமூக தீமைகள் அன்றாடம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இருந்து சமூகம் மீளவேண்டுமெனில் ஆபாசத்தின் ஊற்றாகிய பார்வையில் இருந்து தொடங்கி எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல்பாடு போன்ற அனைத்திலிருந்தும் மீள வேண்டும்.
ஆபாச பார்வைகளே தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்தீய எண்ணம் மன குமுறலை ஏற்படுத்துகிறது. இந்த குமுறல் தீய செயல்களுக்கு வடிவம் கொடுக்கிறது. எனவே ஆபாசத்ததை ஒழிக்க பார்வைகளிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து ஆபாசத்தின் பல தீய முகங்களை விட்டு விலக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறை திருக்குரானில் பின் வருமாறு கூறுகிறான் -

(நபியே) முஃமின்கனான(நம்பிக்கையாளர்கள்) ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக - அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். - (குர்ஆன் 42.30)

இத்தகைய ஆபாசத்தினால் குடும்ப அமைப்பு சீரழிக்கப்படுகின்றது. கணவன்-மனைவியிடையே உள்ள பிணைப்பை பலகீனப்படுத்துகிறது. இத்தகைய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் மற்றும் தகாத உறவில் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் பல சிறிய குற்றங்களிலிருந்து பெரும் குற்றங்கள் வரை புரியவும் காரணமாகிறது.

எனவே இத்தகைய ஆபாசம் என்ற சமூக தீமையை ஒழிக்கும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜீன் 1 லிருந்து ஜீன் 7 வரை ஆபாசத்திற்கெதிரான பிரசாரத்தை செய்ய உள்ளது. ஆபாசத்தை ஒழித்து ஆரோகியமான சமூகத்தை உருவாக்குவோம்.


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு : சென்னை முதலிடம்!


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சென்னை மண்டலம் 91.32 விழுக்காடு தேர்ச்சி பெற்று, நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்த  சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வினை மொத்தம் 6,75,658 பேர் எழுதியுள்ளனர். இதில் 5,52,091 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள்து விழுக்காடு 81.71 ஆகும். இது கடந்த ஆண்டைவிட  1.84 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த ஆண்ட்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளனர் (86.93விழுக்காடு).
மண்டல வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு விபரம் பின்வருமாறு:
சென்னை மண்டலம் : 91.32
அஜ்மீர் மண்டலம் : 85.05
பஞ்சகுலா மண்டலம் : 79.85      செய்திகள் 
டெல்லி மண்டலம் : 85.45
குவஹாத்தி மண்டலம் : 70.91
அலகாபாத் மண்டம் : 73
புவனேஸ்வர் மண்டலம் : 84.07

சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதிய 61,337 மாணவ, மாணவியரில் 56,012 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களில் 89.79 விழுக்காடு பேரும், மாணவிகளில் 93.21 விழுக்காடு பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.திவ்யா 500-க்கு 492 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி சுமனா 491 மதிப்பெண் பெற்றுள்ளார். கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சென்னை மாணவ, மாணவியருக்கு நேற்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. வெளியூர் மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Monday, 23 May 2011

அமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விசாரணைக்கு ஜெ. உத்தரவு


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் இன்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.


அவரது மறைவால் அதிமுகவினர் சோகமடைந்துள்ளனர். மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது மரியம் தியேட்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மரியம் பிச்சையின் மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகலில் நடந்த எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தனி விமானம் மூலம் திருச்சி விரைந்தார்.


மரியம் பிச்சையின் உடலுக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மரியம் பிச்சையின் மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெரும் திரளான அதிமுகவினர், மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் நிலவவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காரில் ஏற்ப போன ஜெயலலிதா, அதை நிறுத்தி விட்டு செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். அவர்களிடம் அவர் கூறுகையில்,


அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.


ஜெயலலிதா இப்படிக் கூறியிருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. மரியம் பிச்சையின் மரணம் குறித்து தீவிர போலீஸ் விசாரணை நடைபெறப் போவதாகவும் கூறப்படுகிறது.


