Wednesday, 22 June 2011
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி முதல் சென்னையில் கவுன்சிலிங்
உ.பி.,யில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு :மாநில அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு
பிரபல ஜேர்மனி பருவ நிலை விஞ்ஞானி இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கட்டுரை அமெரிக்க இதழான நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் புத்தகத்தில் வெளியாகி உள்ளது.
அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல்
வாஷிங்டன், ஜூன்.22: தலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.
அல் காய்தா தலைவர் பின்லேடனை சமீப காலமாக யாரும் விரும்பவில்லை என்றாலும் அவரது மரணம் மோசமான ஒன்று என பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 14 சதவீதத்தினர் மட்டுமே அவரது மரணம் நல்ல விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
அதிகம் சாப்பிடலாம்!
அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

சிறுபான்மையின மக்களை காக்க புதிய சட்டங்கள்
புது டெல்லி: கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையின மக்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காக நிறுவப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து நடப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வரை அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்டாரா பிரணாப் முகர்ஜி?
டெல்லி: தன்னுடைய அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொறுத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியில், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். அதில், எனது அலுவலகத்தை உளவு பார்க்க முயற்சி நடந்துள்ளது. 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட லாரன் பூத்
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.
இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்
வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியா அல்லது எம்பிக்கலின் வளர்ச்சிநிதியா?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு
பெர்லின் : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.
இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.
தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு
புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 20-ம் தேதி சுமார் 730 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தப் படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த அம்புஜம், இருளாண்டி, பால்ராஜ், பொன்னழகு, ஞானசேகரன் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
Tuesday, 21 June 2011
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள்
Muthupet PFI -- 21/06/2011
15 ஆண்டில் இல்லாத அதிகம்
உலகம் முழுவதும் 4.37 கோடி அகதிகள்
Muthupet PFI -- 21/June/2011
உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் துணை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம் யு.என்.எச்.சி.ஆர். அதன் சார்பில் கடந்த ஆண்டு இறுதி வரை உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடந்தது. அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி
வடமேற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த டியூப்லெவ்-134 விமானம் பெட்ரோஜவாத்ஸ்க் நகருக்கு வெளியே பெஸோவெட்ஸ் விமானநிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.
9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த டியூப்லெவ்-134 விமானம் பெட்ரோஜவாத்ஸ்க் நகருக்கு வெளியே பெஸோவெட்ஸ் விமானநிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம்
திருவாரூர் : சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற முனைவர் ஆர். தினகரன்
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக முனைவர் ஆர். தினகரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த இவர் வேளாண் பட்டதாரி. வேளாண்மை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
+2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை
Muthupet PFI -- 20-June-2011
புதுடெல்லி:இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமச்சீர் கல்வி குறித்து ஆராய புதிய குழு: முதல்வர் ஜெயலலிதா
சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!
2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.
உபியில் இரண்டே நாட்களில் 5 பெண்கள் கற்பழிப்பு: பெண்கள் பீதி
இடா: உத்தரபிரதேசத்தில் 35 வயது விதவையை ஒரு கும்பல் கற்பழித்து, தீ வைத்துவிட்டு கொன்றுவி்ட்டு தப்பியோடிவிட்டது. மேலும் பிரோசாபாத் பகுதியில் 2 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 5-வது கற்பழிப்பாகும்.
உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தான் ராணிபூர் பெலாடி கிராமத்தில் ஒரு 18 வயது இளம் தலித் பெண் கற்பழிக்கப்பட்டார். அதே நாளில் 14 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளது. போராடிய அப்பெண்ணைத் தாக்கி, கண்களை சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியது.

சட்டம் மட்டுமே போதாது!
காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!
Muthupet PFI -- 20-June-2011
கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் படி மக்களுக்கு அதிபர் அழைப்பு
சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
சிரியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

Thursday, 16 June 2011
Wednesday, 15 June 2011
பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்
ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்
கடந்த திங்கட்கிழமை (13.06.2011) ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஜெர்ஸி புஸெக் காஸா மக்களின் வாழ்வியல் நிலைமைகளை நேரில் கண்டறியுமுகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.ஐ.நா.வின் பலஸ்தீன் அகதிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மையத்தின் கீழ் இயங்கும் செவிப் புலனற்றோர் சங்கத்தையும், காஸாவின் மேற்குப் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிக்கூடங்களையும் பார்வையிடுவதற்காக அவரின் விஜயம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஜூன் 13: எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன், ஜூலை 2011-ல் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜவாஹிருல்லா கைது வாரண்டு ரத்து
மனித நேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேரும் ஆஜராக வில்லை.

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!
தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும். அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.ரூ.2130 கோடியை இழந்த மாறன் சகோதரர்கள்: ஒரு அதிர்ச்சித் தகவல்
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாயை மாயமாக மறைய வைத்திருக்கின்றது. அதாவது கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபாய் குறைந்திருக்கின்றது. மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள்.
பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்?
வாஷிங்டன், ஜூன் 15: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் நான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டேன் என டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tuesday, 14 June 2011
மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட்!
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது, சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்ட்ரேட், பிணையில்லா கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறற்ற இடங்கள்-
சென்னை
தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறற்ற இடங்கள்-
சென்னை
ஸ்கூல் சலோ - பாப்புலர் ஃப்ரண்ட்டின் பள்ளி செல்வோம் பிரச்சாரம்
தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல ஊக்குவிக்க பாப்புலர் ஃப்ரண்ட்டின் "ஸ்கூல் சலோ" அல்லது "பள்ளிக்கூடம் செல்வோம்" பிரசாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளிகூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
இணைகின்றன மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்!
ஹைதராபாத்: கடந்த மக்களவைத் தேர்தலிலும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் படுதோல்வியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றாக இணைக்க இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.எதற்காக தனித்தனியாக கட்சி நடத்துகிறோம் என்ற காரணமே தெரியாத கட்சிகள் இவை இரண்டும். வழக்கமாக எல்லா பிரச்சனைகளிலும் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலை தான். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த முடிவை எடுத்தாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்.
வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த சௌதி அரசு முடிவு
உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் வகையில் செளதி அரேபியா அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு
வெளிநாடுகளில் இருந்து சௌதி அரேபியாவிற்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சௌதி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உத்தரவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சௌதியில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் திறனைப் பொறுத்து பணி நிர்யணம் செய்யப்படுகிறது. இதற்காக ‘நிடாகாட்’ என்ற திட்டத்தை வகுத்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
சிறுமி கொலை: சிபி-சிஐடி விசாரணைக்கு மாயாவதி உத்தரவு
லக்னோ ஜூன் 13: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் நிலைய வளாகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட புகார் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு, முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தேடிவந்தனர்.
ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு
புதுதில்லி,ஜூன் 13: ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள்கிழமை அறிவித்தார். எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள். பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.
அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் போர் ஒத்திகை: ரஷ்யா கடும் எதிர்ப்பு
சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது.இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சமச்சீர் கல்வி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்றும் கூறி சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்றும் கூறி சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
Subscribe to:
Posts (Atom)