Friday, 1 July 2011
ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30 ந் தேதி நடைபெறும் என்று
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் என்ற வதந்திகளை
விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
பினாமி சொத்துகளை அரசே எடுத்துக்கொள்ள சட்டத் திருத்தம்
பினாமி சொத்துகளை அரசே
கையகப்படுத்தி எடுத்துக்கொள்ள வகை செய்யும் சட்டத் திருத்தத்தை
நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கலாகிறது.
ஊழல் மற்றும் லோக்பால் சட்டம் குறித்து மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக வரிந்துக்கட்டிக்கொண்டு பிரச்சனை எழுப்ப தயாராகி வரும் நிலையில், அதனை சமாளிக்கும் விதமாகவே இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக தெரிகிறது.

அலுவலகத்தில் மதியம் சோர்வு ஏற்படுவது ஏன்?
அலுவலகத்தில் சிலர் மதியம் ஒரு
பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும்;பூஸ்ட்
குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்
மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம்
நல்லது;இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று
மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் அந்நிய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புச்செலவு ரூ.19,40,00,00,00,00,000
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிலும்,
ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புற்கு செலவழிக்கப்பட்ட தொகை 3.7
லட்சம் கோடி டாலர் முதல் 4.4 லட்சம் கோடி டாலர் வரையாகும் (அதாவது 164
லட்சம் கோடி முதல் 194 லட்சம் கோடி வரையிலாகும்).
பால் தாக்கரேவின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு
மும்பை:சிவசேனை
தலைவர் பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’
2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை பிகார் மக்களின்
உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார்
மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
"'சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!"
"சர்வதேச சமூகத்தின் எல்லாப்
பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று
ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப்
போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை
அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில்
இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து
உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானவை : அறிவியல் இயக்கம் ஆய்வுத் தகவல்
சென்னை : சமச்சீர் கல்வி பாடநூல்கள், பழைய பாடப்
புத்தகங்களை விட தரமானவை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த இயக்கத்தின் மாநிலப்
பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கல்வியாளர் ராஜகோபாலன், பேராசிரியர்
கருணானந்தம் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது:
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமற்றவை என்று தமிழக அரசு
நிறுத்திவைத்துள்ளது. இந்தப் புத்தகங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சார்பில் தமிழகத்தில் 3 இடங்களில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.
உ.பி. தேர்தலில் மாயாவதிக்கு மரண அடி கிடைக்கும்: சர்வே
டெல்லி: உ.பி சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும்
என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், சமாஜ்வாடி கட்சி
மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதேசமயம், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலிஸ் படைகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
சிரியா ஆட்சியின் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஆதரவு அளித்த அந்நாட்டு போலிஸ் படை மற்றும் ஈரான் தேசிய போலிசுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை
விதித்துள்ளது.Thursday, 30 June 2011
முஸ்லிம்களின் பாதுகாப்பே! பாப்புலர் ஃப்ரண்டின் உயிர் மூச்சு
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பு சகோதரர்களே,
இன்று உம்மத்தின் பாதுகாப்பு என்ற பணியை அல்லாஹ்வின் உதவியால் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமே இந்தியா முழுவதும் செய்கிறது. சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் விநாயகர் சதுரத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை அச்சுறுத்தல், பல கிராமங்களில் முஸ்லிம் பெண்களிடம் முஸ்லிம் என்பதற்காக குறி வைத்து கேலி செய்தல்,
முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நினைத்து ஆங்காங்கே தாக்குதல், கொலைகள் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.....தமிழகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமைகளை இப்போதைய இளந் தலைமுறை தெரிந்திருக்க கூட வாய்பில்லை...

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!
புதுடில்லி : பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.
சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்கள் கைது
உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும், மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது. 1960ல், சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி இக்குழு தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்
வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
Wednesday, 29 June 2011
தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
ஸ்ரீபெரும்புதூரில் புதிய கார் தொழிற்சாலை
முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மதியம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் கார் நிறுவன நிர்வாகிகள் கிரிகோரி ஆலிவர், பிரெடரிக், ஜிதேஷ் கார்டியா, சஞ்யூவ் சகா, சாஸ்ஸிகந்த், வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கார் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...
இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...
அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...
இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு...
தமிழ்நாட்டில்ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதில்“மதம்” என்ற கேள்விக்கு“இஸ்லாம்” என்று குறிப்பிடவும்…. “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.
இன்னும்“ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்…
அதில்“மதம்” என்ற கேள்விக்கு“இஸ்லாம்” என்று குறிப்பிடவும்…. “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.
இன்னும்“ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்…
இன்றைய திருமணமும் இஸ்லாமிய திருமணமும்
இன்றைய திருமணம் என்பது கோடிகளை கொட்டி கும்மாளமிடும் விழாவாக ஆகிவிட்டது. இன்றைய அரசியல் வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி சினிமா செட் அமைப்பது போல் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துவதை பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்தி மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு உள்ள அரசியல்வாதிகளும் உண்டு. ஆனால் இன்றைய பணம் படைத்த செல்வந்தவர்கள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதை பார்க்க முடிகின்றது. திருமண விருந்து என்ற பெயரில் இன்றைய விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.ஆடம்பரம் இல்லாத விருந்து
ஷைத்தானுடன் ஓர் உரையாடல்
ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக “விடிவதற்கு இன்னும் நேரம்
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.
மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு
அம்ஸ்டர்டம் : முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1400 வருடங்கள் தொண்மையான மசூதியில் புணரமைப்பு வேலை!
இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொண்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புணரமைப்பு பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.
பெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை
பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.
பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் ?
முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாளை முதல் தொடக்கம்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் நாளை தொடங்குகிறது.
திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் புதிய மோதல்கள் வெடித்து உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் போலிசார் இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றன.
போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள். அப்போது பலர் போலிசார் மீது கற்களை வீசினார்கள். தாகிர் சதுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய புரட்சி போராட்டத்திற்கு முக்கிய களம் ஆகும்.
மும்பையில் மீண்டும் ஸ்வைன் ப்ளூ அபாயம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை உலுக்கி வந்த ஸ்வன் ப்ளூ மீண்டும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது.
மும்பையில் சாண்டிவ்லி என்ற இடத்தில் 37 வயது பெண் ஒருவரும், 3 வய்து பெண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையில் சாண்டிவ்லி என்ற இடத்தில் 37 வயது பெண் ஒருவரும், 3 வய்து பெண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பெல் பணிக்காக 13,673 பேர் தேர்வு எழுதினர்
திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) 475 கைவினைஞர்கள் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஜூலை 2-ம் தேதி பிற்பகல் வெளியாகும். இந்த முடிவுகளை இணையதளத்தில் காணலாம். இருபது மாநிலங்களைச் சேர்ந்த 13,673 பேர் இந்த தேர்வினை எழுதினர்.
பி.எல்.படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) படிப்பிற்கும் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு பி.எல்.படிப்பிற்கும் விண்ணப்பம் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் 20-ந் தேதிவரை நீடிக்கப்படுகிறது.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் கோபால் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் கோபால் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பர்தாவை புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரி
பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலிய போலிஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன் கூறுகையில்,"பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை" என்றார்.
தமிழகத்திற்கு புதிதாக 4 ரயில்கள்: தெற்கு ரயில்வே
சென்னை : தமிழகத்தில் வரும் ஜுலை முதல் 4 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான கைது வாரண்டை லிபியா நிராகரிப்பு
இது குறித்து லிபிய நீதித்துறை அமைச்சர் முகமது அல்-காமூதி கூறுகையில், "மேற்கத்திய உலகின் கருவியாக இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் லிபியா ஏற்றுக் கொள்ளாது. கடாபி மற்றும் அவரது மகனுக்கு லிபிய அரசில் எந்த அதிகாரப்பூர்வமான பதவியும் இல்லை. அதனால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.
கத்தாரில் பெண்களுக்கு மட்டுமான தனி திரையரங்கம்
பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேச திரையரங்கம் ஒன்று கத்தாரின் தோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.
குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு
இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)