Muthupet PFI : இஸ்ரேல் - சிரிய எல்லையில் கூடிய பாலஸ்தீனியர்களின் பேரணியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எவ்வித ஆயுதங்களமற்று நிராயுத பாணியாக இருந்த மக்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் பதுங்கியிருந்து நடத்திய இத்தாக்குதலின் அகோரத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி படம்பிடித்து வீடீயோ காட்சிகளாக வெளியிட்டுள்ளது.
Tuesday, 7 June 2011
நாட்டின் மிகப்பெரிய வியாதி ஊழல் - எப்படி ஒழிப்பது? இளைஞர்கள் கேட்கின்றனர் - அப்துல் கலாம்
Muthupet PFI : நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசுகையில்;
விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது. 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.
இது தான் இவர்களது ஊழலுக்கு எதிரான போரா(ஆ)ட்டம் !!!
Muthupet PFI :பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதியில் மதுபானம் விற்ற இலங்கையருக்குக் கடும்தண்டனை...
சவூதி அரேபியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு சவூதி அராபிய நீதிமன்றம் ஐந்து தவணைகளில் 430 கசையடிகளும் ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மதுபானம் அருந்துவதோ விற்பனை செய்வதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இச்செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது.
சுதந்திர தின அணிவகுப்புக்கான பயிற்சிகள்...
வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. தீண்டாமை இல்லாத இந்தியா, வகுப்பு வாதம் இல்லாத ஊழல் இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து சமுதாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும்,
துபாயில் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது
Emirates India Fraternity Forum (EIFF) நடத்தும்
Better Family! Better Society!!
இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி
நாள் : 10.06.2011 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை சரியாக 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், NMC மருத்துவமனை அருகில், அல் கிஸைஸ், துபாய்
உரை தலைப்புகள் :
“நம்மை நாமே புனரமைப்போம்!” - சகோ. வலசை ஃபைஸல்
“குடும்பத்தைப் புனரமைப்போம்!” – சகோ. எம்.எஸ். அப்துல் ஹமீது
“சமூகத்தைப் புனரமைப்போம்!” - சகோ. செய்யது அலீ
நம்மை நாமே சுயமாய் அறிந்து…
குடும்பத்தின் குதூகலத்தில் மகிழ்ந்து…
சமூகத்தைப் புடம் போட்டிட…
சங்கமிப்போம் ஒன்றாய்…!
குடும்பத்துடன் பங்கேற்கலாம். பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 050 – 4265783
குறிப்பு : மிகச் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.
இப்படிக்கு,
செயலாளர்
Emirates Inida Fraternity Forum (EIFF)
கோவையில் காந்தி சிலை உடைப்பு: பாரதீய சேனா அமைப்பினர் இருவர் கைது...
கோவை: காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இஸ்லாமிய உடையில் கால்பந்து ஆட ஈரான் மகளிர் அணிக்கு தடை
டெஹ்ரான்:இஸ்லாமிய உடையில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள களமிறங்கிய மகளிர் அணியினருக்கு தடை விதித்த நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஃபிஃபாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் நடைபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிராக ஆடுவதற்கு ஈரான் கால்பந்தாட்ட மகளிர் அணியினர் கண்ணியமிக்க இஸ்லாமிய ஆடையை அணிந்தவாறு களமிறங்கினர். அப்பொழுது போட்டியை நடத்தும் அதிகாரிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு தடை விதித்தனர்.
க்ரிமினல் குற்றவாளியான ராம்தேவின் உதவியாளர் தலைமறைவு
புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேபாளத்தில் க்ரிமினல் குற்றவாளியாவார்.இவர் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்.
ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதப்போராட்டம் துவக்கிய நாளில் மாலை நான்குமணி அளவில் பாலகிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். உண்ணாவிரத போராட்டம் துவங்கி மாலையில் முடித்துக்கொள்வதாக ராம்தேவிற்காக மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியவர் பாலகிருஷ்ணா ஆவார்.
ராம்தேவ்: போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் மாடல் இனப்படுகொலைக்கு சதி திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்-திடுக்கிடும் தகவல்
புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் ராம்லீலா மைதான போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படு கொலை செய்தது போல் இனப்படு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
Monday, 6 June 2011
யார் இந்த தலிபான்?...
