Friday, 27 May 2011

மூடி மறைப்பேன் என்னை !



குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

நன்றி: யாசர் அரஃபாத்
நன்றி: harbour-popularfront.blogspot.com

ஊனம் ஒருதடையல்ல...


    வாழ்க்கையில் சாதிப்பதகு ஊனம் ஒரு தடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
 அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ் லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச்சிறுவன் தன்னிடம் வைத்துள்ள வையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள் ளனா.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோ ராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒரு வனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக்கத்தை வெல்வதே ஆகும்.

10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்


10ம் வகுப்பு தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தை 11 பேர் பிடித்துள்ளனர். 500க்கு 494 மார்க்குகள் பெற்று 24 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு: 
1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.
3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.
4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை. 

10ம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதல் இடம்...


10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 5 மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.

பாப்ரி மஸ்ஜித்:உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ 19 வருடங்களுக்கு பிறகு கைது ..


பாட்னா:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வேளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய அவுரங்காபாத்தை சார்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராமாதர் சிங் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் இவரை 14 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

1995-ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ராமாதர் சிங். அவுரங்காபாத் நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. பீகார் மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் கடந்தவாரம் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த உடனேயே பாட்னா உயர் நீதிமன்றம் ராமாதர் சிங்கிடம் கீழ் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஆட்சியின் நற்பெயரை கெடுக்க கூடாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமாதர் சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு வாத துவேசத்தை உருவாக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக ராமாதர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக்கில் பிரம்மாண்ட கண்டன பேரணி


பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தை நீண்டகாலம் ஈராக்கில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சி தொடரும் வேளையில் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி பாக்தாதில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஸதர் நகரத்தில் 20 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த பொழுதிலும் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தற்போதும் ஈராக்கில் தொடர்கிறது.

ஷியா முஸ்லிம் தலைவர் முக்ததா அல் ஸதர் இப்பேரணிக்கு தலைமை வகித்தார். 2011 டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறும் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளிடையே ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை பேண பிரதமர் நூரி அல் மாலிக்கி தயாராக வேண்டும் என ஸதர் கோரிக்கை விடுத்தார்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகள் ஈராக்கை ஆக்கிரமித்து துவசம் செய்தன. தொடர்ந்து ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி கொலை செய்தனர். ஆனால், அமெரிக்காவால் எவ்வித பேரழிவு ஆயுதங்களையும் ஈராக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை

SDPi வெறும் அரசியல் கட்சியல்ல, ஒரு மிஷன்: இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை

பெங்களூரு: புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை:
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.




ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!


மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!


அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.


அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!


தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே,குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

Thursday, 26 May 2011

போலி ஜிஹாதியம் – ஊடகத்தின் ஊன பார்வை…





இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க….
ஜிஹாதுன்னா….?
பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது….. இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்…. இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,
இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.,
ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

யார் இந்த ரஜினிகாந்த்? – ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்,…


   செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு...

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகளும் சிவசேனாவைச் சேர்ந்த ராஜராம் ரேகே என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனாவின் மக்கள் தொடர்பு அலுவலராகக் கருதப்படும் ராஜாராம் ரேகே மூலம் ஹெட்லி சிவசேனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரேகே இதனை மறுத்துள்ளார். தான் சிவசேனாவில் உறுப்பினர் இல்லை என்றும் கணினிப் பொறியாளரான தாம் அவ்வப்போது சமூக நலப் பணிகளும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஹெட்லிக்கு ரேகே அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் ரேகே அரசியல் பின்னணி உள்ளவர் என்பது தெரிய வருகிறது.

ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்


காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் துஅப் நகரத்தின் கட்டுப்பாட்டை தாலிபான் போராளிகள் கைப்பற்றினர். போராளிகளும் ஆப்கான் ராணுவம் இரண்டு தினங்களாக கடுமையான போராட்டத்தை இந்நகரத்தில் நடத்தினர். போர் தந்திரத்தின் காரணமாக ராணுவம் வாபஸ் பெற்றுள்ளதாக போலீஸ் கமாண்டர் தெரிவிக்கிறார்.