டிரைவரைப் பிடித்து போலீஸ் விசாரணை


இதற்கிடையே, மரியம் பிச்சையின் கார் டிரைவர் ஆனந்தனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் அமைச்சர் மட்டுமே பலியாகியுள்ளார். அவரது உடல் நசுங்கிப் போய் விட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தன் ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
ஆனந்தன் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவராவார். அவரிடம் போலீஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முல்லா உமர் கொல்லப்பட்டாரா?-தாலிபான் மறுப்பு


இஸ்லாமாபாத்:தாலிபான் தலைவர் முல்லாஉமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தாலிபான் இதனை மறுத்துள்ளது. ஆப்கானின் தனியார் தொலைக்காட்சி  சேனலான டோலோ (tolo) உமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

குவாட்டாவிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்று கொண்டிருக்கும் போது குண்டடிபட்டு இறந்ததாக அச்செய்தி கூறுகிறது. தாலிபானின் ஆன்மீக தலைவரும், ஆப்கானின் உரிமைகளுக்காக போராடும் போராளி தான் முல்லா உமர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் 2-வது இடத்தில் முல்லா உமர் உள்ளார். இவரை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இயலவில்லை.

முல்லா உமரின் தலைக்கு அமெரிக்கா ஒரு கோடி டாலர் பணத்தை பரிசாக அறிவித்திருந்தது. தாலிபானின் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ’இது பொய்யான பரப்புரையாகும். முல்லா உமர் ஆப்கானிஸ்தானில் நலமாக உள்ளார். முஜாஹிதீன்களை வழிநடத்துகிறார்.’ என தெரிவித்துள்ளார்.

பாப்ரி மஸ்ஜித்:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் படி நடவடிக்கை இல்லை


புதுடெல்லி:ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ புதிய வழக்கை பதிவு செய்யாது. உள்துறை அமைச்சக அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

புதிய வழக்கை பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் முதல் நிலை சான்று அறிக்கையில் இல்லையென சி.பி.ஐ கூறுகிறது.இதன் காரணமாக புதிய வழக்கை தொடரவோ கூடுதலாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ இயலாது என சி.பி.ஐ கூட்டத்தில் விளக்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பா.ஜ.க தலைவர்களான வாஜ்பேய், எல்.கே.அத்வானி உள்பட 68 பேர் குற்றவாளிகள் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்தது. ஆனால், இவர்களை குற்றவாளிகளாக சேர்த்து வேறொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ கூட்டத்தில் தெரிவித்தது. லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை தெளிவாக ஆய்வு செய்ய சி.பி.ஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்திருந்தது. அதேவேளையில்,அறிக்கையின் சில பக்கங்கள் குறித்து விசாரணை நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
17 ஆண்டுகள் விசாரணையின் இறுதியில் 2009 ஜூன் மாதம் 30-ஆம் தேதி நீதிபதி லிபர்ஹான் மத்திய அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.இதற்கிடையில் கமிஷனின் கால அவகாசம் 48 தடவை நீட்டிக்கப்பட்டது.

ஆளில்லா விமானத்தாக்குதல்:பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென கோரி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் தலைமையில் கராச்சியில் போராட்டம் நடைபெற்றது. கராச்சி துறைமுகத்திற்கு அருகே துவங்கிய போராட்டத்தின் முதல் நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஆளில்லா விமானத்தாக்குதல்களுக்கு எதிராக நேட்டோவின் பாகிஸ்தானில் உள்ள தேவையான பொருட்களின் விநியோகத்தை தடைச்செய்ய தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பாகிஸ்தானிற்கு எதிரான போர் அல்ல. இது பாகிஸ்தானின் இறையாண்மையை தகர்ப்பதாகும். மேலும் தீவிரவாதிகளை வளரச்செய்யும் என இம்ரான்கான் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் அரசு ஒருபுறம் தாக்குதலை கண்டிக்கிறது மறுபுறம் அமெரிக்காவை ஆதரிக்கிறது. இரண்டு தடவை பாராளுமன்றம் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதன்பிறகு 24 மணிநேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என இம்ரான் கான் குற்றஞ்சாட்டுகிறார்.

பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் அக்கிரமத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அரசுக்கு முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு இடைக்கால தேர்தலை சந்திக்கட்டும் என இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில்,ஆளில்லா விமானத்தாக்குதல் தொடந்தால் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பாஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சி.ஐ.ஏவின் துணை இயக்குநர் மிஷேல் மோரலுடன் சந்திப்பு நடத்தியபிறகு பாஷா கடுமையான வார்த்தைகளால் பதிலளித்தார். ஐ.எஸ்.ஐயின் பல்வேறு துறை தலைவர்களுடன் மோரல் சந்திப்பை நடத்தினார். அமெரிக்க குடிமக்களை நாட்டில் கட்டுப்படுத்தவேண்டும் என ஐ.எஸ்.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மரியம் பிச்சை மரணம்: அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், திருச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காரைகாலில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களில் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்குயருள்வாயாக! ‘ (அல்குர்ஆன் 25:74)

இயந்திர உலகின் பிடியில் இறுகச் சிக்கித்தவிக்கும் இன்றைய சூழ்நிலையில் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமான குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வரும் அவலம் வருத்தத்திற்குரியது. இதனைக் களைந்து இறைவனும் இறைத்தூதரும் இயம்பிய இனிய வழிமுறைகளைக் கொண்டு, அழகிய குடும்பத்தையும் வளமான சமூகத்தையும் புணர்நிர்மாணம் செய்வது நம் அனைவரின் கடமை.

ராணுவத்தில் பணிபுரிய வேண்டுமா?...


தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்




திருச்சி அருகே பாடலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது.
பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
மோதிய லாரி எங்கே ? தப்பி ஓடிய லாரியை தேடும் பணி தீவிரம் : திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .மி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
விபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கும் நடத்தி வந்தார்.
இன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவிப்பிரமாணம் : சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., புறப்படுகிறார்: அமைச்சர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., மதியம் ஒரு மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்படவிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு:பாப்புலர் ப்ரன்ட் அமைப்பு வலியுறுத்தல்


இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா வலியுறுத்தியது.பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் நிஜாம்முகைதீன் அறிக்கை:சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். மாற்றத்தை விரும்பி தமிழக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகள் சிறப்பான துவக்கம்.
மின்தட்டுப்பாட்டை சீர்செய்வது, வீடு கட்ட நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை.சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு நிஜாம்முகைதீன் தெரிவித்தார்.எஸ்.டி.பி.ஐ., மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில், “”இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SDPi புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு...

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு


SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)
செயலாளர்கள் - அப்துல் ரஷித் அக்வான் (டெல்லி), Dr. ஆவாத் ஷெரிப் (கர்நாடகா)
பொருளாளர் - உமர் கான் (மேற்கு வங்கம்)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 35 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்
KKSM தெஹ்லன் பாகவி, முஹம்மத் முபாரக்,A.அப்துல் ஹமீது
S.M.ரபிக் அஹ்மத்

Saturday, 21 May 2011

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்


நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.
நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

சரித்திரம் திரும்புமா?

தி மு க தலைவர் கருணாநிதி அவர்களுக்கு: அன்று தமிழருக்காக குரல் கொடுத்தீர்கள் கட்சியும் வளர்ந்தது, தங்களும் வளர்ந்தீர்கள், உங்கள் குடும்பமும் வளர்ந்தது.

சமூக நீதிக்காக குரல் கொடுத்தாய், தீண்டாமையே எதிர்த்த காரணத்தினால் ஜாதி வெறியர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாய், ஹிந்தியை எதிர்த்தாய், பிற்படுத்தப்பட்ட மக்கள்ளுக்காக குரல் கொடுத்தாய்!

பெரியாரின் வழியில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளை எதிர்த்தாய், ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தாய், இதெல்லாம் நீ செய்யும் போது வெற்றி மேல் வெற்றி பெற்றாய்.

நீ பெற்ற வெற்றி குறிப்பாக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கோபத்தை கிளறியது. அப்போதெல்லாம் தேர்தலில் நீ வெற்றியும் ,தோல்வியும், கண்டிருக்கிறாய் ஆனால் கேவலபடவில்லை!