Muthupet PFI : காபூல் நகர மேயராக சுருங்கியுள்ள ஹமீத் கர்ஸாஈ 2001 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தபோது அமெரிக்கக் காங்கிரஸின் தலையாட்டி பொம்மையாக நிலைநிறுத்தப்பட்டார். ஆப்கான் குண்டுகள், மனிதப் பிணங்கள் இரத்தக் கறைகள் படிந்த தேசமாகவே உடைத்து உருமாற்றப்படுகின்றது. தெற்காசியாவில் எழுச்சிபெறும் இஸ்லாமிய அலைகளை தடுத்து நிறுத்த 90 களில் சி.ஐ.ஏ. தீட்டிய திட்டமும் இன்றைய பயங்கரவாதத்திற்கெதிரான ஒபாமாவின் போரும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. வரலாறு நிச்சயம் இவர்களை மன்னிக்காது.
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…
“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.
அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ராம் தேவுக்கு காவியைவிட வெள்ளையே பெட்டர்: லாலு!
பாபா ராம்தேவ் குறித்து கருத்துக் கூறிய லாலு பிரசாத், ஒரு சாது எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு ராம்தேவ் பேசவில்லை என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய வேலைகளுக்காக பாபா ராம்தேவை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாபா ராம்தேவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கைதுச் செய்து பார் என சவால்விட்ட ராம்தேவ் பெண்வேடத்தில் தப்ப முயன்றார்...
புதுடெல்லி:எனக்கு மரணத்திற்கு கூட பயமில்லை. என்னை கைது செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் உண்டா? என சவால் விட்டவாறு ஹைடெக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு போலீஸார் சுற்றி வளைத்தவுடன் கைதுக்கு பயந்து பெண் வேடத்தில் தப்ப முயன்றார்.
நேற்று அதிகாலை ராம்லீலா மைதானத்தில் பல்வேறு நகைச்சுவையான நாடக காட்சிகள் அரங்கேறின. பெரும் போலீஸ் படையுடன் ராம் லீலா மைதானத்தை போலீசார் சுற்றி வளைத்தவுடன் அதுவரை சவடால் விட்ட ராம்தேவ் போலீஸின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மக்கள் கூட்டத்தில் ஓடி மறைந்தார். ஒரு மணிநேர தேடலுக்கு பிறகு பெண் வேடமிட்ட ராம்தேவை பெண்கள் பகுதியிலிருந்து போலீசார் பிடித்தனர்.
வெளிநாடுகளை ஆக்கிரமித்துள்ள இந்திய ஹிந்துத்துவா!!
JUNE 6, ராம்தேவுக்கு ஆதரவாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உண்ணாவரதம் இருந்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக விஸ்வஹிந்து பரிசத்தின் பல்வேறு கிளைகள் அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவர்களோடு சேர்ந்து அமெரிக்காவில் உள்ள மற்ற ஹிந்துத்துவ இயக்கங்களும் சேர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள்!! மோடி அறிவிப்பு!!
ஆமதாபாத், ஜூன் 6: பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
* இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றது இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் யாராலும் மறுக்க முடியாது.
Sunday, 5 June 2011
சுற்றுலாத்தலங்களில் துபாய்க்கு 9-வது இடம்
துபாய்: வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் முதல்10 நாடுகளில் 9-வது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலாவாக வந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர்.
இதற்கு அடுத்த படியாக கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் லண்டனிற்கு அடுத்த படியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப்பது குவைத் மற்றும் பீஜிங் நகரமாகும். தற்போது மூன்றாவது இடத்தை துபாய் பிடித்துள்ளது.
தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்.
சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க வளைகுடா வாழ்இந்தியர்களுக்கு “இடி” விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்! தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.
ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?
ரஃபா எல்லைக் கடவை இன்று எகிப்திய அதிகாரத் தரப்பினால் திடீரென மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை என ரஃபா எல்லைக் கடவைக்கான காவற்படைப் பணிப்பாளர் ஐயூப் அபூ ஷார் தெரிவித்துள்ளார்.உள்ளகத்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலஸ்தீனில் இருந்து எகிப்து நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களுக்கு ரஃபா எல்லைக் கடவையைத் தாண்டிச் செல்ல எகிப்திய அதிகாரத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் இமாம் கொமைனியின் நினைவில்

டெஹ்ரான்:இஸ்லாமிக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லா கொமைனியின் நினைவு நாளில் லட்சக்கணக்கான மக்கள் ஈரானின் நகரங்களில் திரண்டனர்.