ஏராளமான போராளிகளும், போலீஸ்காரர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் மீடியாவுக்கு அளித்த இ-மெயிலில் மாவட்டம் முழுவதும் தங்கள் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதியும் பார்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

டெல்லி: வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி...

டெல்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.


பீகார், பாட்னாவிலிருந்து 25.05.2011 அன்று டெல்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. 

’எனது மகன் அப்பாவி’-பி​ரான்சில் கைது செய்​யப்பட்ட நியாஸின் தாயார் பேட்டி


மதுரை:அல்காயிதாவுடன் தொடர்பு என குற்றம் சாட்டி பிரான்சு நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சார்ந்த நியாஸ் அப்துற்றஷீத் அப்பாவி என அவரது தாயார் பாத்திமா பேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:எனது மகனுக்கு தடைச்செய்யப்பட்ட இயக்கமான சிமி உடனோ அல்லது வேறு இயக்கத்துடனும் சம்பந்தமில்லை. ஒழுங்காக தொழுகையை பேணுவான் அவ்வளவு தான்.

ஒருபோதும் நியாஸால் தீவிரவாதியாக மாற இயலாது என என்னால் உறுதியாக கூற இயலும். ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?

Wednesday, 25 May 2011

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கௌரவ கொலைகள்


குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
       பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கணவனுக்குக் கட்டுப்படுதல்...


ஒரு பெண் எப்போதிருந்து கணவனுக்கு கட்டுப்படவேண்டும்?
ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்;மனைவியரான அவர்கள்மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகளும் காணப்படு கின்றன. ஆண்களுக்கு அவர்கள்மீது ஓர் படித்தரம் உள்ளது. (பகறா: 228)
ஆண்கள் பெண்களைவிட வும் சக்திபடைத்தவர்களாவர். அல்லாஹுத்தஆலா அவர்களில் சிலரைவிடவும் மேன்மையாக்கி சிலரை வைத்திருக்கிறான். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்காக செலவளிக்கின்றார் கள். (நிஸா: 34)
எனவே, ஒரு பெண் நன்மையான விடயங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டியது அவளது கடமையாகும். பாவங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் கட்டுப்படக்கூடாது. நபி (ஸல்) அவர்களிடம் ‘பெண் களில் சிறந்தவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்; அவளைப் பார்த்தால் கணவன் சந்தோசப் படக்கூடிய அவன் ஏவினால் கட்டுப்படக்கூடிய பெண்ணா வாள் என்றார்கள். (நஸாயி)
ஒரு பெண் கணவனின் வீட்டில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு கட்டுப்பட தொடங்க வேண்டும். அந்த வீட்டை வசதியுள்ளதாக ஆக்க வேண்டும். அல் லாஹ் மிக அறிந்தவன்.

வெற்றி பெறுவதற்கு...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.  வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

இரும்பு மனிதர்கள்!


‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர்.
ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.

சிறைச்சாலை இல்லை!! சிங்கராச்சாலை!!

May 25, திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள்.

பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.

அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயில், விமானம் முதல் சிறைவரை இவர்களுக்கு முதல் இடம்தான்.

சிறை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்க்கான இடமாக இருக்கவேண்டுமே அல்லாமல் மீண்டும் குற்றம் செய்ய தூண்டுவதாக அமைந்துவிட கூடாது. அதிலும் ஏழை பணக்காரன் பாகுபாடோடு இருக்குமே ஆனால் அதைவிட கேடு இந்த நாட்டிற்கு வேறு ஒன்றும் இல்லை.

கருணையுள்ளம் கொண்டோரே… வாரி வழங்கிடுவீர்…


திருநெல்வேலி மாவட்டம் மேலபாளயத்தை சார்ந்த சகோதரர்.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆறு வயது மகன் ஜெ.இஜாஸ் அஹமது பிறவியிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காத குறையுள்ளவன்.
ijas
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சகோ.ஜாகிர் ஹுசைன் தனது மகனை எப்படியும் குணபடுத்திட தொடர்ந்து தனது சக்திக்கும்மீறி முயற்சித்து வருகிறார்இறுதியாக சென்னை KKR மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலமாக இன்ஷாஅல்லாஹ் சிறுவன் இஜாஸ் அகமதுவின் குறையை நீக்கிவிடலாம் என உறுதியளித்துள்ளனர்.சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 7.5 லட்சம் வரை தேவைபடுகிறது.