என்று நீ கொள்கையில் இருந்து மாறி குடும்பத்திற்காக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தாயோ? அன்றிலிருந்து உன்னுடைய கேவலம் தொடங்கிவிட்டது.

பதிமூன்று வருடகாலம் நீ எதிர்க்கட்சி தலைவராக இருந்தாய் MGR ஆட்சியில் உன்னை தொடுவதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை. ஏன்? சதிகாரர்கள் அன்று உன்னுடன் இல்லை! ஆனால் இன்று நீ சதிகாரர்களின் சகலப்படியாக மாறிவிட்டாய் .

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! ஹிந்த்துதுவா பாசிஸ்டுகள் என்றுமே தாழ்த்தப்பட்டவர்களை வாழ விடமாட்டார்கள்! இது நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டும் என்றில்லை. என்றாலும் ஒரு சின்ன உதாரணம்:


கோடி கோடியாக ஊழல் செய்த ஜெயலலிதா, பாபர் மஸ்ஜித் இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அரஸ்ட் வாரன்ட் கோர்ட் கொடுத்ததும் அரஸ்ட் செய்யப்படாத பால்தாக்கரே, மனித குலவிரோதி நரேந்திரமோடி,

ISI யிடம் பணம் பெற்று இந்தியா முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி பாமர முஸ்லிம், ஹிந்து மக்களை வீரோதிகளாக மாற்ற முயற்சித்த RSS தலைவர்கள்,


இவர்கள் எல்லாம் வெளியில்! இந்த 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலை தொடக்கி வைத்த BJP தலைவர்களும், அருண் சொறியும் வெளியில்!
ஏன் என்றால் அவர்கள் உயர் ஜாதி.
ஏதோ எல்லா அரசியல்வாதிகளும் செய்வதை போல் செய்த உன் குடுப்பத்திற்கு மட்டும் ஜெயில்.சமூகத்தில் தாழ்த்த பட்டவர்களையும், முஸ்லிம்களையும், ஏழைகளையும் அரஸ்ட் பண்ணுவதற்காக, மட்டுமே வாரன்ட் தயாரிப்பதற்கு உயர் ஜாதி பார்பனர்களின் கோர்ட் .
இனியும் காலம் கடந்து விடவில்லை. உயர் ஜாதி ஹிந்துத்துவா வெறியர்களின் அநீதிர்க்கு எதிரான போரை தொடங்கு! தமிழர்களும், முஸ்லிம்களும் ,தாழ்த்தப்பட்டவர்களும், உன்னுடன் நிற்ப்பார்கள், உன் வெற்றி உறுதி! நிச்சயம்!!

உன்னால் பாதிக்கப்பட்ட ஈழதமிழர்களின் குடும்பங்கள், கோயம்புத்தூர் குடும்பங்கள் இவர்களின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றால், என்றும் இவர்களுக்கும், உனக்கும் எதிரியான ஹிந்துவா சக்திகளையும், சிங்கள பேரினவாதத்தையும் எதிர்த்து போராடு.

பெரியார் தொடக்கி வைத்த போரை மீண்டும் தொடங்கு இல்லையென்றால்! பாசிஸ்டுகள் மக்களையும், உன் குடும்பத்தையும் கேவலபடுதிவிடுவார்கள் .

மறந்து விடாதே! அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதி வாஜ்பேய் ஆட்சி செய்யும் போது நீஅவாள்களின் கூட்டணியில் தான் இருந்தாய்! அன்றும் நீ கைது செய்யப்பட்டாய்.
நீ காங்கிரசின் கூட்டணியில் தான்
 இருக்கிறாய் இன்று உன் குடும்பமே தீஹாரை நோக்கி. பாசிஸ்டுகளின் பாசறைகள் சந்தோஷத்தில்! தமிழர்களோ சங்கடத்தில்! இன்றும்
ஒன்றை நினைவில் வைத்துகொள்! நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவாவுடன் சேரமாட்டார்கள்
!

தவறை திருத்து 
தமிழர்களின் பக்கம் திரும்பு!!!!