கொமைனி மரணித்து 22 வருடங்கள் முடிவுறும் நாளான நேற்று டெஹ்ரானின் தெற்கு பகுதியில் சிறப்பு நினைவுதின நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரை நோக்கி திரண்டு வந்தனர்.
பாபா ராம்தேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜண்டா-எஸ்.டி.பி.ஐ
புதுடெல்லி:பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடத்தப்படுவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள் விஷயத்தில் ஒளிவு மறைவில்லாத நிலைப்பாடு ராம்தேவிற்கோ அவரின் பின்னணியில் செயல்படுபவர்களுக்கோ இல்லை.ஆர்.எஸ்.எஸ் உத்தரவிட்ட அஜண்டாவை செயல்படுத்துவதுதான் ராம்தேவின் நோக்கம் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Saturday, 4 June 2011
காவித் தீவிரவாதத்திலிருந்து திசை திருப்பவே 5 ஸ்டார் சத்தியாகிரகம் : திக்விஜய் சிங்!
பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரைத் தன்னுடைய நிரந்தரத் தலைநகராக மாற்றியமைக்கும் முயற்சிகளில் மிக வேகமாக ஈடுபட்டு வருகின்றது என இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் (ICC) எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமெரிக்கக் காங்கிரஸில் உரை நிகழ்த்தியபோது, 'இஸ்ரேல் தன்னுடைய தற்போதைய ஆள்புலத்தை 1967 ஆம் ஆண்டு எல்லைகளை நோக்கி ஒருபோதும் சுருக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும், இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகராக ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலமே அமைதல் வேண்டும் எனத் தான் விரும்புவதாக'வும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாராசிங் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகையில் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் பெயர்
ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் மூத்த பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர ராத்தோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் வசுந்தர ராஜே அமைச்சரவையில் பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவி வகித்தார்.ஜெய்ப்பூரில் சாராய மாஃபியா கும்பலைச்சார்ந்த குண்டரான தாராசிங் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பின்னர் தாராசிங்கின் உறவினர்கள் என்கவுண்டர் போலியானது
என புகார் அளித்தனர்.உறவினர்களின் கோரிக்கையை ஏற்று 2010 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சி.பி.ஐ யிடம் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு போலீஸ்காரர்களை சி.பி.ஐ
வெற்றி பெறுவதற்கு...
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
போர்க்குற்றவாளி மிளாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்
ஹேக்:போஸ்னியாவில் அப்பாவி முஸ்லிகளை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் போஸ்னியன் செர்ப் ராணுவ தலைவன் ராத்கோ மிளாடிச் நேற்று ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
தான் ஒரு நோயாளி எனக்கூறிய மிளாடிச், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு நீதிபதி அல்போன்ஸ் ஓரியிடம் கோரிக்கை விடுத்தான். ’எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசிக்க தேவையில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக புகார் அளிக்கும் எண்ணமும் இல்லை. நான் எனது மக்கள் மற்றும் நாட்டை பாதுகாத்துள்ளேன்’ என மிளாடிச் தெரிவித்தான்.
தான் ஒரு நோயாளி எனக்கூறிய மிளாடிச், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு நீதிபதி அல்போன்ஸ் ஓரியிடம் கோரிக்கை விடுத்தான். ’எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசிக்க தேவையில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக புகார் அளிக்கும் எண்ணமும் இல்லை. நான் எனது மக்கள் மற்றும் நாட்டை பாதுகாத்துள்ளேன்’ என மிளாடிச் தெரிவித்தான்.
ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா
ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.
எச்.ஐ.வி பாதிப்பு: இந்தியாவுக்கு பத்தாவது இடம்
வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லிபிய தலைநகரில் அமெரிக்கப் படைகள் தொடர் குண்டு மழை: 40 பேர் பலி
லிபியா அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி அந்த நாட்டு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கடாபி ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதனால் அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது போர் தொடுத்துள்ளன.
தினமும் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் திரிபோலி நகரில் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்கின. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் யின் களவு காதலன்!!
நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்.
ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!
அதிபர் மாளிகை மீது குண்டு வீசித் தாக்குதல்
ஏமன் அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அலி அப்துல்லா சலேத் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை அதிபர் ஆதரவு படையினருக்கும் பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அதிபர் மாளிகை மீது திடீரென குண்டுகள் வீசப்பட்டன.