ஏழ்மையின் இயல்புநிலையில் இருக்கும் சகோ.ஜாகிர் ஹுசைன் கருணையுள்ளம் கொண்ட சமூக சகோதரர்களின் உதவியை நாடுகிறார். கடந்த மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய சிகிச்சை பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை. எனவே சில வாரம் தவணை கேட்டிருக்கிறார் மருத்துவர்களிடம்.
ஆகையால் அந்த ஏழை சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட அல்லாஹுவின் அன்பிற்காக சிறுவன் ஜெ.இஜாஸ் அஹமதுவின் சிகிச்சைக்கு தங்களாலான பொருளாதார உதவியை விரைந்து வழங்கிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்… இன்ஷாஅல்லாஹ் ஏக இறையவன் சிறுவன் இஜாஸ் அஹம்துவிற்க்கு சிகிசையின்மூலமாக ஊனத்தை நீக்கிவைப்பனாக… பூரண ஆரோக்கியத்தை அளிதிடுவானாக… அவனது சிகிச்சைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிடும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் சிறப்பை தருவானாக…
மேல் விபரங்கள் மற்றும் பொருளாதார உதவி அளித்திட சிறுவன் ஜெ.இஜாஸ் அகமதுவின் தகப்பனார் சகோ.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களை +919095573103 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளவும்… வஸ்ஸலாம்

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா




இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக (ironclad) வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tuesday, 24 May 2011


பலஸ்தீன் ஆக்கிரமிப்பு ‘நக்பா’ நினைவு தினத்தில்

பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ ‘நக்பா’ தினம்  ஆண்டுதோறும்  பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின்   இந்த வருடம்  63 ஆவது ஆண்டு நிகழ்வு, ‘ஆக்கிரமிப்பு தினம்’ இன்று ஞாயிற்று கிழமை பலஸ்தீனில் நடைபெருகின்றது ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகள் பலஸ்தீனம் முழுவதும் அனுஷ்டிக்கபடுகின்றது அவை பேரணியாக , ஆர்பாட்டங்களாக , கண்ட கூட்டங்களாக , பலஸ்தீனை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்ரேலிய படை மீதான கல் வீச்சாக என பல பரிமானங்களில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள், ரமல்லாஹ் , காஸா, மேற்கு கரை பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறவேண்டும் என்பதை உறுதிசெய்து வருகின்றனர் இந்த ஆர்பாட்டங்கள் , பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை சுட்டு வருகின்றது.

இதில் 46 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் காஸாவின் வட பகுதி நோக்கி ஆட்டிலறி குண்டுகள் , இராணுவ டாங்கிகள் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .

காஸாவில் உமரி மஸ்ஜிதில் ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியா இந்த மஸ்ஜிதில்தான் ஜிஹாத் ஆரம்பிக்கப்பட்டது என்றும் எமது மக்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்திய ‘போராளி மாதிரி’ (model of fighters) ஒன்றை -உலகிற்கு – வழங்கினார்கள் இன்று வாலிபர்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்தி வியக்கதக்க சாதனைசெய்து எதிரி தோல்வியை ஏற்றுகொள்ள நிர்பந்தித்துள்ளனர்  தியாகம் இரத்தம் இன்றி ஜிஹாத் என்பது இல்லை தியாகங்கள் இன்றி சுதந்திரம் என்பது இல்லை எமது மக்கள் தியாகங்களின் கட்டணத்தை (bill) செலுத்த தயங்கி நிற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இங்கு கருத்துரைக்கையில் பலஸ்தீன் மூன்று காரணங்களினால் வெற்றியை அண்மித்து விட்டது ஒன்று ஹமாஸ், பாதா ,மற்றும் ஏனைய பலஸ்தீன அமைப்புகள் தமக்குள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளமை ,இரண்டாவது அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றம் இது பலஸ்தீன விடையத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இஸ்ரேல் பல மட்டங்களில் தோற்று வருகின்றமை என்றும் தெரிவித்துள்ளார்.