51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

மே 20:

தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள




ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.



இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி



வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி):


ஷீலா பாலகிருஷ்ணன் (அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர்) சமூக நலத் துறை, சத்துணவுத் திட்டத் துறை செயலாளர்


டி.எஸ்.ஸ்ரீதர் - (தொல்லியல் மற்றும் அருங்காட்சியங்கள் துறை ஆணையாளர்) - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்



என்.சுந்தரதேவன் - (வருவாய் நிர்வாக ஆணையாளர்) - தொழில் துறை முதன்மைச் செயலாளர்



எம்.குற்றாலிங்கம் - (சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர்



ரமேஷ்ராம் மிஸ்ரா- (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்) - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்



ஆர். கண்ணன் - (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர்) - உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்



என்.எஸ். பழனியப்பன் - (தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழக தலைவர்) -மேலாண் இயக்குநர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர்



சாந்தினி கபூர் - (கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு அலுவலர் மற்றும் மேலாண் இயக்குநர்) - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்



வி.கே.ஜெயக்கொடி - (வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்) - சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளர்



ஆர்.ராஜகோபால் - (கைத்தறி, துணிநூல் துறை முதன்மைச் செயலாளர்) - வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்



ராஜீவ் ரஞ்சன் - (தொழில்துறை முதன்மை செயலாளர்) - சர்க்கரைத் துறை ஆணையாளர்



கே.அருள்மொழி - (மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர்) - வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்



முகமது நசிமுதீன் - (வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர்) - போக்குவரத்துத் துறை செயலாளர்



கே.பணீந்திர ரெட்டி - (தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்) - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்



சி.முத்துக்குமாரசாமி - (நில சீர்திருத்தத் துறை ஆணையாளர்) - கைத்தறி, துணி நூல் துறை செயலாளர்



விபு நாயர் - (நீர் வள மேலாண்மை திட்ட இயக்குநர்)- ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர்



எஸ்.கருத்தையா பாண்டியன் - (பொதுத் துறை செயலாளர்) - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்



ஏ.எஸ்.ஜீவரத்தினம் - (தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர்) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர்



ஜி.சந்தானம் - (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்) பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர்



சந்தோஷ்பாபு- (எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் ) - தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்



சிவ தாஸ் மீனா - ( தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர்) - சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறையின் செயலாளர்



சுனில் பாலீவால் - ( தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ) - வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர்



ககன்தீப் சிங் பேடி - ((தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநர்) - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர்



எம். சாய்குமார் - (சர்க்கரைத் துறை ஆணையாளர்) - பொதுப்பணித் துறை செயலாளர்



டி.கே.ராமச்சந்திரன்- (தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மேலாண் இயக்குநர்) - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர்



சி.பி.சிங் - (தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ) தொல்லியில் துறை ஆணையாளர்



கே.ஞானதேசிகன்- (உள்துறை முதன்மைச் செயலாளர்) வருவாய்த் துறை நிர்வாக ஆணையாளர்



கே.தீனபந்து- ( முன்னாள் துணை முதல்வரின் செயலாளர்) மறுவாழ்வுத் துறை ஆணையாளர்



அசோக் டோங்ரே- ( வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித் துறை முதன்மைச் செயலாளர்) சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்


வெ. இறையன்பு - ( வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர்) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) செயலாளர்


எஸ்.எஸ்.ஜவஹர்- ( மாற்றுத் திறனாளிகள் துறை செயலாளர்) அருங்காட்சியகங்கள் துறை ஆணையாளர்


எஸ்.கே.பிரபாகர்- ( முன்னாள் முதல்வரின் செயலாளர்) நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை-சுனாமி பிரிவு


கே.ரகுபதி- ( முன்னாள் துணை முதல்வரின் துணைச் செயலாளர்) ஊரக வளர்ச்சித் துறை (பயிற்சி) இயக்குநர்


பி.ஆர்.சம்பத்- ( இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளர்) - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை


