Friday, 20 May 2011




கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்ற படும் போது
M.ஷாமில் முஹம்மட்
இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு  கோமா நிலையில் போடப்பட்டது, இன்று குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 ஆண்டில் கால் பதிக்கின்றது.
மேற்கு தனது நாசகார மந்திரமான “ஒற்றுமையை பிரிவினையாக உருமாற்றி தேசத்தை கைபற்று” என்ற மந்திரத்தை தனது கிருஸ்தவ மிஷனெரிகள் மூலமும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் தேசியவாதம் என்ற கொடியின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தி முஸ்லிம் தேசத்தை துண்டுகளாக உடைத்து, உடைக்கப்பட்ட பகுதிகளை மேற்கு தனது இராணுவ ,மற்றும் நாகரீக கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது பலமான முஸ்லிம் உம்மாஹ் என்ற கட்டமைப்பை உடைந்தது முஸ்லிம்கள் பலம் இழந்தனர் முஸ்லிம் உம்மாஹ் தேசிய வாதம் என்ற கொடிய விஷம் ஊட்டப்பட்ட சமூகமானது.விரிவாக பார்க்க1,2
கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 ஆண்டுகள் தான் கடந்துள்ளது மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதாதுர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி  என்று வர்ணிக்கப்படும் நபரை பயன்படுத்தி ஐரோப்பியர் 13 நூற்றாண்டுகளாக பலத்துடனும் பலவீனத்துடனும் ஏதோ ஒருவகையில் உலகில் நிலை பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை விழ்த்தினர் , அழித்தனர் இதற்கு முன்னர் 1908ல் துருக்கியில் மேற்கின் ஆதரவுடன் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது இவர்கள் இஸ்லாம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்தாமல் மேற்கின் பிரித்தாளும் தத்துவமான  தேசியவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி துருக்கியில் கலகம் செய்யதனர் அதற்காகவே மேற்கு சக்திகளால் உருவாக்கப்பட்டனர் இந்த கலகத்தில் இவர்களின் கை ஓங்கியது நிர்பந்தங்களின் காரணமாக கிலாபத் அரசு ஒப்பந்தங்களுக்கு இணங்கியது ஒப்பந்தங்களின் ஊடாக துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு கிலாபத் அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்தது இவர்களின் செல்வாக்குடன் துருக்கிய தேசியவாதம் என்ற குறுந் தேசிய விஷம் முஸ்லிம் சமுகத்திற்குள் புகுந்தது.
துருக்கி நிர்வாகத்திற்குள் புகுந்த இவர்கள் 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபையில் கலீபா இரண்டாவது அப்துல் ஹமீது என்பவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானம் ஒன்றை கொண்டுவர அழுத்தங்களை பிரயோகித்தனர் ஏற்கனவே பல வெளிநாட்டு கிலாபத்தின் எதிரிகளின் படை எடுப்பால் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுகொண்டிருந்த கிலாபத், மேற்கு வெளிநாட்டு முகவர்களின் உள்நாட்டு சதிகளால் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றபட்டார் இந்த தீர்மானத்தை கொண்டுவர பிரதான காரணமாக அமைந்தவர்கள் மேற்கின் உருவாக்கமான துருக்கி தேசிய வாலிபர் அமைப்புத்தான் இந்த அமைப்பில் யூதர்கள் பலர் அதன் நிர்வாக பிரிவில் இருந்தார்கள் என்பது குறிபிடதக்கது .
1901 இல் கலீபா அப்துல் ஹமீதின் கிலாபத்தின் போது யூதர்கள் பொருளாதார பலத்தை பண்படுத்தி பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து கட்டளை வெளியிட்டார் . சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்ததை கண்ட யூதர்கள் தமது யூதர்களின் பலம் பொருந்திய குழு ஒன்றின் ஊடாக கலீபா அப்துல் ஹமீதை சந்திக்க முற்பட்டனர் ஆனால் அவர்களை கலீபா சந்திக்க மறுத்து விட்டார் எனிலும் இவர்கள் தமது கோரிக்கையை வேறு வழியில் முன்வைத்தனர் இதன் படி குறித்த சட்டத்தை விலக்கிக் கொண்டு ஜெருசலத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்தால் சாம்ராஜியத்தின் அத்தனை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் வட்டி இன்றி பொருளாதார உதவிகளை அளிப்பதாகவும் கூறினர் அதற்கு கலீபாவின் பதில் இவ்வாறு இருந்தது ‘பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் தேசம் கலீபா உமர் காலத்தில் இருந்து முஸ்லிம்களின் பரம்பரை தேசம் . இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதி சிந்தி இருக்கிறது . பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் சதையின் ஒரு பகுதியை வெட்டி கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை கட்டளை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது’ என்று தெளிவாக சொன்னார்கள்.
இந்த சம்பவம் யூதர்களுக்கு மேலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக மேற்குடன் சதி நாச வேலைகளை செய்யவும் மேற்கு இவர்களை பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்தது என்று குறிபிடலாம் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றப்பட்டார் இந்த தீர்மானத்தை கலீபா முன் சென்று நான்கு நபர்கள் வாசித்தனர் இவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்ற இருவரில் ஒருவர் எமானுவேல் கரசா என்ற யூதன் இந்த கட்டம் மிக தெளிவாக மேற்கினதும் யூதர்களினதும் சதியை காட்டுகின்றது இது யூதர்களின் பலி வாங்கும் சந்தர்பமாக இருந்தது கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் பிரிட்டன் அதிபர் பெல்பௌர்- belfour- 1917 ஆம் ஆண்டில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க பிரிட்டன் ஆயத்தங்களை செய்வதாக பிரகடனபடுத்தினார் என்பது குறிபிடதக்கது இது யூதர்கள் இஸ்லாமிய சாம்ராஜியத்தை அழிக்க உதவியதற்கு நன்றிகடனாக இருக்கலாம்.
27 ஏப்ரல் 1909 ஆம் ஆண்டில் கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு தனது பிடியை படிப்படியாக இருக்க தொடங்கியது 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபை அப்துல் மஜீத் என்ற கலீபாவை 1922 இல் நியமித்தது இவர்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இறுதி கலிபாவாக பார்க்கப்படுகின்றார் முஸ்தபா கமால் என்ற மேற்கின் பொம்மை துருக்கி நாட்டின் அதிகாரத்தினை கையில் எடுத்தவுடன் மிகவும் வேகமாக கிலாபத் அழிப்பை தொடங்கியது , 1924 கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்டார் இறுதியாக இருந்த கிலாபத்தின் எச்சசொச்சங்கள்   3.3.1924 உலகில் இருந்து அகற்றபட்டது கிலாபத் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதே நாள் கலீபா குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் 3.3.1924 அன்று மேற்கின் சதிநாச வேலைகளால் கிலாபத் அழிக்கப்பட்ட பின்னர் அன்றைய பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலாளர் லோர்ட் குர்சொன் – Lord Curzon- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இப்படி கூறினான் “இந்த விவகாரத்தில் முக்கிய விடையம் என்னவென்றால் துருக்கி அழிக்கபட்டுகொண்டிருகின்றது அது மீண்டும் ஒரு போதும் எழுச்சி பெறாது காரணம் துருக்கியின் ஆத்மாத்த பலமான கிலாபத்தையும் , இஸ்லாத்தையும் நாம் அழித்து விட்டோம்” என்றான்.
கிலாபதின் இறுதி அழிப்புபை செய்தவன் முஸ்தபா கமால் என்ற துரோகி இவன் வெறும் கிலாபத் அழிப்புபை மட்டும் செய்யவில்லை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய சந்ததியை இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்க வைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்து இஸ்லாத்தை மிகவும் அந்நியபடுத்த தேவையான மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டங்களை அமுல்படுத்தினான் என்று வரலாறு குற்றம் சாட்டுகின்றது .
கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் முஸ்தபா கமால் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை சட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வந்தான் நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகளை ஆரம்பித்தான் இதை எதிர்த்து கருத்து சொன்ன ஒரு புத்திஜீவியை தனது கை தடியால் அடித்து துரத்தியதுடன் அல்குர்ஆன் பிரதி ஒன்றாலும் அவர் மீது வீசி எறிந்தான் அரபு மொழியை முழு அளவில் தடை செய்தான் , அரபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக அறிவித்தான் , அரபு மொழியில் பாங்கு சொல்வதை தடை செய்தான் இஸ்லாமிய உடையை தடை செய்தான் , எதிர்க்கும் மனிதர்களை , கொலை செய்தான் சிறையில் அடைத்தான், நாடு கடத்தினான் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல்வதை தடை செய்தான் அல்லாஹ் என்று சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல்லை அறிமுகபடுத்தினான் அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலரை சிறையில் அடைத்தான் ஒரு சமயம் மஸ்ஜிதின் மினாரா ஒன்றில் இருந்து வந்த பாங்கு தனது இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தாதாக கூறி அந்த மஸ்ஜிதின் மினாராவை இடித்து தகர்த்தான்.
அரபு எழுத்துகளை பாவிப்பதை தடை செய்தான் , ஒரு தடவை தான்தான் இறைவன் என்று கூட கூறினான் முஸ்லிம் பெண்களை ஐரோப்பிய வெறியர்கள் முன் நிர்வாணமாக ஆடவிட்டு ரசித்தான் பெண்களை காம நடன நங்கைகளாக உருவாக்க பாடசாலைகளை உருவாக்கினான் மேற்கு காமநடன ஆசான்கள் இவர்களுக்கு கற்பித்தனர் பால் கவர்ச்சியை தூண்டும் உடைகளை உடுத்தவும் தைக்கவும் மேற்கு ஆசான்கள் கொண்டுவரபட்டனர் இஸ்லாத்துக்கும் அடுத்த சந்ததிக்கும் உள்ள அணைத்து தொடர்பு களையும் மேற்கின் உதவியுடன் துண்டித்தான் ஒரு தடவை இவன் தனது இராணுவ சிப்பாயை பார்த்து who is God where does he live ? இறைவன் யார் அவன் எங்கு இருக்கின்றான் என்று கேட்டான் அதற்கு அந்த இராணுவ சிப்பாய் முஸ்தபா கமால் பாஷா இறைவன் அவர் அங்கோர வில் இருக்கின்றார் என்று பதில் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது.
