Monday, 3 October 2011

ஒபாமா அரசுக்கு எதிராக நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டம்: 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ப்ரூக்ளின் பாலத்தில் பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் “வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்” தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் எதிர்க்கட்சிகளின் தேசிய கவுன்சில் உருவாக்கம்

வெளிநாடுகளில் இயங்கும் சிரியா எதிர்க் கட்சிகள் அனைத்தும் “தேசிய ஐக்கிய கவுன்சில்” என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.

இதன் மூலம் அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்களை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.