Friday, 28 October 2011

தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்


குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’ என ஒரு ஐ.பி அதிகாரி தன்னை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஷைனாவின் தாயார் நஃபீஸா கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாரின் அட்டூழியத்தால் அனுபவித்துவரும் உள்ளத்தை கலங்கச்செய்யும் துயரங்களை தேஜஸ் நிருபருடன் பகிர்ந்துக்கொண்டார் நஃபீஸா.