இங்கு கவனிக்க பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது முஸ்தபா கமால் பாஷா தான் அதிகாரத்துக்கு வரமுன்னர் ஐந்து வேலை தொழுபவனாக , நோன்பு நோற்பவனாக , ஹஜ் செய்பவனாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவனாகவும் இருந்தான் அதிகாரம் கைக்கு வந்தவுடன் நேர் மாறாக மாறினான் இந்த சடுதியான மாற்றம் இவனின் உண்மையான உருவத்தை வெளிக்காட்டியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இவன் இஸ்லாத்தை தழுவியவர்கள் போல் நடித்த அல்லது இஸ்லாத்தில் சில பகுதிகளையும் யூத மதத்தில் சில பகுதிகளையும் பின் பற்றும் ஒரு யூத கோத்திரம் ஒன்றை சார்ந்தவன் இவனில் கோத்திரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த சலோனிக்க Salonika என்ற தேசத்தை சேர்ந்தது இவர்களில் 1913 இல் 300 யூத குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் அவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் யூத மத வழிபாடுகளை தொடர்ந்தும் செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது இவர்கள் முஸ்லிம்களால் திம்மிகள் Doemeh-என்று அழைக்க பட்டதாகவும் , முஸ்லிமகள் போன்று இஸ்லாமிய கடமைகளில் முனைப்பாக இருந்ததாகவும் ஆனால் முஸ்லிம் பெண்களை இவர்கள் கண்டிப்பாக திருமணம் முடிக்க கூடாது என்ற யூத கொள்கையில் இருந்ததாகவும் வரலாறு கூறுகின்றது முஸ்தபா கமால் பாஷா மற்றும் நிதித் துறை அமைச்சராக அதிகாரத்தில் இருந்த ஜாவிட் பெய்யும் – Djavid Bey- இந்த யூத திம்மி – Doemeh-பிரிவை சார்ந்தவர்கள் என்பது வரலாறு இப் போது சில விடையங்கள் உறவு முறைகள் தெளிவாக தெரிகின்றது – The Secret Jews by Joachim Prinz 1973,pp. 111-122-
இது யூத சியோனிச வாதிகள் எப்போதும் மிகவும் கடமை உணர்வுடன் யூத தேசத்துக்காக இயங்கிகொண்டிருந்ததைதான் காட்டு கின்றது யூதர்கள் மேற்குலகுடன் இணைந்து தாம் நினைத்ததை சாதித்தார்கள் இன்றும் மேற்கு உலகின் சிந்தனையை தீர்மானிக்கும் சிந்தனை சாரதிகளாக உருவாகியுள்ளனர் நாம் கிலாபத்தை இழந்து ௮௬ வருடங்களை அடைந்தும் கிலாபத்துக்கு என்ன நடந்தது என்பதை பாடசாலையில் உயர்தர வகுப்பில் இஸ்லாமிய நாகரிகம் என்ற பாடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்படும் சம்பவங்களை பற்றி மட்டும் தெரிந்துகொண்டு இஸ்லாமிய கிலாபத் தின் வரலாற்றை தவறாக விளங்கி கொள்கின்றோம் அல்லது அவை எமக்கு எந்த உணர்வு பூர்வமான அறிவையும் தராமல் வெறும் சில தகவல்களை அதுவும் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மை பற்றிய செய்திகளை மட்டும் எமக்கு போதிக்கும் பாடமாக இருக்கிறது
கிலாபத் இன்றி முஸ்லிம்கள் சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் முஸ்லிம்கள் தொகையில் அதிகம் , வளத்தில் அதிகம் , பணத்தில் அதிகம் ஆனால் ஒரு தலைமைத்துவம் இன்றி சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் எங்கும் அடிவாங்கும் வரலாறு எதிலும் பின்னடைவு
உலக மக்கள் தொகையில், 19.2 வீதம் முஸ்லிம்கள் எனவும், 17.4 வீதம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வத்திகான் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
இன்று உலகில் யூதர்கள் 140 லட்சம் பேர் இந்தோனேசியாவில் மட்டும் முஸ்லிம்களின் தொகை 19 கோடி. இதுதான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு ,உலகில் முஸ்லிம்கள் தொகை 150 கோடிக்கு மேல்  உலக  அளவில் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறான் முஸ்லிம் நாடுகள் காம்பியாவில் இருந்து இந்தோனேசியா வரை 55 நாடுகள் உள்ளன
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) இந்த தகவலை தெரிவிப்பதாக ஒரு அறிக்கை குறிபிடுகின்றது
முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணை வளம் 74% வீதமாகும் இது முழு உலக எண்ணை உற்பதியின் வீதமாகும் இன்றைய நாளைய உலகை இயக்கும் பலம் என்று குறிபிடலாம் காஸ் எரிவாயு இது அமெரிக்க , ஐரோப்பா , சீனா போன்ற நாடுகளின் மொத்த வளத் தொகையுடன் ஒப்பிடும்போது 57% வீதமான காஸ் எரிவாயு முஸ்லிம் நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது தங்கம் விளையும் பூமியாக வும் 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பை கொண்ட நாடுகளாகவும் முஸ்லிம் நாடுகள்தான் இருக்கிறது இந்த 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பு அமெரிக்க , ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளை விடவும் முஸ்லிம் உம்மாஹ் விடம்தான் அதிகமான தங்கவளம் இருக்கிறது , இராணுவ துறையை எடுத்துகொண்டால் 47லட்சம் ஆயுத படை வீரர்கள் முஸ்லிம் நாடுகளில் இருகின்றார்கள் இது அமெரிக்க , ஐரோப்பா , இந்தியா போன்ற நாடுகளின் மொத்த ஆயுதப்படை வீரர்களை விடவும் மிகவும் அதிகமானது என்று ஒரு ஆவணம் குறிபிடுகின்றது இது சரியாக ஆராயப்படவேண்டியது எனிலும் ஒரு ஒப்பீட்டுக்கு இதை எடுத்துகொள்ள முடியும்.
ஆனால் எங்களிடம் இஸ்லாம் கடமையாக்கிய கிலாபத் இல்லை இதுதான் இன்றைய எமது பிரதான பலவீனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378-
கிலாபத் உதையமாகும் காலம் மிகவும் அண்மிப்பதை போல் உணர முடிகின்றது கிலாபத் மீண்டும் ஏற்படுத்த பட்ட வேண்டும் அது தான் முழு மனித சமுகதுக்குமான விடுதலையாக அமையும்.

