Thursday, 29 September 2011

இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி!

சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்த மமதா பானர்ஜி, மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைத்தார்,

இதனால் அவர் தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா விட்டு பவானிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மம்தா 54 ஆயிரத்து 213 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுபட்டிணத்தில் தொடரும் காவிகளின் அராஜகம்.......


சேதம் அடைத்த பள்ளி 

பழிக்கு பழி வாங்குவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹக்கானி குழுவை "வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு" என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க  இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம்: பாலஸ்தீனத்தில் சிறுவன் படுகொலை

யூத ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாலஸ்தீன சிறுவன் மரணமடைந்துள்ளான்.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த எட்டு வயது பாலஸ்தீன் சிறுவன் ஃபரீட் ஜாபர் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளான்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மொத்தம் உள்ள 1,32,401 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது. நேற்று மாலை வரை 2,62,634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: விற்பனை ரூ.1.76,000 கோடி இல்லை, ரூ.2,645 கோடி மட்டுமே – தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணத் தகவல்


imagesCAMTJCJGடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை முறைகேட்டால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் இல்லை எனவும் ரூ.2,645 கோடி மட்டுமே நஷ்டம் என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஆர்.பி.சிங்  கணக்கிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

பலஸ்தீன்: ஓபாமா அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?


பலஸ்தீன அப்பாஸ் நிர்வாகம் ஐ.நா. பொதுச்சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் தேதி கோரியுள்ளது. அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளின் கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது.