Friday, 9 December 2011
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட 73 பேர் மரணம்
புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போராட்டம்
புதுடெல்லி: பாபரி மஸ்ஜித்
தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகு, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட
டிசம்பர் 6ஆம் தேதி அன்று தலை நகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல
நகரங்களில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற
கோரிக்கைய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு
நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.
பாப்புலர் ஃப்ரண்டை "சிமி" இயக்கத்தோடு தொடர்பு படுத்த உளவுத்துறை சதி
புதுடெல்லி:
இன்று இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, அரசியல்துறை, உளவுத்துறை என
ஒரு துறையையும் விட்டுவைக்காமல் காவித்துறை புகுந்து இருப்பதை நம்மால்
நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தற்போதைய காலச்சூழ் நிலையில்
பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை எப்படியாயினும் முடக்கிவிட வேண்டும்
என்ற எண்ணத்திலேயே இது போன்ற துறைகள் தீவிர முயற்ச்சி செய்து வருகின்றன.
Tuesday, 6 December 2011
பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் கோரிக்கை
சென்னை:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு19 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்களின் இறை இல்லமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.
பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்..
சென்னை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் முஸ்லிம்களின் இறையில்லமும், இந்தியாவின் வரலாற்று சின்னமுமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார ஹிந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளால் இடித்துத்தள்ளப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் முஸ்லிம்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.மேலும் இந்த பயங்கரவாத செயலை புரிந்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர். நீதி மறுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் அநீதிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் சார்பாக கண்டன நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை...
சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
சமூக நீதி மாநாட்டை சீர்குழைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்...
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, வழக்கை விரைந்து முடிக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில்; “டிசம்பர் 6,1992 இதே, நாளில் இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர்.அம்பேத்கர் நினைவு நாளில் அயோத்தியில் “பாபரி மஸ்ஜித்” பாஸிச சங்பரிவாரக் கும்பலால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. கோடிக்கணக்ககான மக்களின் இதயங்கள் சுக்கு நூறாக இடிந்து போனது.
Friday, 2 December 2011
இஸ்லாத்திக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு...
இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன் அவைகள் தொடர்புபடுத்தி வருதாகவும் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுமற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய தலைவர்களின் மகாநாட்டில் இரண்டாவது நாளன்று உரை நிகழ்த்தும்போது அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் ஊடகங்கள்...
பாட்னா: பீஹா மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இஇளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீர்வு!
முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் நவம்பர் 27, 2011 ஆம் தேதி பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய நாள். புதுடெல்லி புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் 27ஆம் தேதி குவிந்த மக்கள் வெள்ளம் ஆதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் முடிவு நாள் நெருங்கிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக அமைந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய “சமூக நீதி மாநாடு” என்ற நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் அதுவும் ராம்லீலா மைதானத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் நிகழ்ச்சி என்ற செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாதுறைகளிலும் பின் தங்கியே இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரும் சவாலாக இருப்பது அரச பயங்கரவாதமும், வகுப்புவாத சக்திகளுமேயாகும்.
ராஜஸ்தான், பீஹார், அஸ்ஸாம், உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை கொடுமையானது. நித்தம் நித்தம் கல்வரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமான முறையில்
Thursday, 1 December 2011
வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு...
ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது.
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை. சர்வதேச ஆய்வில் தகவல்..
உலகத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்ற நகரங்கள் எது என்று ஆண்டுதோறும் மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
இதில் பெல்ஜியத்தில் உள்ள லக்சம்பர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை நகரம் 108-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனி மனித பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் சென்னைக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐற்கு மாற்ற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ கோரிக்கை.
எஸ்.டி.பி.ஐ சார்பாகவும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதோடும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் .
டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)