ஜீன் 1 முதல் ஜீன் 7 வரை ஆபாச எதிர்ப்பு பிரசாரம் - பாப்புலர் ஃப்ரண்ட்

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே. ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்புகள் உடைத்தெரியப்பட்டு வருகிறது. அறைகுறை உடைகளும், ஒழுக்க கட்டுபாடின்மைகளும், இதனை அங்கிகரிக்கும் சமூகம் மற்றும் அரசு, என்று சமூகம் சீரழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.
ஆபாசத்தை முன்நிறுத்தி சர்வசாதரணமாக இன்று பல ஆடைகள் தயாரிப்புகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் எனப் பலர் தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றார்கள். அரசோ இத்தகைய ஆபாசத்திற்கு எதிராக மக்களை உருவாக்குவதை விட்டு விட்டு ஆபாசத்தினால் எழும் தீமைகளை எவ்வாறு தடுப்பது என்பதிலே கவனம் செலுத்துகிறது. மக்களும், ஒரு மனிதனை ஒழுக்கத்தை கொண்டு மதிப்பிடாமல் வெறுமனே பணத்தை கொண்டு மதிப்பீடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகளின் விளைவால் மென்மேலும் இத்தகைய ஆபாசங்கள் வளர்ந்து பல தீமைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஈவ் டிசிங், சிறுமிகள் உட்பட பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், விபச்சாரம், கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு மற்றும் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள், இதனால் கணவன் அல்லது மனைவி கொலை செய்யப்படுதல், விரக்தி மற்றும் தற்கொலை, விவாகரத்து போன்ற பலவேறு சமூக தீமைகள் அன்றாடம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இருந்து சமூகம் மீளவேண்டுமெனில் ஆபாசத்தின் ஊற்றாகிய பார்வையில் இருந்து தொடங்கி எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல்பாடு போன்ற அனைத்திலிருந்தும் மீள வேண்டும்.
ஆபாச பார்வைகளே தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்தீய எண்ணம் மன குமுறலை ஏற்படுத்துகிறது. இந்த குமுறல் தீய செயல்களுக்கு வடிவம் கொடுக்கிறது. எனவே ஆபாசத்ததை ஒழிக்க பார்வைகளிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து ஆபாசத்தின் பல தீய முகங்களை விட்டு விலக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறை திருக்குரானில் பின் வருமாறு கூறுகிறான் -

(நபியே) முஃமின்கனான(நம்பிக்கையாளர்கள்) ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக - அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். - (குர்ஆன் 42.30)

இத்தகைய ஆபாசத்தினால் குடும்ப அமைப்பு சீரழிக்கப்படுகின்றது. கணவன்-மனைவியிடையே உள்ள பிணைப்பை பலகீனப்படுத்துகிறது. இத்தகைய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் மற்றும் தகாத உறவில் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் பல சிறிய குற்றங்களிலிருந்து பெரும் குற்றங்கள் வரை புரியவும் காரணமாகிறது.

எனவே இத்தகைய ஆபாசம் என்ற சமூக தீமையை ஒழிக்கும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜீன் 1 லிருந்து ஜீன் 7 வரை ஆபாசத்திற்கெதிரான பிரசாரத்தை செய்ய உள்ளது. ஆபாசத்தை ஒழித்து ஆரோகியமான சமூகத்தை உருவாக்குவோம்.


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு : சென்னை முதலிடம்!


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சென்னை மண்டலம் 91.32 விழுக்காடு தேர்ச்சி பெற்று, நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்த  சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வினை மொத்தம் 6,75,658 பேர் எழுதியுள்ளனர். இதில் 5,52,091 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள்து விழுக்காடு 81.71 ஆகும். இது கடந்த ஆண்டைவிட  1.84 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த ஆண்ட்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளனர் (86.93விழுக்காடு).
மண்டல வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு விபரம் பின்வருமாறு:
சென்னை மண்டலம் : 91.32
அஜ்மீர் மண்டலம் : 85.05
பஞ்சகுலா மண்டலம் : 79.85      செய்திகள் 
டெல்லி மண்டலம் : 85.45
குவஹாத்தி மண்டலம் : 70.91
அலகாபாத் மண்டம் : 73
புவனேஸ்வர் மண்டலம் : 84.07

சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதிய 61,337 மாணவ, மாணவியரில் 56,012 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களில் 89.79 விழுக்காடு பேரும், மாணவிகளில் 93.21 விழுக்காடு பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.திவ்யா 500-க்கு 492 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி சுமனா 491 மதிப்பெண் பெற்றுள்ளார். கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சென்னை மாணவ, மாணவியருக்கு நேற்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. வெளியூர் மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Monday, 23 May 2011

அமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விசாரணைக்கு ஜெ. உத்தரவு


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் இன்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.


