
தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களா? இரு வாரங்களாக தெற்குஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.
அமெரிக்கா தொடர்ந்து மூக்கறுபடும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.
அமெரிக்காவின் தீவிரஆதரவாளரான,அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல்அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக்காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.