நன்றி! நன்றி!! நன்றி!!!



அன்புடையீர்,




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நடந்து முடிந்த தமிழகம் & புதுவை சட்டமன்றத் தேர்தல்களில் SDPI

சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டது தாங்கள் அறிந்ததே.





கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இந்தத் தேர்தலைச் சந்தித்த SDPI, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.





அதுவும் தி.மு.க.வுக்கெதிரான கடுமையான எதிர்ப்பலையிலும் SDPIக்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று சிறிதும் நாங்கள் ஆதங்கப்படவில்லை. மாறாக, SDPIக்குக் கிடைத்த கணிசமான வாக்குகள் இன்னும் அதிகம் சமுதாயத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அது எங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்துள்ளது.





அல்லாஹ்வின் பேருதவியால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.





தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.



SDPIக்காக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், அதன் வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களுக்கும், அயராது உழைத்த கர்ம வீரர்களுக்கும், அனைத்து வகையிலும் SDPIக்கு ஆதரவளித்து, உதவிகள் பல புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.





ஜஸாக்கல்லாஹு ஃகைர்.





இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களிலும் SDPIக்கு உங்கள் உதவிகளையும், ஒத்துழைப்பையும், துஆவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.





மீண்டும் நன்றி.





வஸ்ஸலாம்.





இப்படிக்கு,





மாநிலத் தேர்தல் பணிக்குழு

SDPI

இரத்த சோகை

இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள mm 3 ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் குறைவாக இருத்தலே ஆகும். சாதாரணமாக ஆண்களுக்கு 5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 15 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும். பெண்களுக்கு 4.5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 14.5 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும்.




ஆனால் நம் நாட்டில் அனைவருக்கும் இப்படி உள்ளதா என்றால், அது முற்றிலும் தவறு. அப்படியானால் நாம் அனைவரும் இரத்த சோகை உள்ளவரா என்று கேள்வி நிச்சயம் எழும்.



நடைமுறையில் ஆண்,பெண் இருபாலருக்கும் சுமாராக 10.5 கிராம் முதல் 12 கிராம் வரை இருந்தாலே இவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குத்தான் இரத்த சோகையினால் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது எனினும் ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.



இரத்த சோகைக்கான காரணங்கள்:



1. இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவான உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல்.



2. உண்ட உணவில் உள்ள சத்து சரியான விகிதத்தில் உறிஞ்சப்படாமையும், மேலும் பயன்படுத்தப்படாமையும் காரணமாக இருக்கலாம்.



3. கிருமிகள் தொற்று (கீரைப்பூச்சி, நாக்குப்பூச்சி, நாடாப்பூச்சி) சிறுநீரின் தொற்று ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.



4, இரத்தப்போக்கு.



அ) பல நாள்பட்ட இரத்தப்போக்கு

1. பெண்களுக்கு மாதந்தோறும் 30 லிருந்து 50 மில்லி என்ற அளவில் இல்லாமல் அதிக அளவில் மாதவிடாய்.



2. மூலத்தினால் மலக்குடலில் இரத்தக்கசிவு (மூலவியாதி).



3. உணவுக் குடலில் இரத்தக்கசிவு (பெப்டிக்அல்சர்,இரத்தக்கசிவு).



ஆ) திடீர் இரத்தப்போக்கு

1. பிரசவத்தின் போது (அ) கருக்கலைதலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு



2. விபத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு



3. அடிக்கடி மகப்பேறு மற்றும் பிறப்பிற்கு பின் குறைவான கால இடைவெளியில்



இரத்த சோகை உடையவரின் தோற்றம்:



பார்ப்பதற்கு அழகாக மஞ்சள் பூத்த முகத்துடனோ, அழகான உப்பிய முகத்துடனோ, வறண்ட மெலிந்த செம்பட்டையான தலைமுடியோடோ, வற்றிய வறண்ட கன்னத்தோடும், குழி விழுந்த கண்களோடும், கருவளையத்தோடும், பட்டாம்பூச்சி போன்ற படர் முகத்தோடும், சோர்ந்தும், நாவில் பல வண்ணமும், பலவித கோலங்களும், வெளுத்தும், படபடக்கும் நெஞ்சத்தோடும் மூச்சிரைப்போடும், மெலிந்த கரத்தோடு, உப்பிய வயிறு, ஊதிய கால்கள், அழகற்ற நொடிந்து போகக்கூடிய வளைவுகள் மிகுந்த குழிவான நகத்தோடு காணப்படுவர்.



ஒரு சிலர் சாதாரணமாகவே நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் இருப்பதும். அதுவே அதிக அளவில் இரத்த சோகை காணப்பட்டால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பசியின்மை, சோர்வு, வழக்கமாக செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படும்.



சிறு குழந்தை முதல் பெரியவர் வரை இரத்த சோகையை எப்படி கண்டறிவது என மேற்கூறிய அறிகுறிகளை விட்டுவிட்டு வேறெங்கும் நாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை.



சிறு குழந்தை ஒடிவிளையாடாமல் சோர்ந்த முகத்தோடு சூம்பி அமர்ந்து மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்தோடு கவனித்து கொண்டிருக்கும். அதிகளவில் தூக்கம், உணவு உட்கொள்ளாமல் சூம்பிய கை கால்களுடன் வயிறு மட்டும் வீங்கிக் காணப்படும். உணவு உட்கொண்ட உடனே மலம் கழிக்க ஓடுகையில் கண்கூடாக பூச்சிகள் வயிற்றிலிருந்து வெளியேறுவதைக் காணலாம்.



அதே சற்று வளர்ந்த குழந்தை படிப்பில் நாட்டமின்மை, எந்த வகையான போட்டியாக இருந்தாலும் தனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒதுங்கிவிடுதல், எளிதில் சோர்ந்து காணப்படுதல்.



வளரிளம் பருவத்தினராகிய பெண்கள் பூப்படைவதில் தாமதம் அல்லது மாதவிடாய்க் கோளாறு, அதுவே ஆண்களாக இருந்தால் துள்ளித்திரியும் இவ்வயதில் சோர்ந்து காணுதல் மேலும் படிப்பிலும், தான் செய்யும் வேலையிலும் ஆர்வமின்றி காணப்படுவர்.



இரத்த சோகை பாதிக்கப்பட்ட மகளிருக்கு பிறக்கும் குழந்தை சவலக்குழந்தையாக, எடைகுறைவாக(3 கிலோவுக்கும் குறைவாக) பலகீனமான குழந்தையாக பிறக்க வாய்ப்புள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு (மண்டை ஒடு அற்ற நீர்க்குடம் போன்ற முதுகெலும்பில் விண்ணம்) ஏற்பட வாய்ப்புள்ளது.



தாய்மார்களின் இறப்பு 20 விழுக்காடு நேரிடையாகவும், மேலும் 20 விழுக்காடு மறைமுகமாகவும் ஏற்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு பிறக்கும் குழுந்தைகளின் இறப்பு விகிதமும் கணிசமாக காணப்படுகிறது.



ஆண்களோ தன் உடல்நிலை பாதிப்பால் குடும்பத்தை சரிவர பராமரிக்க இயலாத நிலையும் இதனால் குடும்பத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே படும் பல அவலங்களும் கண்கூடு.