அவரது மறைவால் அதிமுகவினர் சோகமடைந்துள்ளனர். மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது மரியம் தியேட்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மரியம் பிச்சையின் மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகலில் நடந்த எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தனி விமானம் மூலம் திருச்சி விரைந்தார்.


மரியம் பிச்சையின் உடலுக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மரியம் பிச்சையின் மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெரும் திரளான அதிமுகவினர், மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் நிலவவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காரில் ஏற்ப போன ஜெயலலிதா, அதை நிறுத்தி விட்டு செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். அவர்களிடம் அவர் கூறுகையில்,


அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.


ஜெயலலிதா இப்படிக் கூறியிருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. மரியம் பிச்சையின் மரணம் குறித்து தீவிர போலீஸ் விசாரணை நடைபெறப் போவதாகவும் கூறப்படுகிறது.


டிரைவரைப் பிடித்து போலீஸ் விசாரணை


இதற்கிடையே, மரியம் பிச்சையின் கார் டிரைவர் ஆனந்தனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் அமைச்சர் மட்டுமே பலியாகியுள்ளார். அவரது உடல் நசுங்கிப் போய் விட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தன் ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
ஆனந்தன் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவராவார். அவரிடம் போலீஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முல்லா உமர் கொல்லப்பட்டாரா?-தாலிபான் மறுப்பு


இஸ்லாமாபாத்:தாலிபான் தலைவர் முல்லாஉமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தாலிபான் இதனை மறுத்துள்ளது. ஆப்கானின் தனியார் தொலைக்காட்சி  சேனலான டோலோ (tolo) உமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

குவாட்டாவிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்று கொண்டிருக்கும் போது குண்டடிபட்டு இறந்ததாக அச்செய்தி கூறுகிறது. தாலிபானின் ஆன்மீக தலைவரும், ஆப்கானின் உரிமைகளுக்காக போராடும் போராளி தான் முல்லா உமர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் 2-வது இடத்தில் முல்லா உமர் உள்ளார். இவரை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இயலவில்லை.

முல்லா உமரின் தலைக்கு அமெரிக்கா ஒரு கோடி டாலர் பணத்தை பரிசாக அறிவித்திருந்தது. தாலிபானின் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ’இது பொய்யான பரப்புரையாகும். முல்லா உமர் ஆப்கானிஸ்தானில் நலமாக உள்ளார். முஜாஹிதீன்களை வழிநடத்துகிறார்.’ என தெரிவித்துள்ளார்.

பாப்ரி மஸ்ஜித்:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் படி நடவடிக்கை இல்லை


புதுடெல்லி:ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ புதிய வழக்கை பதிவு செய்யாது. உள்துறை அமைச்சக அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

புதிய வழக்கை பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் முதல் நிலை சான்று அறிக்கையில் இல்லையென சி.பி.ஐ கூறுகிறது.இதன் காரணமாக புதிய வழக்கை தொடரவோ கூடுதலாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ இயலாது என சி.பி.ஐ கூட்டத்தில் விளக்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பா.ஜ.க தலைவர்களான வாஜ்பேய், எல்.கே.அத்வானி உள்பட 68 பேர் குற்றவாளிகள் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்தது. ஆனால், இவர்களை குற்றவாளிகளாக சேர்த்து வேறொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ கூட்டத்தில் தெரிவித்தது. லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை தெளிவாக ஆய்வு செய்ய சி.பி.ஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்திருந்தது. அதேவேளையில்,அறிக்கையின் சில பக்கங்கள் குறித்து விசாரணை நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
17 ஆண்டுகள் விசாரணையின் இறுதியில் 2009 ஜூன் மாதம் 30-ஆம் தேதி நீதிபதி லிபர்ஹான் மத்திய அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.இதற்கிடையில் கமிஷனின் கால அவகாசம் 48 தடவை நீட்டிக்கப்பட்டது.