இதில் அலி அப்துல்லா சலேத் உயிரிழந்து விட்டதாக எதிர்க்கட்சியினரால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.
Friday, 3 June 2011
மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜேர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.
இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜூன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மெனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜேர்மனி முதலில் குறிப்பிட்டது.
புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தம்-விசாரணை நடத்தப்படும்: ஆளுநர்
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.
மாட்டு இறட்சியும்! ராம கோபால ஐயரும்!
உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம்.
ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை?
ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்:அதிகரித்து வரும் எதிர்ப்பு
மும்பை/டெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குருவும், ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகளை சம்பாதித்துள்ள பாபா ராம் தேவ் நடத்தவிருக்கும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத நாடகத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் அரசியல் நாடகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திர பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறையில் கொடுமை:அப்துல் நாஸர் மஃதனி புகார்
பெங்களூர்:தன்னை சிறை அதிகாரிகள் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு சிகிட்சை வசதிகள் அளிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கடைப்பிடிக்க தயாராகவேண்டும் எனவும் அப்துல்நாஸர் மஃதனி புகார் அளித்துள்ளார்.
பெங்களூர் மத்திய சிறையின் சூப்பிரண்டிற்கு இந்த புகாரை அவர் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊனமுற்ற நான் நீரழிவு நோய்,உயர்ந்த இரத்த அழுத்தம்,அல்ஸர் போன்ற நோய்களால் அவதியுறுகிறேன்.
Thursday, 2 June 2011
மாணவிகளுக்கான மேல்நிலை கல்வியை இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளை
சென்னை: "பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புற ஏழை மாணவிகள் மத்தியில், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அண்ணா பல்கலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர்கல்வி பயில அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் வழியில் பயின்று,
மாவீரன் மருத நாயகம்....
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
காஸா ரபாஹ் எல்லை மீது மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் !
பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி...
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.
நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.
"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும்
"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும்
ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்
சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம் ஊழலே: முதல்வர் ஜெயலலிதா!
புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா, ”மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெரிய அளவில் நடந்துள்ள ஊழல்தான். அதிலும் முக்கியமாக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதுதான்.” என்று கூறியுள்ளார்.
மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் பலத்த கமிஷன் பெறுவதற்காக, வேண்டுமென்றே மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஹலால் பீர் அருந்துவதற்கு தடை
படாங் செராய்:மலேசியாவில் தற்போது விற்பனையாகும் ஹலால் பீரை முஸ்லீம் மக்கள் அருந்துவதை உடன் நிறுத்துமாறு மலேசிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பானம், “ஹலால் முறைப்படி தயாரிக்கப்பட்ட பீர்” என்ற விளம்பரத்துடன் அங்கு விற்பனையாகின்றது.
தேசிய பத்வா குழுவின்படி உணவிலும் பாணத்திலும் அனுமதித்துள்ள ஆல்கஹால் அளவை விட அதிக சதவிகிதம் இருக்கிறது என்று மலேசிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர் டேடுக் ஜமீல் பகாரம், ஹலால் பீர் பற்றிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்
ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தாக்க இஸ்ரேல் முன்னாயத்தம்?
இஸ்ரேலிய ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் உத்தரவுகளை ஏற்க மறுத்து காஸா கடற்கரையை அண்மிக்குமாக இருந்தால், அவற்றின்மீது தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வாஜ்பாய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப முடிவு!
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு தீவிரவிசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 1999-ம் ஆண்டு சிறிது காலம் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்தார்.
இதனால் அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக என்ன நடந்தது என்று முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவின் சொத்து மதிப்பு 1100 கோடி
புதுடெல்லி:ஊழலுக்கு கறுப்பு பணம் பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி ஆகும்.
உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தனது யோகா வகுப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அஸ்தா டி.வி என்ற தொலைக்காட்சி சேனலும் இந்த யோகா குருவுக்கு சொந்தம்.
தனிமையில் தியானம் நடத்துவதற்காக ஸ்காட்லாந்தில் கும்ப்ரே தீவை இரண்டு மில்லியன் ஃபவுண்டிற்கு சொந்தமாக்கியுள்ளார் பாபா ராம்தேவ். பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளை மட்டுமல்ல கூடவே திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளை,பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியன ராம் தேவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)


