இவற்றை தடுப்பது எப்படி? ஆதலால் 12வயது வரும்போதே நம் இளம் சிறார்கள் 12/12 என்ற விகிதத்தில் அதாவது 12வயது உடையவர் 12 கிராம் ஹீமோகுளோபின் இருப்பதற்கு நம்மால் ஆவன செய்ய வேண்டும். முதலில் நம் நாட்டில் உள்ள எளிமையான, உன்னதமான உணவை உட்கொண்டாலே போதும்.



அதற்கு சத்தான உணவு உட்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.



என்ன உணவு?



இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12



போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி. கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்



தானிய வகைகள்: கேழ்வரகு, கொள்ளு, சாமை, பொட்டுக் கடலை, சோயா பீன்ஸ் மற்றும் பட்டாணி.



கீரை வகைகள்: முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, மற்றும் மணத்தக்காளி கீரை.



காய் வகைகள்: பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.



கனி வகைகள்: பேரீட்சை, உலர்ந்த திராட்சை, சீத்தாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளை, தர்பூசணி, வெல்லம்.



அசைவ உணவு: ஈரல், இறைச்சி, முட்டை, மீன், இறால்.



இரும்பு பாத்திரங்களில் சமைத்தல் என்பது மிக முக்கியமானதாகும். மேலும், மலம் கழிக்கும் முன்னும், பின்னும் கை கழுவுதல், எங்கும் செருப்பு அணிந்து செல்லுதல் என்பதும் முக்கியமானதாகும். மேற்கூறியவை அனைத்தும் இரத்த சோகை வராமல் தடுக்க நாம் பின்பற்ற வேண்டும்.இரத்த சோகையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்த சோகைக்கான காரணங்களை கண்டறிந்து இரத்த சோகையின் வீரியத்திற்கு தகுந்தாற்போல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.



மிதமான இரத்த சோகை இரும்புச் சத்து மாத்திரைகள், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் சத்தான உணவுஅதிகமான இரத்த சோகை ஊசி மூலம் இரும்புச் சத்து செலுத்துதல், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்தான உணவுமிக அதிகமான இரத்த சோகை தீவிர தொடர் கவனிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு இரத்தம் ஏற்றுதல் அல்லது சமமான மாற்று சிகிச்சை மேற்கூறியபடி செயல்பட்டு இரத்த சோகையற்ற திடமான,வளமான, இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
  

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.


 

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.



அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.



கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.



இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.



அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.



மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.



மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!



பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.



• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.



• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.



• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.



• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.



• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.



• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.



• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.



• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.



• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.



• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.



• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.



• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.



• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.



• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.



• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.



• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?

Thursday, 19 May 2011

சொந்தமாக வக்கீல் வைக்க வசதியில்லாதவர்களுக்கு...

எந்த வழக்காக இருந்தாலும் சொந்தமாக நடத்த வசதி இல்லாதவர்களுக்காக அரசாங்கம் ‘லீகல் எய்டு செல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருப்பார்கள். வசதி இல்லாதவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வெற்றித்தேடித் தருவார்கள். சென்னையில் வசிப்பவராக இருந்தால் ‘செகரட்டரி, லீகல் எய்டு செல், உயர்நீதிமன்றம் சென்னை-1’ என்ற முகவரிக்கும், வெளியூரில் வசித்தால் செகரட்டரி, லீகல் எய்டு செல், மாவட்ட நீதிமன்றமென்ற முகவரிக்கும் கடிதம் எழுதுங்கள். செகரட்டரி உங்களை அழைத்து விசாரிப்பார். வழக்கு நியாமானது; வசதி இல்லாதவர் என்று தெரிந்தால் அவரே வக்கீல் ஏற்பாடு செய்வார். செலவுகளை ‘லீகல் எய்டு செல்’ ஏற்றுக்கொள்ளும்.



ஊழல் குறித்த தகவல் கொடுப்போரை பாதுகாக்கும் சட்டம், நடைமுறையில் ஊழலை தடுக்குமா?

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஊழல்களில் சுமாராக எவ்வளது தொகை புரளும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?




ஒரு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் ஊழல்களில் கையாளப்படும் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டதாக ஒரு அண்மை புள்ளிவிவரம் கூறுகிறது!

எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் அல்ல. எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறவில்லை என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும்.


கல்வி உரிமைச் சட்டமும் விதிகளும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் சமூக அவலங்களைக் கதைப் பொருளாகக் கொண்டு தனது படைப்புகளை அமைத்தார். அவர் எழுதிய பிரபல நாவல்களான (Oliver Twist, Dotheboys' Hall, David Copperfield) ஆகியவை குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்கொடுமைகளை விவரித்தன. அந்நாட்டு மக்களது மனசாட்சி உறுத்திட குழந்தைகள் சார்பான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்று 1870ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டம். அதனையட்டி, இந்திய நாட்டிலும் தலைவர்கள் கட்டாயக் கல்வி கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆங்கில அரசு அவற்றையேற்க மறுத்தது. இருந்தபோதிலும் பரோடா, திருவாங்கூர் போன்ற சில சமஸ்தானங்கள் தங்கள் பகுதியில் கட்டாயக் கல்விக்கு ஏற்பாடு செய்தனர்.




விடுதலை வீரர் வித்தல்பாய் பட்டேல் அன்றைய பம்பாய் நகரத்தில் 1917ஆம் ஆண்டு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாகாணங்கள் பலவும் சட்டங்கள் இயற்றினர். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் ஆரம்பக் கல்விச் சட்டத்தை 1920ஆம் ஆண்டில் நிறைவேற்றி செயல்படுத்தத் தொடங்கியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஆனால் கல்வி இலவசமல்ல. கட்டணம் கட்ட இயலாதவர் பெரும்பான்மையோர் ஆனதால் கல்வி பரவலாக அனைத்து மக்களையும் சென்று அடையவில்லை. விடுதலை இயக்கத்தில் இலவசக் கட்டாயக் கல்வி ஒரு முக்கிய இடம் கொண்டிருந்தது. விடுதலை பெற்ற பின்னர் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையின் நகல் சட்டத்தில் இலவச, கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இடம் பெற்றது. ஆனால் நிதி, பிற ஆதாரங்கள் போதாமையை காரணம் கட்டி அதனை அரசியல் சட்டத்தின் நெறிக் கொள்கைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பத்தாண்டுகட்குள் அடையப் பெற வேண்டிய இலக்காக அறிவிக்கப்பட்டது. குடியரசாக 1950இல் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரையில் கல்வி அனைவருக்கும் வழங்கப்படாது உள்ளது.



அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் உண்ணிக்கிருஷ்ணன் வழக்கில் கண்ணியமான வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என்று கூறி பதினான்கு வயது வரையில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தது . இதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் 2005ஆம் ஆண்டில் ஷரத்து 21ஏ என்ற புதிய ஷரத்தை நாடாளுமன்றம் இயற்றியது. கல்வியை அரசு நிர்ணயித்த வண்ணம் வழங்க வகை செய்ததால் இது ஒரு நிபந்தனைக்குட்பட்ட உரிமையாகவே அமைந்துள்ளது முழு உரிமையல்ல என்பது ஆளும் வர்க்கத்தினருக்கு ஏழை எளியவர்க்குக் கல்வி அளிக்க தயங்குவதைப் பார்க்கலாம். நமது அரசியல் சட்டத்தில் நிபந்தனைக்குட்பட்ட உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி உரிமை ஒன்றே என்பது வெட்கக்கேடு. கல்வி உரிமைச் சட்டத்தில் நிறைகள் சில, குறைகள் பல. சட்டம் இயற்றியவர்களுக்கு இந்திய கிராமப் புறங்களைப் பற்றிய புரிதல் மிகக் குறைவு என்பது புலப்படுகின்றது.



ஆனால் இதனைத் தொடக்கமாகக் கொண்டு சீரிய மாற்றங்களைக் கொணர முற்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் பணக்கார இந்தியா, ஏழை இந்தியா ஆக இரு வகை இந்தியாக்களை அங்கீகரித்துள்ளது. பள்ளிகளில் இவ்வேறுபாடுகளை ஏற்படுத்தி பாகுபாடுகளை நிரந்தரப்படுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தானது. பள்ளிகள் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு பயிற்சி நிலையம் என்ற கோட்பாடு காற்றில் விடப்பட்டுள்ளது. கட்டணப் பள்ளிகள் அருகில் உள்ள நலிந்தவர்க்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் என்பது சமத்துவத்தை உருவாக்காது. அவ்விலவச இடங்களுக்கானத் தொகையை அரசு அந்நிறுவனங்களுக்கு வழங்கும் என்பது மக்கள் பணத்தை கல்வி வணிகர்களுக்கு வாரிவழங்குவதாகும் தொழில் நிறுவனங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டும் என்பது சட்டம். ஆனால் கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்படாது, அவற்றை வெளியிடவும் இடமில்லை.



இக்குறை நீக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் வரவு செலவு அறிக்கையை வெளியிட வகை செய்தல் வேண்டும். உண்மையில் சட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக எவ்விதத் தடங்கலும் ஏற்படாதிருக்க நடுவணரசு மாநிலங்களுக்கு போதுமான நிதி வழங்கிட வேண்டும். இது குறித்து நிதிக் கமிஷனிடம் முறையீடு செய்ய வேண்டுமென்று சட்டம் கூறிய பொழுதும் இன்று வரை நடுவணரசு எம்முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் பல மாநிலங்கள் தங்களால் கூடுதல் நிதி ஒதுக்கிட இயலாதென்பதால் நடுவணரசு நிதி அளிக்கும் வரை சட்டத்தை அமல் செய்ய மாட்டோம் என்று சொல்வதும் சட்டம் வந்தும் பயனேதும் இல்லை என்பதே நிலை.



இயன்றவரை தாய்மொழிவழியில் கல்வி அளிக்க வேண்டுமென்று சட்டம் கூறுகையில் தாய்மொழிவழிக் கல்வியினின்று யார் விலக்கு பெறுவார்கள், அவர்கள் வட்டார மொழியில் கற்பார்களா அல்லது அயல் மொழிவழியில் கல்வி பெறவே இந்த விதித் தளர்ச்சி இடம் பெற்றுள்ளதோ என்பது தெளிவாக்கப்பட வேண்டும் சட்டம் பல பொறுப்புகளை உள்ளூர் பஞ் சாயத்துகளுக்குக் கொடுத்துள்ளது. ஆனால் அவை எவ்வாறு அப்பணிகளை மேற்கொள்ள முடியும் என் பதைப் பற்றி சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு நகல்விதிகளில் பஞ்சாயத்துகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அரசு அதிகாரிகளிடம் அனைத்துப் பொறுப்புகளையும் அளித்துள்ளது மக்கள் சக்திக்கு விரோதமானதாகும்.



சுருங்கக்கூறின் சட்டம் எளியவர்க்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நிறைய மாறுதல்கள் தேவைப்படும். அதற்கு வேண்டிய அரசியல் உறுதி இன்றைய ஆளும் கட்சிக்கு இல்லாததால் மக்கள் விழித்தெழுந்து போராடத் தயாராக வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன சிறுமி தமன்னா மீட்பு (அல்ஹம்துலில்லாஹ்)

சென்னை, மே.19-  
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சையது நூர் முகமது. இவர் அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்து உள்ளார். இவருடைய மனைவி ஹசீனா. இவர்களுக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் தமன்னா, ரிகாத் உள்ளனர். கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹசீனா மெரினா கடற்கரைக்கு சென்றார். அப்போது சிறுமி தமன்னா கடற்கரை கூட்டத்தில் மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமி தமன்னா இன்று மீட்கப்பட்டார். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட வருடங்களுக்கு பிறகு !!!

முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சாலைகள் புதுபிக்கபட்டுள்ளன ......
ஜாமியா பள்ளி சந்து 


ஜெஸிமா டிராவல்ஸ் எதிர்புறம் 


பெரியகடை தெரு 


பெரியகடை தெரு 


இஸ்லாத்தை அறிவோம் - பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் பயிற்சி முகாம்


காரைக்கால்: இன்றைய முஸ்லிம் சமூகத்தில் சீர்கேடுகள் மிகைத்து கிடக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் இஸ்லாம் சம்பந்தமான பயிற்சி முகாம்களை நடத்த இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற 22.05.2011 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 4.30மணி அளவில் ஷமீரா மஹால், காமராஜர் சாலை, காரைக்காலில் "இஸ்லாத்தை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு முழுமையான இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற இருக்கின்றது.

இந்த பயிற்ச்சி முகாமில் கீழ் கண்ட முக்கிய விஷயங்களைப்பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கின்றன.

1. இஸ்லாம் காட்டித்தந்த முழுமையான வாழ்வியல் நெறியை நாம் எப்படி கடைபிடிப்பது?

2. இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை எப்படி அகற்றுவது?

3. ஒரு முழுமையான இஸ்லாமிய குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது?

4. தனி மனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம் போன்ற நல்ல தலைப்புகளில் இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

ஆகவே ஆண்களும், பெண்களும், பெருதிரளாக கலந்து கொண்டு சமூகத்தின் மாற்றத்திற்காக இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காரைக்கால் மாவட்டம்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்துதரப்பட இருக்கின்றது.

அன்போடு அழைக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காரைக்கால் மாவட்டம்,  தொடர்புக்கு:  99949 46364



நன்றி : ஹார்பார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளை....

அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!



May 19, நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.
அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்? கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He,) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

சீன முஸ்லிம்கள் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள். இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் 8 கோடியில் இருந்து 10 கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

அதிசயம் : ஒரே மேடையில் பரத்வாஜ் - எடியூரப்பா




பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர் பரத்வாஜ் - எடியூரப்பா. மோதல் நீடிக்கும் நிலையில் பரத்வாஜ் - எடியூரப்பா ஒரே மேடையில் தோன்றினர்.    

விழாவுக்கு வந்த ஆளுநரை வாயிலுக்கே சென்று வரவெற்றார் முதல்வர் எடியூரப்பா.    விழாவில்
எடியூரப்பாவை புகழ்ந்து பேசி திகைப்பில் ஆழ்த்தினார் ஆளுநர் பரத்வாஜ்    


எடியூரப்பா தமது சிறந்த நண்பர் என்றும்,  விழாவில் ஆளுநர் பரத்வாஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.




பரத்வாஜூக்கும் எடியூரப்பாவிற்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்கர்நாடக கவர்னரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுட்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றியிருப்பது அதிசம் என்று வியக்கிறார்கள் கர்நாடகமக்கள்.

25 காசுக்கு டாட்டா பை பை!!



MAY 19 டெல்லி , 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்: சின்னத்தை இழக்கிறது பா.ம.க.,


சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.

Wednesday, 18 May 2011

மெரீனா கடற்கரையில் மாயமான 5 வயது சிறுமி கதி என்ன?; ஒருவாரம் ஆகியும் கிடைக்காததால் பெற்றோர் கண்ணீர்!!

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். இவரது மனைவி ஹசீனா. இவர்களது 5 வயது இரட்டை குழந்தைகள் தம்மன்னா, ரிகாத்.

கடந்த 11-ந்தேதி குழந்தைகளுடன் பெற்றோர் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். அங்கு உழைப்பாளர் சிலை அருகே சிறுமியும், சிறுவனும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி தம்மன்னா மாயமாகி விட்டாள்.

பெற்றோர் பதறியடித்தவாறு கடற்கரை முழுவதும் தேடினார்கள். அதன் பிறகு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிறுமி மாயமாகி ஒரு வாரம் ஆகியும் கதி என்ன என்று தெரியவில்லை. சிறுமியை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி மட்டுமே தெரியும். குழந்தையை காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.

அவர்கள் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 11-ந்தேதி சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் பஞ்சு மிட்டாய் வேண்டும் என்று கேட்டதால் காசு கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தோம்.

சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். அப்போது காசு குறைவாக இருந்ததால் தம்மன்னா அங்கேயே நின்று கொண்டு ரிகாத்தை காசு வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாள்.

ரிகாத் திரும்ப சென்றபோது தம்மன்னாவை காணவில்லை என்று சொன்னான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்தப்பகுதி முழுவதும் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டோம். அவர் குழந்தையை கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

போலீசார் என் மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களும் தகவல் தெரிந்தால் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

நேட்டோ ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் படை மீது தாக்குதல் !




    ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஆப்கான் எல்லையை கடந்து பாகிஸ்தான் வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இரண்டு பாகிஸ்தான் எல்லை படைவீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவம் உடனடியான சந்திப்பு ஒன்றுக்கு நேட்டோ தரப்பை அழைத்துள்ளதுடன்  கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் வசறிஸ்தான் பகுதிக்குள் வழமை போன்று அத்துமீறியுள்ளது இதன் போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் ஹெலிகொப்டர்கள் நோக்கி சுடப்பட்டுள்ளது அந்த தாக்குதலுக்கு நேட்டோ ஹெலிகொப்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்க  விரிவாக
மற்றும் ஒரு செய்தி முதல் தாக்குதலை நேட்டோ ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் வான்பரப்பில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நேட்டோ ஹெலிகொப்டர்கள் பறந்ததாகவும் தெரிவிக்கின்றது, கடந்த திங்கள் கிழமையும் அமெரிக்க உளவு விமானங்கள் பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசியது இதன்போது 12 போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயமடைந்தும் இருந்தனர் இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைகளின் விநியோக பாதையை தற்காலிகமாக மூடியது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சற்று சூடான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது கடந்த கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றம் அமெரிக்காவின் பாகிஸ்தான் மண்ணில் மீதான அறிவிக்கபடாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடரும் இந்த கருத்து முறுகலை தணிக்க ராஜதந்திரிகள் இரு நாடுகளுக்கிடையில் பறந்தனர் இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மக்களிடம் இந்த சம்பவங்கள் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகின்றது பாகிஸ்தான் எதிர் கட்சிகள் கடுமையான தமது எதிர்ப்பை காட்டி வருகின்றது முழுமையாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பாகிஸ்தான் நிர்வாகமும், இராணுவ தலைமையும் பாகிஸ்தான்  மக்களை திசை திருப்ப நாடகம் ஆடிவருவதாக விமர்சிக்கப்படுகின்றது.

