Saturday, 6 August 2011

பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 12‌ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம்


பிளஸ்2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். 
பிளஸ் 2 சிறப்பு தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத `எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

சிரிய அரசுக்கு எதிரான போராட்டம் - 2000 பேர் படுகொலை?

சிரியாவில் மக்கள் போராட்டத்தை கலைப்பதற்கு ஆளும் அரசு நடத்திய வன்முறைகளால் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலரும்,

வெளிவிவகார அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சோமாலியாவில் பட்டினிச்சாவு - உணவுதவி செய்ய முன்வந்தது இந்தியா

பட்டினிச்சாவை எதிர்நோக்கிவரும் சோமாலியாவுக்கு, இந்தியா உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு   
உத்தியோகபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரியா: போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

துனீஷியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம்  தேதி முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் துவங்கின. 

அமெரிக்கா : கடன் உச்சவரம்பு பிரச்சனை நாடாளுமன்றம் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி

அமெரிக்க கடன் உச்ச வரம்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், குடியரசுக் கட்சியனருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது.

உச்சவரம்பு கெடு தேதியான ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக அமெரிக்க நாடாளுமன்றம் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டது. நாடாளுமன்றத்தின் காலதாமதமான இந்த நடவடிக்கை 82 சதவீத அமெரிக்க மக்களுக்கு அதிருப்பதியை தந்துள்ளது.