ஆளில்லா விமானத்தாக்குதல்:பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென கோரி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் தலைமையில் கராச்சியில் போராட்டம் நடைபெற்றது. கராச்சி துறைமுகத்திற்கு அருகே துவங்கிய போராட்டத்தின் முதல் நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஆளில்லா விமானத்தாக்குதல்களுக்கு எதிராக நேட்டோவின் பாகிஸ்தானில் உள்ள தேவையான பொருட்களின் விநியோகத்தை தடைச்செய்ய தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பாகிஸ்தானிற்கு எதிரான போர் அல்ல. இது பாகிஸ்தானின் இறையாண்மையை தகர்ப்பதாகும். மேலும் தீவிரவாதிகளை வளரச்செய்யும் என இம்ரான்கான் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் அரசு ஒருபுறம் தாக்குதலை கண்டிக்கிறது மறுபுறம் அமெரிக்காவை ஆதரிக்கிறது. இரண்டு தடவை பாராளுமன்றம் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதன்பிறகு 24 மணிநேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என இம்ரான் கான் குற்றஞ்சாட்டுகிறார்.

பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் அக்கிரமத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அரசுக்கு முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு இடைக்கால தேர்தலை சந்திக்கட்டும் என இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில்,ஆளில்லா விமானத்தாக்குதல் தொடந்தால் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பாஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சி.ஐ.ஏவின் துணை இயக்குநர் மிஷேல் மோரலுடன் சந்திப்பு நடத்தியபிறகு பாஷா கடுமையான வார்த்தைகளால் பதிலளித்தார். ஐ.எஸ்.ஐயின் பல்வேறு துறை தலைவர்களுடன் மோரல் சந்திப்பை நடத்தினார். அமெரிக்க குடிமக்களை நாட்டில் கட்டுப்படுத்தவேண்டும் என ஐ.எஸ்.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மரியம் பிச்சை மரணம்: அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், திருச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காரைகாலில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களில் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்குயருள்வாயாக! ‘ (அல்குர்ஆன் 25:74)

இயந்திர உலகின் பிடியில் இறுகச் சிக்கித்தவிக்கும் இன்றைய சூழ்நிலையில் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமான குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வரும் அவலம் வருத்தத்திற்குரியது. இதனைக் களைந்து இறைவனும் இறைத்தூதரும் இயம்பிய இனிய வழிமுறைகளைக் கொண்டு, அழகிய குடும்பத்தையும் வளமான சமூகத்தையும் புணர்நிர்மாணம் செய்வது நம் அனைவரின் கடமை.

ராணுவத்தில் பணிபுரிய வேண்டுமா?...


தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்




திருச்சி அருகே பாடலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது.
பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
மோதிய லாரி எங்கே ? தப்பி ஓடிய லாரியை தேடும் பணி தீவிரம் : திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .மி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
விபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கும் நடத்தி வந்தார்.
இன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவிப்பிரமாணம் : சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., புறப்படுகிறார்: அமைச்சர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., மதியம் ஒரு மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்படவிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு:பாப்புலர் ப்ரன்ட் அமைப்பு வலியுறுத்தல்


இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா வலியுறுத்தியது.பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் நிஜாம்முகைதீன் அறிக்கை:சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். மாற்றத்தை விரும்பி தமிழக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகள் சிறப்பான துவக்கம்.
மின்தட்டுப்பாட்டை சீர்செய்வது, வீடு கட்ட நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை.சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு நிஜாம்முகைதீன் தெரிவித்தார்.எஸ்.டி.பி.ஐ., மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில், “”இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SDPi புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு...

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு


SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)
செயலாளர்கள் - அப்துல் ரஷித் அக்வான் (டெல்லி), Dr. ஆவாத் ஷெரிப் (கர்நாடகா)
பொருளாளர் - உமர் கான் (மேற்கு வங்கம்)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 35 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்
KKSM தெஹ்லன் பாகவி, முஹம்மத் முபாரக்,A.அப்துல் ஹமீது
S.M.ரபிக் அஹ்மத்