மாநில ஆணையாளர்


சூசன் மேத்யூ- ( சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்) தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்


டேவிதார் - ( தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்) தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநர்


அதுல் ஆனந்த் - ( வேளாண் துறை ஆணையாளர்) எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர்


ஸ்வரன் சிங்- ( கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர்) தமிழ்நாடு மின்வாரியத் தலைவர்


சி.வி.சங்கர் - ( மத்திய பணியில் இருந்து திரும்புதல) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர்


வி.கே.சுப்புராஜ்- ( சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர்) அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்


கே.கணேசன்-( உயர்கல்வித் துறை செயலாளர்) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்


கே.அலாவுதீன்- ( ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மைச் செயலாளர்) தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டு


கழகத்தின் (டான்சி) மேலாண் இயக்குநர்


எம்.முத்தையா கலைவாணன்-( மறுவாழ்வுத் துறை இயக்குநர்) இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர்


டி.என்.ராமநாதன்- ( மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையாளர்) தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள்,


செய்தித் துறை செயலாளர்


ஹித்தேஷ் குமார் எஸ்.மக்வானா- ( தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்) சுங்கம் மற்றும் கலால் துறை ஆணையாளர்

செய்திகள்

டி.விவேகானந்தன்- ( வேளாண் வர்த்தகம் மற்றும் விற்பனைத் துறை இயக்குநர்) டாஸ்மாக் மேலாண் இயக்குநர்

ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

இதய நோ‌ய்களு‌க்கு‌ம் வை‌த்‌திய‌ம் உ‌ண்டு

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

கோடை‌‌க் கால நோ‌ய்‌களை‌த் த‌வி‌ர்‌க்க...

வெயில் காலம் வந்துவிட்டால், வெக்கைக்குப் பஞ்சமிருக்கிறதோ இல்லையோ, வெயில் கால நோய்களுக்கு ஒரு பஞ்சமும் இல்லை. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்கள் பொதுவாக நம் வீட்டு வாண்டுகளைத் தான் பெரும்பாலும் வாட்டி எடுக்கிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்க்கு வெயிலை குறைசொன்னால் மட்டும் போதாது. நோய் ஏற்படும் அளவிற்கு நம் உடம்பை கவனிக்காமல் விடுவதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...

வெயில் காலங்களில் ஏற்படும் நோய்கள் :

ஃபாஸ்ட் புட் விபரீதம்

இந்தியாவில் துரித உணவை சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள்

“நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின.

குடும்ப நல நீதிமன்றங்கள்

1984 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றங்களைக் கலந்தாலோசித்து, மாநிலங்கள் குடும்ப நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டது.

வீரரா, சவார்க்கர்? - சிறை சொல்லும் வரலாறு

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, 'ஆர்.எஸ்.எஸ். & கோ'வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட 'திலக்'காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

அக்பரின் மதச்சார்பின்மை

அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தபோது, பணியாளர்களுடன் சேர்ந்து அக்பரும் தாயின் பல்லக்கை சுமந்திருக்கிறார். அந்தளவிற்குத் தாயை மதித்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு முறை தாயின் கட்டளையை ஏற்க மறுத்து விட்டார்.

போர்ச்சுகீசியர் ஒரு முறை முஸ்லீம்களின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலில் கிடைத்த ‘குர்ஆன்’ நூலை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, ஓர் மூஜ் நகரத் தெருவிவிலே விட்டு, அடித்துத் துரத்தி விட்டார்கள். இதற்குப் பதில் நடவடிக்கையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டியடிக்க வேண்டும் என்று அக்பரின் தாய் அவரிடம் கூறினார்.

அதற்கு அக்பர், “அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதேயாகும். எனவே உயிரற்ற அந்தப் புத்தகத்தின் மீது வஞ்சம் தீர்த்து, அந்த மதத்தினரைப் பழிக்க நான் விரும்பவிலை” என்று கூறிவிட்டார். 

இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி

1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை

1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி

1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை

1757 - பிளாசி யுத்தம்

1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி

1779 - கட்டபொம்மன் தூக்கு

1806 - வேலூர் கோட்டை புரட்சி

1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்

இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும்,

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்

1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

திப்பு சுல்தான் ஆட்சியிலும் பார்ப்பன ஆதிக்கம்

கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.

ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல். மடல் எண். 42 : (1760 - 1761)

தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை!!

        மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதா அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதன் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாற்றத்திற்கு வித்திடும் வகையில் மே 16 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - PFI

21 May 2011

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.

இறைத்தூது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் இவைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை மீறி நடந்ததே இல்லை. இந்த வகையில் அவர்கள் பாவங்களே செய்தவர்களல்ல எனக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தங்களை அறியாமல் சில தவறுகளைச் செய்திருக்கலாம். சில முடிவுகளில் அவர்கள் தவறி இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவன் வகுத்துத் தந்த வரையறைகளை மீறியதே கிடையாது.

மீண்டும் ஒலிக்குமா ? அஹமது அலியின் குரல் !!

ஓர் உயிர் ஒரு நபர் 1950 நவம்பர் 14 ம் நாள் என் வி. முகமது அலி மற்றும் கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருடைய பெயர் "அஹமது அலி" என்பதாகும். மக்களால் "பழனி பாபா" என்று அழைக்கப்பட்டார் .பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா. 

துப்பாக்கிகளும், துர்பாக்கியங்களும்!!

May 20, உலகமகா பயங்கரவாதி என சித்தரிக்கப்பட்ட பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

இனி உலக மக்கள் அரசியல், கலாசார ரீதியான வாழ்கையை சுதந்திரமாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழலாம் என்ற இந்த அறிவிப்பு ரஷ்யாவிடம் இருந்து வந்தால் ஆச்சரியம் இல்லை.

ரஷ்யாவின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக அணி திரண்டு போராடியவரை முகம் மாற்றி, சாயம் ஏற்றி பயங்கரவாதியாக அடையாளப்படுத்திய துரதிஷ்டத்தை அரசியல் அறிவுடையோர் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!

May 20, தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

ஆறு பலஸ்தீனர்களைக் கடத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம்!



நேற்று (வியாழக்கிழமை - 19.05.2011) அதிகாலை மேற்குக் கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் கடத்திச் சென்றுள்ளது.

'தேடுதல் வேட்டை' என்ற போர்வையில் அதிகாலை நேரத்தில் பலஸ்தீனர்களின் வீடுகளில் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவ்வீடுகளில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்திப் பெரும் அட்டகாசம் புரிந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜாதிவாரி ஜனத்தொகை மற்றும் ஏழைகள் கணக்கெடுப்பு : மத்திய அரசு அனுமதி!


ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களைக் கண்டறிய,  இந்திய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.  ஆனால் ஜாதி அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசால் 1931ஆம் ஆண்டு, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 
நேற்று டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள்கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

Friday, 20 May 2011

.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு 15 நாள்களுக்குள் பள்ளியில் பதிவு செய்பவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி எழுத்துரு அளவு

வெள்ளி, 20 மே 2011

சேலம், மே 20- தமிழகத்தில் மே 9ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மே 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ்கள் வழங்கப் பட உள்ளது. மாண வர்கள் மதிப் பெண் சான்றிதழ் பெற்ற உடனே, கல்வித் தகுதியை பதிவு செய்ய அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களுக்கு படையெடுப்பது வழக்கம். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்க படித்த பள்ளிகளிலேயே ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ் வழங்கப்பட்ட உடன், மாணவர் கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்.

நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் சிரமங்கள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.

அல்சருக்கு மருந்து தேன்

வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.

ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரைப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!



“இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது”.


-சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன், குற்றவியல் சட்ட வரலாறு(1883) என்ற புத்தகத்தில்...



1991ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் புழுக்கம் மிகுந்த ஒரு நாள். மதுரை மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்ற வளாகம். விருதுநகர் அருகில் வாய்ப்பூட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட வழக்கின் தீர்ப்புநாளான அன்று, நீதிமன்றம் வழக்கத்திற்கு அதிகமான பரபரப்புடன் இருந்தது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.