50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கிடு வழங்கியது ஜாமியா மில்லியா

Jamia_Millia_Islamia
புதுடில்லி:சிறுபான்மையின கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் (JMI) நிர்வாகம்,வருகிற கல்வியாண்டு முதல் 50 சதவிகிதம் இடஒதுக்கிட்டை அனைத்து துறையிலும் இடஒதுக்கிடு வழங்க முடிவு செய்துள்ளது.
 இந்தியவிலேயே ஒரே சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா உள் இடஒதுக்கிடாக 10 சதவிகிதம் முஸ்லிம் பென்களுக்கும்,10 சதவிகிதம் முஸ்லிம் ஒ.பி.சி மற்றும் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
 பல்கலைகழகம் அனுப்பிய சுற்றறிகையில் 42 சதவிகிதம் பொதுவாகவும் மீதி 3 சதவிகிதம் உடல் ஊனமுற்றோருக்கும் வழங்கும். இதற்கு முன்னதாக 25 சதவிகிதம் ஜாமியா பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கொடுத்து கொண்டுள்ளதை தற்போது அதை 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.மேலும் 5 வருடம் அப்ப்ள்ளியிலேயே படித்து இருக்க வேண்டும்.
 ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்கள்,www.jamia.ac.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்து அவர்களுடைய பிரிவை நிரப்பி மறுபடியும் கொடுக்க வேண்டும் என பல்கலைகழக செய்தி தொடர்பாளார் தெரிவித்தார்.
 பிப் 22 சிறுபான்மை கல்வி நிறுவனம் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சிறுபான்மை பல்கலைகழகமாக அங்கீகரித்ததும் இவ் இடஒதுக்கிடு அமல் படுத்தபடுகிறது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.

மன ஊனமில்லா மணமகன் தேவை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


மன ஊனமில்லா மணமகன் தேவை




‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)



வல்ல அல்லாஹ் மணமகளுக்கு மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல, நீ கொடுக்க வேண்டிய மஹரை பெண்ணான என்னிடம் கேட்க, நீ கேட்ட மஹரை கொடுக்க என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில் தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த உன் தாயும், உன் சகோதரியும் பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்?  என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன் வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார் நீங்கள் தெளிவாக சொன்னால்தான் அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம், பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து ஒரு வருட விதவிதமான சீர், நகை பின் எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய? எத்தனை பேருக்கு பசியாற தருவிய? (சாப்பாட்டையே பார்க்காத மாதிரி) மனை உள்ளது வீட்டை கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்) என் குடும்ப சூழ்நிலையில் இந்த சம்பந்தம் அமையுமா?
மணமேடையில் அமருவோமா? என்று மனதுக்குள் அழ! என் தந்தையோ நோயின் வாசல்படியை தட்ட நானோ வீட்டின் நிலைப்படியில்! எத்தனையோ பேர் என்னை பெண் பார்த்து சென்ற பிறகும் இன்னும் முதிர் கன்னியாக உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை! ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க வந்தவர்களில் சிலர் என் பையன் சிகப்பு பெண்தான் பார்க்க சொல்கிறான் பெண் கருப்புதான் இருந்தாலும் நாங்கள் கேட்பதை (வரதட்சனையை) தந்து விட்டால் என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்! பணம் படைத்தவர்களின் கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து கருப்பு நிற பெண்களை கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன் ஜமாத்தில் லட்டர் வாங்கி ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம் என்று முகம் தெரியா ஊரில் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது உதவி செய்யுங்கள் என்று துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன் கோபம் வரவில்லையா? என்ன செய்தாய் நீ? என் தாய் தந்தை மனம் கோணாமல் நடப்பேன் என்றாய்! இளைஞனே திருமணம் முடிக்கும் நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில் மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால் இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண பேச்சு வார்த்தையில் மட்டும் என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்! இளைஞனே உன் தெருவில் திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க நீயோ பணம் படைத்த வீட்டில் பெண்ணை தேட! அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு வேற வழி இல்லை என்று பிறமத பையனோடு ஓட! இப்பொழு வருகிறது உனக்கு கோபம் என் தெரு பெண்எப்படி ஓடலாம்! அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும் உன்னை போன்றவர்களும் காரணம் இல்லையா? முகமூடி திருடன் இரவில் திருடுகிறான் நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை! மறுமை பயமும் இல்லை உனக்கு! மணமகனே நான் உன்னிடம் கேட்கிறேன் நீ என்ன மஹர் தருவாய் எனக்கு - எதற்காக என்கிறாயா? உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் சேவை செய்வதற்கும்! குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக! உன் பிள்ளையை பெற்று தந்தவுடன் நானும் தகப்பன் என்று பெருமிதம் அடைவதற்காக! என் தாய் தந்தையை என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை நான் வாழ்ந்த இடத்தையே விட்டு விட்டு நீ  காட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்? இளைஞர்களே! இன்னுமா உறக்கம்?  உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும் விழித்தெழுங்கள்! இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம் நாளை மஹ்ஷர் பெருவெளியில் இறுதி தீர்ப்பின் நாளின் அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வாய் தாய் தந்தையை கை காட்டுவாயா? முடியாது இளைஞர்களே! நீங்கள் மட்டும்தான் உங்களின் காரியத்திற்கு பதில் சொல்வீர்கள் வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும் இந்த வரதட்சனை என்னும் கொடுமையை அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்! இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.



இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! 

நன்றி: ஹார்பார் கிளை - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.