Tuesday, 27 September 2011

எஸ்.எம்.எஸ்களில் இருந்து இன்று முதல் விடுதலை!

டெல்லி: இந்த வாரத்தில் இருந்து தேவையில்லாத தொலைபேசி விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

வாஷிங்டன்: ’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.